உலர் மிளகாய் உற்பத்தி பயிர்ச் செய்கை விவசாய அமைச்சரின் கண்காணிப்புக்கு உலர் மிளகாய் உற்பத்திக்கு பயன்படுத்துவதற்காக உத்தேசிக்கப்பட்ட மிளகாய் செய்கை பற்றிய கண்காணிப்பு சுற்றுலா விவசாய அமைச்சர் உட்பட விவசாய திணைக்களத்தின் உயர் அதிகாரிகளின் ஆதரவுடன் 2021.10.16 அன்று இடம்பெற்றது விவசாய அமைச்சின் விவசாய நவீனப்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ் உலர் மிளகாய் உற்பத்தி இடம்பெறும். பழைய தேயிலை நிலமொன்றை பயன்படுத்தி நடாத்திச்செல்லும் இந்த மிளகாய் தோட்டத்தின் வெற்றி தொடர்பாக இங்கு அமைச்சர் அவதானம் செலுத்தினார்.

சப்ரகமுவ விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சேதனப் பசளை தயாரிப்பு வேலைத்திட்டம் சப்ரகமுவ மாகாண விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சேதனப் பசளை உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு மற்றும் செயல்முறை பயிற்சியை வழங்கும் 1 நாள் பயிர்சி 2021.10.14ம் திகதி கேகாலை வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்றது. இங்கு கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய கிராம சேவகர் பிரிவுகள் அனைத்திலும் விவசாயிகளுக்காக ஒரே நாளில் இந்த பயிற்சியை வழங்கி சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தி தொடர்பாக செயல்முறை பயிற்சி … Continue reading சப்ரகமுவ விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சேதனப் பசளை தயாரிப்பு வேலைத்திட்டம்

விவசாய திணைக்களத்தின் முதல் இனக் கலப்பு மிளகாய் வர்க்கத்தின் விதை தயாரிப்பு விவசாய திணைக்களத்தினால் உருவாக்கப்பட்ட முதல் இனக்கலப்பு மிளகாய் வர்க்கமான MICH-1 விதை உற்பத்தி பற்றிய விடயங்களைபெறுவதற்காக விவசாய திணைக்களத்தின் வானொலி விவசாய ஒலிபரப்பு சேவையினால் 2021.08.05ம் திகதி அநுராதபுரம் இப்லோகாம பிரதேசத்தில் பாதுகாக்கப்பட்ட இல்லத்தினுள் பயிர்ச்செய்கை பார்வையிடப்பட்டது.

விவசாய திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் நாயகம் கடமைகளை பொறுப்பேற்றார் விவசாய அமைச்சர் கௌரவ மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களால் நியமனம் வழங்கப்பட்ட கலாநிதி அஜந்த த சில்வா அவர்கள் புதிய விவசாய பணிப்பாளர் நாயகமாக 2021.08.02ம் திகதி விவசாய திணைக்களத்தில் கடமைகளை பொறுப்பேற்றார்.