சப்ரகமுவ விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சேதனப் பசளை தயாரிப்பு வேலைத்திட்டம்

சப்ரகமுவ மாகாண விவசாய திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட சேதனப் பசளை உற்பத்தி பற்றிய விழிப்புணர்வு மற்றும் செயல்முறை பயிற்சியை வழங்கும் 1 நாள் பயிர்சி 2021.10.14ம் திகதி கேகாலை வரகாபொல பிரதேசத்தில் இடம்பெற்றது.

இங்கு கேகாலை பிரதேச செயலாளர் பிரிவுக்குரிய கிராம சேவகர் பிரிவுகள் அனைத்திலும் விவசாயிகளுக்காக ஒரே நாளில் இந்த பயிற்சியை வழங்கி சேதனப் பசளை மற்றும் சேதன பீடைநாசினி உற்பத்தி தொடர்பாக செயல்முறை பயிற்சி அளிக்கப்பட்டது.

இந் நிகழ்வுக்கு விவசாய திணைக்கள உத்தியோகத்தர்கள், விவசாய சேவை திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலாளர் உட்பட அவ் அலுவலக உத்தியோகத்தர்களும், பிரதேச கிராம அலுவலரும் பங்குபற்றினர்