SCPPC-Home – [tamil]

SCPPC - LOGO

விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் தாவர பாதுகாப்பு நிலையம், கன்னொறுவைக்கு வரவேற்கின்றோம்

தாவர மூல வளங்கள்

உணவு பாதுகாப்பு மற்றும் விவசாய உற்பத்தியை அதிகரிப்பதற்காக தாவர மரபணு வளங்களை ஆய்வு செய்தல், பாதுகாத்தல் முகாமைத்துவம் மற்றும் நிலையான பயன்பாடு மூலம் விவசாய ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை ஊக்குவித்தல்

விதை அத்தாட்சிப்படுத்தல்

விதை மற்றும் நடுகை பொருட்களை உயர் தரத்தில் பேணுவதற்கும், அவற்றின் மரபணு மற்றும் தூய்மையை பாதுகாப்பதற்கும் விதை, நடுகை பொருட்களை தாரளமாக கிடைக்கச் செய்தல்

தாவர தற்காப்பு மற்றும் பயிர் பாதுகாப்பு

தேசிய விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய தொழில்களின் வளர்ச்சிக்கு ஆரோக்கியமான தாவரங்கள் மற்றும் தாவர தயாரிப்புக்களின் சர்வதேச இயக்கத்தை எளிதாக்குதல் பயனாளர்களுக்கு நேயமான சூழல் பாதுகாப்பினை அடைய இலங்கை தாவரங்களில் பீடை முகாமைத்துவம்

பீடைநாசினிகள் கட்டுப்பாடு

பீடை நாசினிகளின் கட்டுப்பாட்டு சட்டம் 1980 இன் இல 33 இவை திருத்தங்களும் ஒழுங்குமுறைகளும் ஆகும். இச் சட்டம் தனிப்பட்ட தயாரிப்புக்களை பதிவு செய்வதன் மூலம் பீடை நாசினிகளை கட்டுப்படுத்தல், இறக்குமதி செய்தல், பொதி செய்தல், சுட்டியிடல், களஞ்சியப்படுத்தல், உருவாக்குதல்,கொண்டுசெல்லல், விற்பனை செய்தல் என்பவற்றையும் வழங்குகின்றது.

பணிக்கூற்று

விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் தாவர பாதுகாப்பு நிலையம்

விதை மற்றும் நடுகைப் பொருட்களின் தரக் கட்டுப்பாடு மூலம் தரமான தாவர மற்றும் உற்பத்திப் பொருட்களின் இறக்குமதி / ஏற்றுமதியை எளிதாக்குவதன் மூலம் விவசாய வளர்ச்சியை அடைதல். நாட்டிற்குள் ஆபத்தான பூச்சிகளைத் தடுப்பது, பூச்சிக்கொல்லிகளை ஒழுங்குபடுத்துதல், விவசாய பயிர்களின் மரபணு வளங்களைப் பாதுகாத்தல் விதை, தாவர பாதுகாப்பு மற்றும் பீடை நாசினிகள் சட்டங்களை கட்டுப்படுத்துதல் நாட்டின் விவசாயம் மற்றும் சூழலை பாதுகாப்பதன் மூலம் நாட்டின் உணவு பாதுகாப்பை உறுதி செய்தல்.

ஒழுங்குமுறை செயற்பாடுகள்

பின்வரும் சட்டங்களுடன் தொடர்புடைய ஒழுங்கு முறையான செயற்பாடுகள் விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் தாவர பாதுகாப்பு நிலையத்துடன் தொடர்புடையது.
  1. 1999 இன் 35 ம் இலக்க பயிர் பாதுகாப்புச் சட்டத்தின் படி விவசாயத்தை பாதுகாத்தல் மற்றும் சூழலுக்கு குறைந்த அளவு தீங்கு விளைவைக்கும் பீடை முகாமைத்துவ உத்திகளை மேம்படுத்தல்
  2. 1980 இன் 33 ம் இலக்க பீடை கட்டுபாட்டு சட்டத்தின் படி மனித் ஆரோக்கியத்திற்கும். சூழலுக்கும் குறைந்த ஆபத்துடன் உயர் தரமான பூச்சிக் கொல்லி கிடைப்பதை உறுதி செய்தல்
  3. 2003 இன் 22 ம் இலக்க விதைச் சட்டத்தின் படி விதை தொடர்புடைய தொழிலிற்கு தீங்கு விளைவிக்கும் முறைக்கேடுகளிலிருந்து விவசாயிகளையும், விதை கையாளுபவர்களையும் பாதுகாத்தல்.

உப அலகுகள்

விதை அத்தாட்சிப்படுத்தல் மற்றும் தாவர பாதுகாப்பு நிலையத்தின் கீழ் பின்வரும் ஐந்து உப அலகுகள் காணப்படுகின்றன.

அமைப்பு

பயனுள்ள இணைப்புக்கள்

விவசாய அமைச்சு

இலங்கை விவசாய ஆராய்ச்சி கொள்கைக்கான சபை (CARP)

அரசாங்க தகவல் நிலையம்                        மேலதிக இணைப்புக்களுக்காக …

 
  • முகவரி:  விதை அத்தாட்சிப்படுத்தல், தாவரப் பாதுகாப்பு நிலையம்,கன்னொறுவை, பேராதனை, இலங்கை.
  • மின்னஞ்சல் : scppc.doa@gmail.com
  • தொலைபேசி : +94   812 388044
  • தொலைநகல் : +94   812 388077
  • திங்கள் முதல் வெள்ளி வரை – காலை 8.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை ( சனி, ஞாயிறு கிழமைகளில் மூடப்பட்டிருக்கும்)