எம்மைப் பற்றி
விவசாயத் திணைக்களமானது கமத்தொழில் அமைச்சின் கீழ் செயற்பட்டு வருவதுடன், விவசாய அறிவியலாளர்களைக் கொண்ட உயர் சமூகம் ஒன்றினையும் மற்றும் நாடு பூராகவும் பல்வேறு விவசாயச் சூழல் வலயங்கள் தழுவப்படும் தாபன வலையமைப்பு ஒன்றினையும் கொண்ட பாரிய ஒரு அரச திணைக்களம் ஆகும்.

தொலைநோக்கு
“தேசிய சுபீட்சத்திற்காக விவசாயத்தில் மேன்மையினை அடைந்து கொள்ளல்.”
பணிநோக்கு
“சமமான தன்மையின் ஊடாக நிலையான விவசாய அபிவிருத்தியை அடைந்து கொள்ளல், விருத்தி செய்யப்பட்ட விவசாய தொழில்நுட்பத்தினை அபிவிருத்தி செய்தல் மற்றும் விரிவாக்கம் செய்தல் என்பவற்றின் ஊடாக நாட்டு மக்களுக்கு உணவு மற்றும் ஊட்டச்சத்துப் பாதுகாப்பை உறுதிப்படுத்தல் மற்றும் விவசாயிகள் மீது அதிக கவனம் செலுத்தி அனைத்துத் தரப்பினர்களுக்கும் உரிய சேவைகளை வழங்குதல்”
குறிக்கோள்கள்
விவசாயிகளின் வருமானம் மற்றும் வாழ்க்கைத்தரம் என்பவற்றினை விருத்தி செய்தல் மற்றும் நுகர்வோர் ஏற்கக் கூடிய விலை ஒன்றிற்கு உணவுப் பொருட்களை வழங்குவதற்காக உணவுப் பயிர்கள் பிரிவின் பயனுறுதி மற்றும் உற்பத்தி என்பவற்றினைப் பேணி வருதல் மற்றும் விருத்தி செய்தல்.
பிரதான செயற்பாடுகள்
- விவசாய ஆராய்ச்சி
- தொழிநுட்ப விரிவாக்கல்
- விதை மற்றும் நடுகைப் பொருள் உற்பத்தி மற்றும் பகிர்ந்தளித்தல்
- ஒழுங்குபடுத்தும் சேவைகள்
நிறுவனங்கள் மற்றும் நிலையங்கள்
- நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்.
- களப் பயிர்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்.
- தோட்டப் பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்.
- பழங்கள் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்.
- இயற்கை வள முகாமைத்துவ நிலையம்.
- சமூக, பொருளாதார விஞ்ஞான மற்றும் திட்டமிடல் நிலையம்.
- விரிவாக்கல் மற்றும் பயிற்சி நிலையம்.
- தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையம்.
- விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையம்.
- விதைகளை உறுதிப்படுத்தல் மற்றும் பயிர் பாதுகாப்பு நிலையம்.
- நிருவாகப் பிரிவு.
- தாபனப் பிரிவு.
- நிதிப் பிரிவு.
- பொறியியல் பிரிவு.
- செயலாற்றுகை நெறிப்படுத்தல் மற்றும் மதிப்பீட்டுப் பிரிவு.
- உள்ளக கணக்காய்வுப் பிரிவு.
பணிப்பாளர் சபை

செல்வி. மாலதி பரசுராமன்
விவசாயப் பணிப்பாளர் நாயகம் விவசாயத் திணைக்களம், பேராதெணிய
- +94 812 386484 / +94 812 388157
- +94 812 388333

கலாநிதி. டீ.எம்.ஜே.பீ.சேனாநாயக்க
மேலதிக விவசாயப் பணிப்பாளர் நாயகம் (ஆராய்ச்சி)
விவசாயத் திணைக்களம், பேராதெணிய
- +94 812 068183
- adg.res@doa.gov.lk

திரு. எச்.எம்.எஸ்.பி.ஹேரத்
மேலதிக விவசாய பணிப்பாளர் நாயகம் (அபிவிருத்தி)
விவசாயத் திணைக்களம், பேராதெணிய
- +94 812 068184
- +94 812 387405
- adg.dev@doa.gov.lk

திரு. ஈ.டபிள்யு.ஏன்.ஏ.
எகொடவெல
மேலதிக பணிப்பாளர் நாயகம் (நிர்வாகம்)
விவசாயத் திணைக்களம், பேராதெணிய
- +94 812 388181
- +94 812 388042
- adg.admin@doa.gov.lk

திரு.டீ.எம்.ஏகநாயக்க
பிரதான நிதி அதிகாரி
விவசாயத் திணைக்களம், பேராதெணிய
- +94 812 387404
- +94 812 388149
- dmekanayake65@gmail.com