24ம் வருடாந்த மாநாடு (Symposium) விவசாயத் திணைக்களம் ASDA 2022 விவசாயத் திணைக்களத்தின் 24ம் வருடாந்த விவசாய மாநாடு 23.09.2022 அன்று கன்னொறுவை தாவர மரபியல் வள நிலையம் மற்றும் தேசிய தகவல் தொடர்பாடல் நிலையம் ஆகியவற்றில் கௌரவ விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தலைமையில் நடைபெற்றது. விவசாய திணைக்களத்தின் பல்வேறு புதிய ஆராய்ச்சி கண்டுபிடிப்புகள் பற்றி முன்வைக்கப்பட்டது. சிறந்த விவசாயி, சிறந்த விஞ்ஞானி, நம்பிகைக்குரிய விவசாயி, நம்பிகைக்குரிய விஞ்ஞானி சிறந்த ஆய்வுக்கட்டுரை ஆகியவற்றுக்கு விருதுகள் வழங்கப்பட்டன. … Continue reading 24 ம் வருடாந்த மாநாடு (Symposium) விவசாயத் திணைக்களம் ASDA 2022

தொழில்நுட்ப வெளியீட்டு குழு கூட்டம் 2022 (2020/2021) புதிய தொழில்நுட்ப வெளியீட்டு குழு கூட்டமானது 19.08.202 அன்று தேசிய விவசாய தகவல் தொடர்பாடல் நிலையத்தின் கேட்போர் கூட்டத்தில் விவசாய பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நடைபெற்றது இந் நிகழ்ச்சியில், 2020/2021ம் ஆண்டில் விவசாயத் திணைக்களத்தின் ஆய்வுகளால் கண்டுபிடிக்கப்பட்ட மற்றும் மேம்படுத்தப்பட்ட விவசாய சார்ந்த புதிய தொழில்நுட்பங்களை, புதிய தொழில்நுட்பங்களாக வெளியிடப்படுவதை உறுதி செய்ய மதிப்பீடு செய்யப்பட்டன.

வர்க்கங்கள் வெளியீட்டு குழு – 2022 விவசாய திணைக்களத்தின் வர்க்க வெளியீட்டு குழுக் கூட்டம் 2022.08.08 அன்று தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலைய கேட்போர் கூடத்தில் விவசாய பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் நடைபெற்றது. கடந்த காலப்பகுதியில் விவசாயத் திணைக்களத்தின் பரிசோதனைகள் மூலம் வெளியிடப்பட்ட பல புதிய பயிர் வர்க்கங்கள் இலங்கையில் பயிரிடுவதற்காக வர்க்க வெளியீட்டு குழு அறிமுகப்படுத்தியுள்ளது.

தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விவசாயத்தை புத்துயிர்ப்பாக்க விவசாய திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட பிரேரணை விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது. இலங்கையில் தற்போது நிலவும் நெருக்கடி நிலை மற்றும் உரங்கள் மற்றும் விவசாய இரசாயனங்கள் இறக்குமதி மற்றும் பாவனைத் தடை விதிக்கும் தீர்மானமானது நாட்டின் உணவு பாதுகாப்பிற்கு பாரிய அச்சுறுத்தலான அமைந்துள்ளது. இந் நிலையை போக்க, பிரதான உணவுப் பயிர் உற்பத்தி தொடர்பாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த நீண்டகால ஆய்வுத் தரவுகளின் அடிப்படையில் குறுகிய கால, இடைகால, நீண்ட … Continue reading தற்போதைய நெருக்கடியான சூழ்நிலையில் இருந்து விவசாயத்தை புத்துயிர்ப்பாக்க விவசாய திணைக்களத்தினால் தயாரிக்கப்பட்ட பிரேரணை விவசாய அமைச்சரிடம் கையளிக்கப்பட்டது

“பசுமையான அலுவலக சூழல்” பயிர்ச்செய்கை வேலைத்திட்டம் நாடு முகங்கொடுத்துள்ள பொருளாதார நெருக்கடியால், எதிர்காலத்தில் ஓரளவிற்கு உணவு பாதுகாப்பை உறுதி செய்வதற்காக நாடு முழுவதும் செயல்படுத்தப்படும் பயிர் செய்கை ஊக்குவிப்பு திட்டங்களுடன் இணைந்து , விவசாய திணைக்கள தொழிற்சங்க ஊழியர்கள் மற்றும் அலுவலகங்கள் விவசாயப்பணிப்பாளர் நாயகம் கலாநிதி அஜந்த .டி. சில்வா அவர்களின் அனுசரணையில் “பசுமையான அலுவலக சூழல்” எனும் தொனிப் பொருளில் பயிர்ச் செய்கை வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.