மத்திய விவசாய நூலகத்தால் ஒருங்கிணைக்கப்பட்ட ''ஹரித யாய'' போட்டிக்கான பரிசளிப்பு விழா

2022 தேசிய வாசிப்பு மாதத்துடன், பாடசாலை மாணவர்களுக்காக ”ஹரித யாய” எனப்படும் வரைதல், கட்டுரை எழுதுதல் மற்றும் நிகழ்துகை (power point) முன்வைப்பு தயாரித்தல் போட்டிகள் விவசாய திணைக்களத்தின் தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் மத்திய நிலையத்தின் மத்திய விவசாய நூலகத்தினால் ஒருங்கிணைக்கப்பட்டது. மேற்குறிப்பிட்ட போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான சான்றிதல் மற்றும் பரிசளிப்பு விழாவானது 2022 – டிசம்பர் 19ம் திகதி தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் விவசாய பணிப்பாளர் நாயகம் திருமதி எச்.எம்.ஜே இலன்ககோன்மெனிக்கேயின் அனுசரணையின் கீழ் நடைபெற்றது.

150 க்கும் மேற்பட்ட மாணவர் பரிசுகளையும் சான்றிதழ்களையும் பெற்றுக் கொண்டதுடன் பேராதனை பல்கலைக்கழத்தின் சிங்களப் பிரிவின் ஒய்வு பெற்ற சிரேக்ஷ்ட பேராசிரியான அதநாயக்க எம்.ஹேரத் அவர்கள் சிறப்புரையை வழங்கினார்.