Tamil: HORDI Crop – Beet Root

HORDI - LOGO

பிற்றூட்

Beta vulgaris

குடும்பம் – chenopodiaceae அனைத்து சுற்றுச்சூழல் வலயங்களிலும் இதனை வளர்க்கலாம்

வெளியிடப்பட்ட வர்க்கங்கள்

காலநிலை தேவைகள் / பயிரிடுவதற்கு பொருத்தமான பிரதேசங்கள்

பீற்றூட் மலைநாட்டு குளிர்ச்சியான பிரதேசங்களில் வளரக் கூடியது. எல்லா விவசாய சூழலியல் வலயங்களிலும் இதனை வளர்க்கலாம்.

மண்

இதற்கு போதுமான அளவு நீர்வடிப்புள்ள சேதனப்பொருட்கள் அடங்கியுள்ள மண் தேவைப்படும். மண்ணின் pH வீச்சு 6.3-7.3 ஆகும்.

விதைத் தேவை

5-6 kg seeds /ha

நாற்றுமேடை முகாமைத்துவம்

உக்கிய சேதன உரத்தினை பாத்திகளில் இடல் மண்ணினை தொற்று நீக்கம் செய்ய பூச்சி கொல்லி சூரியவெப்பம் அல்லது கருக்கிய வைக்கோலை பயன்படுத்துவது முக்கியம் விதைகளை 10 செ.மீ வரிசைகளுக்கு இடையிலான இடைவெளியில் நடல்

நிலப் பண்டுத்தல்

நிலத்தினை 30 செ.மீ அழம் வரை உழுது 1 மீ அகலம் மற்றும் 20 செ.மீ உயரத்திற்கு மேடை அமைத்தல்

நடுகை

4-6 கிழமையின் பின் நாற்றுகளை மீள் நடுகை செய்யலாம்.

இடைவெளி

30 x 10 cm

பசளை

10 தொன் சேதன பசளை ஒரு ஹெக்டயருக்கு இடல்

பசளை இடும் நேரம்

யூரியா

kg/ha

முச்சுபர் பொசுபேற்று

kg/ha

மியூரியேற்றுப் ஒப் பொட்டாசு

kg/ha

அடிக்கட்டுப் பசளை

165

270

125

மேற்கட்டுப் பசளை (நட்டு  கிழமையின் பின்)

165

125

நீர் விநியோகம்

வேர் நீளமாகும் நேரத்தில் கிரமமான முறையில் நீர்பாசனம் செய்தல். பொதுவாக 3-4 நாள் இடைவெளியில் நீர் பாசனம் செய்தல் வேண்டும்.

களை கட்டுப்பாடு

மீள் நடுகை செய்து 2 வாரங்களின் பின் களை கட்டுப்பாடு செய்தல். மேல்கட்டு பசளை இடுவதற்கு முன் களை அகற்றவும். களைகள இடை பயிர் கலாச்சார முறைகளால் அகற்றப்படும்

பீடை முகாமைத்துவம்

அதிக பீடைத்தாக்கமானது உலர் காலங்களில் ஏற்படும்.

பாதிப்பு அறிகுறிகள்

நிறையுடலி இலைகளை சேதமாக்கி உணவுக்காகவும் முட்டை இடுவதற்காகவும் பயன்படுத்தும் இது  இலைகளில் புள்ளிகளை ஏற்படுத்தும். குடம்பிகள் ஒழுங்கற்ற சுரங்கங்களை ஏற்படுத்துகின்றன இதன் விளைவாக இலைகள் காய்ந்து வாடிவிடும். இரண்டாம் நிலை நோய்தொற்று சேதமடைந்த தாவரங்களில் ஏற்படும்.

முகாமைத்துவம்

  • வழக்கமாக கள ஆய்வுசெய்தல்
  • மஞ்சள் நிற ஒட்டும் பொறி பயன்படுத்தல்
  • பொருத்தமான பொருட்களினால் பயிர்களை  மூடுதல்
  • விருந்தி வழங்கி தாவரங்களை பயிர் நிலத்தில் இருந்து அகற்றுதல்
  • சேதமடைந்த பயிரையும், தாவரப் பகுதியையும் அகற்றுதல்
  • புற ஒட்டுண்ணிகளைப் பெருக்குதல்
  • இயற்கை எதிரிகளை ஊக்கப்படுத்துதல் ஒட்டுண்ணிகள்

இரசாயன கட்டுப்பாடு

  • அஷாடிரக்டின் – 1% EC 16ml / 16 ml நீர்
  • அபாமெக்டிக் – 18g / l EC 9.6 ml / 16 l நீர்
  • வேப்பம் விதைச்சாறு – 640g / 16 l நீர்

பாதிப்பு அறிகுறிகள்

இரவு நேரங்களில் தொழிற்படுபவை ஆரம்ப பருவங்கள் இலைகளில் வட்ட வடிவ துளைகளை உருவாக்கும் பின்னர் அரும்பு மற்றும் தாவரத்தின் அடிப்பகுதியில் சேதத்தை ஏற்படுத்தும். பெரும்பாலும் முழு தாவரத்தையும் வெட்டும். அதிகளவான தாவரங்களை ஒரு இரவில் வெட்டி  தாவர தண்டினை நிலத்தினுள் இழுக்கும் வெட்டப்பட்ட  தாவரங்களானது பகல் நேரங்களில் வாடி விடும். கிழங்குகளில் கண்ணுக்கு அழகற்ற துளைகளை உருவாக்கும்

முகாமைத்துவம்.

  • தொடர்ச்சியான கண்காணிப்பு
  • கைகளினால் சேகரித்தல் மற்றும் அழித்தல்
  • களை முகாமைத்துவம்
  • வயல் சுகாதாரத்தை பேணல்
  • அழமாக உழுதல் மூலம் குடம்பி கூட்டுப்புழுக்களை நிலத்திற்கு மேல் கொண்டுவருதல்
  • உழவு செயற்பாட்டின் போது புழுக்களை உண்ணும் பறவைகளின் செயற்பாட்டை அதிகரித்தல்

இரசாயன கட்டுப்பாடு

  • ப்ரோபெ னோபாஸ் 500g / l EC 32 ml / 16 l நீர்
  • Etofenprox 100g / l EC 24 ml / 16 l நீர்

நோய் முகாமைத்துவும்

  • நோயற்ற விதைகளை பயன்படுத்தல்
  • தூவல் நீர் பாசனத்தை பயன்படுத்தல்
  • பயிர் சுழற்சி முறை
  • பயிர் சுகாதாரம்
  • களை கட்டுப்பாடு
  • சரியான இடைவெளியில் தாவரங்களை நடுதல்
  • விதைகளுக்கு சூடான நீர் பரிகரணம்
  • பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி மண்கொசெப், மனேப், கார்பென்சாசிம், குளோரோதலோனல்

அறுவடை

நாற்று நட்டு 75-90 நாட்களில் அறுவடை செய்யலாம்.

விளைச்சல்

12-20 t/ha