விவசாயத் திணைக்களத்தின் கள நாளை நடத்துதல் 2023.07.26 பொலன்னறுவை விதை உற்பத்தி பண்ணையின் கள நாள் நோக்கம் இந்த கள நாள் பின்வரும் 3 நோக்கங்களை அடிப்படையாகக்கொண்டு நடாத்தப்படுகிறது. பொலன்னறுவை பண்ணையில் பெறப்பட்ட கள மற்றும் முகாமைத்துவ அனுபவங்களை விவசாயிகளுடன் பகிர்தல். அத்திவார விதை உற்பத்தி தொடர்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல் உள்ளூர் விவசாயத்திற்கு பொலன்னறுவை விதை உற்பத்திப் பண்ணையின் பங்களிப்பு குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வூட்டல். பின்வரும் விடயங்கள் தொடர்பில் பாடசாலை மாணவர்கள், விவசாயிகள் மற்றும் அதிகாரிகளுக்கு விழிப்புணர்வூட்டல். … Continue reading விவசாயத் திணைக்களத்தின் கள நாளை நடத்துதல் 2023.07.26

விவசாயிகள் கள நாள் 2023 ஜூலை மாதம் 21ம் திகதி பல்வெஹெர அரச விதை உற்பத்தி பண்ணை வளாகத்தில் நடைபெற்றது. பயிர் பராமரிப்பு, விதை உற்பத்தி கொள்கைகள் மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கல் போன்ற முக்கிய விடயங்கள் தொடர்புடைய விவசாயிகள், விவசாய கற்கைநெறியில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் தொழில்நுட்ப (விவசாயம்) அதிகாரிகளுக்கு அறிவை வழங்கல் மற்றும் செயல்விளக்கங்களை வழங்கல் இதன் முக்கிய குறிக்கோளாகும். இந்த நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள், விவசாய கல்லூரி மாணவர்கள், அரச நிறுவனங்களின் … Continue reading விவசாயிகள் கள நாள்

RRDI இன் கள தினம் பத்தலகொட நெல் ஆராய்ச்சி நிலையத்தால் 18-07-2023 அன்று மக்களுக்கு நெற் செய்கையில் புதிய தொழில்நுட்பத்தை கொண்டுவரும் நோக்கத்துடன் திறந்த கள தினம் ஏற்பாடு செய்யப்பட்டது. இச் சேவையை மேலும் விரிவுபடுத்தும் வகையில் ஜூலை 19 மற்றும் 20ம் திகதி காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை இந் நிகழ்ச்சியை நடத்த ஒழுங்கமைக்கப்பட்டுள்ளது. பத்தலகொட நெல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலைய வளாகத்தில் இடம்பெற்ற இந் நிகழ்வில் இணைந்து புதிய … Continue reading RRDI இன் கள தினம்

விவசாயிகள் தினம் 2023 ஜூலை 07ம் திகதி அங்குனுகொலபெலச விவசாய வளாகத்தில் ”விவசாயிகள் தினத்தை” கொண்டாடும் வகையிலான நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வானது கெளரவ விவசாய அமைச்சர் திரு.மஹிந்த அமரவீர மற்றும் விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் செல்வி.மாலதி அவர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. இந் நிகழ்வில் விவசாய திணைக்கள அதிகாரிகள் மற்றும் ஏனைய விருந்தினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

தேசிய மர நடுகை விழா தேசிய மர நடுகை விழாவானது, விவசாய அமைச்சினால் (2023/04/20) அன்று சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் இறுதி மங்கள நிகழ்வாக இடம்பெற்றது. விவசாய அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட தேசிய வேலைத்திட்டத்துடன், விவசாய திணைக்களம் மற்றும் அதன் உப பிரிவுகளும் தமது அலுவலக வளாகத்தில் நடுகை நிகழ்ச்சிகளை நடத்தியுள்ளனர். கன்னொறுவை விவசாய திணைகளத்தின் சேவை பயிற்சி நிலையத்தில் இடம் பெற்ற மர நடுகை நிகழ்ச்சிக்கு விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், செல்வி.மாலதி மற்றும் … Continue reading தேசிய மர நடுகை விழா