உலக நீர் தினம் மற்றும் உலக வளிமண்டலவியல் தினம்- 2024 உலக நீர் தினம் மற்றும் உலக வளிமண்டலவியல் தினம் ஆகிய இரண்டையும் அங்கீகரிக்கும் வகையில் விவசாய திணைக்களத்தின் நீர் மற்றும் வானிலை துறைகளை மேற்பார்வையிடும் முதன்மை நிர்வாக மையமான இயற்கை வளங்கள் முகாமைத்துவ நிலையத்தால் ஓர்  நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது..இந்நிகழ்வானது 2024 மார்ச் மாதம் 22 ஆம் திகதி  கன்னொறுவை ,பேராதனை சேவை கால பயிற்சி நிலையத்தில் இடம்பெற்றது.இந்நிகழ்வானது பிரதம அதிதியான விவசாய திணைக்களத்தின் பணிப்பாளர் … Continue reading உலக நீர் தினம் மற்றும் உலக வளிமண்டலவியல் தினம்- 2024

விவசாய தொழில்நுட்ப கண்காட்சி “Agri tech -24” விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் கௌரவ மஹிந்த அமரவீர அவர்களின் மேற்பார்வையுடன் “விவசாய தொழில்நுட்ப பார்வை -2024” கண்காட்சியை ஒழுங்கு செய்ததன் மூலம் ஒரு வெற்றிகரமான மைல்கல் நாட்டப்பட்டது.இந்நிகழ்வு மார்ச் 2 ஆம் திகதியில் இருந்து 5 ஆம் திகதி வரை ஹுங்கம பட்டஅத்தவில் வெற்றிகரமாக நடைபெற்றது.இந்நிகழ்வில் விவசாயம் மற்றும் பெருந் தோட்ட கைத்தொழிலுடன் தொடர்புடைய 150 அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் பங்குபற்றின. விவசாய மற்றும் பெருந்தோட்ட … Continue reading விவசாய தொழில்நுட்ப கண்காட்சி “Agri tech -24”

விவசாய திணைக்களத்தின் புதிய தொழில்நுட்பங்களை வெளியிடும் குழுக் கூட்டம் 2023 ஆம் ஆண்டு விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்ட ஆராய்ச்சிகள் மூலம்  அறிமுகப்படுத்தப்பட்ட புதிய விவசாய தொழில்நுட்பங்களை வெளியிடுவதற்கான குழுக்கூட்டம் 05.02.2024 அன்று தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலையத்தில் விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி. மாலதி பரசுராமன் அவர்களது  தலைமையில் நடைபெற்றது.

பணிகளின் தொடக்கம் – 2024 2024ம் ஆண்டுக்கான பணிகளின் தொடக்கம் 01.01.2024 அன்று விவசாய திணைக்களத்தின் தலைமை அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. விவசாய பணிப்பாளர் நாயகம் செல்வி ப.மாலதி அவர்களின் தலைமையில் மத அனுஷ்டானங்களுக்கு முன்னுரிமை வழங்கப்பட்டது. அதே நேரம் விவசாய திணைக்களத்தின் அனைத்து பிராந்திய அலுவலகங்களிலும் பணிகள் தொடங்கப்பட்டன.

பழத்துறையின் பழப்பங்குதாரர்களின் தகவல் முகாமைத்துவ தொகுதியை அறிமுகப்படுத்தல் இலங்கையின் பழ பெறுமதி சங்கிலியின் ஒவ்வொரு படியிலும் பங்குதாரர்களை பதிவு செய்வதற்கான தகவல் முகாமைத்துவ தொகுதியினை அறிமுகப்படுத்தும் நிகழ்ச்சி 2023.11.01 அன்று விவசாயப் பணிப்பாளர் நாயகத்தின் தலைமையில் தேசிய விவசாய தகவல் மற்றும் தொடர்பாடல் நிலைய கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மேலதிக விவசாய பணிப்பாளர் நாயகங்கள் , பணிப்பாளர் சபை,முன்னால் பணிப்பாளர்கள் மற்றும் பழத்துறையுடன் தொடர்புடைய பங்குதாரர்கள்  கலந்து கொண்டதுடன் அதிகாரிகள்  மற்றும்  பங்குதாரர்களின் குழு zoom … Continue reading பழத்துறையின் பழப்பங்குதாரர்களின் தகவல் முகாமைத்துவ தொகுதியை அறிமுகப்படுத்தல்