RRDI_CropEstablishment_Sowing_DirectSowing_ta

RRID- Bathalagoda LOGO

அரிசி-பிரதான உணவு- பயிர் நடுதல்

நேரடி விதைத்தல் ( விதை வீசி விதைத்தல்)

  • நடவு செய்தலை விட சிக்கனமான முறை

  • விவசாயிகளிடையே மிகவும் பிரபல்யமான நடுகை செய்யும் முறை

  • மூன்று முறைகள் பயன்படுத்தப்படுகின்றன.

    • ஈர விதைப்பு

    • உலர் விதைப்பு

    • நீர் விதைப்பு

  • நேரடி விதைத்தலில் விதை விகிதமானது  முக்கியமாக கருத்திற்கொள்ளப்பட வேண்டிய ஒரு விடயமாகும்,

விதை விகிதம்

  • ஆரோக்கியமான ஒரு பயிரின் நிலையான அறுவடை பொதுவாக 350-400 கதிர்கள்/சது.மீ
  • விதை விகிதம் அதற்கேற்றவாறு சரிசெய்யப்பட வேண்டும்
    • நடுத்தர அளவிலான நெல்மணி ( 23-25 கிராம்/ 1000 விதைகள்) – சுமார் 100/ கிலோ/ஹெக்டயார்
    • சிறிய அளவிலான நெல்மணி (சம்பா )- சுமார் 75-80 கிலோ /ஹெக்டயர்
  • சாதாரணமாக விதையின் நிறை அதிகரிப்புடன் விதை விகிதமானது குறையும்,

நடுவதற்கு உகந்த வர்க்கங்கள் – மேலும் வாசிக்க>>

  • உலர் விதைப்பு மேற்கொள்ளப்படும் போது விதை விகிதமும் ஒரு முக்கிய காரணியாக இருக்கும்,மேலும் பல்வேறு காரணங்களால் விதைகள் சேதமடையலாம்.


ஒழுங்கற்ற விதை விகிதம் மற்றும் அடர்த்தி

  • பயிரின் மீது எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும்
  • ஒரேயளவான விதை வகுப்புகளுக்கிடையில்

    • விதை விகிதத்தை குறைத்தலானது பயனற்ற மட்ட வெடிப்பை அதிகரிக்கலாம்
    • பின்வரும் காரணங்களால் அதிகரிக்கும் விதை விகிதங்களால்    விளைச்சல் குறையக்கூடும்
      • உயர் தாவர அடர்த்தி

      • குறைந்த கதிர்களுடன் கூடிய ஆரோக்கியமற்ற நாற்றுகள்
      • பூச்சி மற்றும் பீடைகளுக்கு அதிகளவில் எளிதில்   பாதிக்கப்படுதல்s
  • சீரான தாவர அடர்த்தியானது பின்வரும் வழிகளில் பேணப்படலாம்
    • உயர் தாவர அடர்த்தி உள்ள இடங்களில் நாற்றுக்களை பிடுங்குதல் (ஐதாக்கல்)

    • குறைந்த தாவர அடர்த்தி உள்ள இடங்களில் நாற்றுக்களை நடல்