மண் மற்றும் உரம்
மத்திய மண் மற்றும் உர பரிசோதனை ஆய்வகம்
பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சிஅபிவிருத்தி நிலையம்
விவசாயத் திணைக்களம்
விவசாயத் திணைக்களத்தின் பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சிஅபிவிருத்தி நிலையத்தின், மத்திய மண் மற்றும் உர ஆய்வுகூடமானது, மண் மற்றும் உரப் பரிசோதனைக்காக 30 அக்டோபர் 2019 தேதியிட்ட ISO / IEC 17025-2005 (சான்றளிப்புச் சான்றிதழ்) மூலம் சர்வதேச சான்றிதழைப் பெற்றுள்ளது. மண்ணின் pH அளவு, மின் கடத்துத்திறன் (உப்புத்தன்மை), கிடைக்கும் பொஸ்பரஸ் ன் அளவு, பரிமாற்றம் செய்யக்கூடிய பொட்டாசியத்தின் அளவு மற்றும் மண்ணில் காணப்படும் சேதனப் பொருட்கள் தொடர்பில் உணவுப் பயிர்களுக்கான பகுப்பாய்வினை மண் சோதனையின் மூலம் உரப்பரிந்துரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
இது தவிர தேவைகளின் போது மண், பயிர்கள், நீர், சேதன மற்றும் இரசாயண உரங்களின் கலவை மற்றும் கன உலோகங்கள் போன்ற அபாயகரமான இரசாயனங்களின் உள்ளடக்கம் தொடர்பில் ஆய்வுகூட சோதனை சேவைகளை வழங்கி வருகின்றது. மேலும் பல்வேறு போசணை பிரச்சினைகள் மற்றும் சுற்றுச்சூழல் பிரச்சினைகள் குறித்து பொதுமக்களுக்கு அறிவுறுத்துதல் என்பன மத்திய மண் மற்றும் உர ஆய்வகத்தினால் செயற்படுத்தப்படுகின்றது.
தயாரிப்பு(கள்)/ சோதனைப் பொருட்கள் | செயற்படுத்தப்படும் குறித்த சோதனை அடிப்படைகள் | அங்கிகாரத்தின் தன்மை |
மண் | மண் அடிப்படை அலகுகள் | அங்கீகாரம் பெற்றது |
pH | ||
மின் கடத்துதிறன் | ||
பொசுபரஸ் அளவு | ||
மாற்றப்படக்கூடிய பொட்டாசியம் | ||
மாற்றப்படக்கூடிய கல்சியம் | ||
மாற்றப்படக்கூடிய மக்னீசிய சேதனப் பொருற்கள் | ||
நுண் போசணைகளின் அளவு | ||
Fe, Cu, Mn, Zn | ||
மொத்த நுண் துணிக்கைகள் | ||
Fe, Cu, Mn, Zn, Pb, Cd, Cr, As | ||
இரசாயணப் பசளை | மொத்த நுண் துணிக்கைகள் | |
Fe Cu Mn Zn Pb Cd Cr As மற்றும் Hg | அங்கீகாரம் பெற்றது | |
மொத்த N அளவு | அங்கீகாரம் பெற்றது | |
மொத்த P2O5, நீரில் கொண்டுள்ள P இன் அளவு | ||
மொத்த K2O அளவு | ||
ஈரப்பதன் | ||
கொம்போஸ்ட் பகுப்பாய்வு | pH | அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படவில்லை |
மின் கடத்துதிறன் | ||
மொத்த N அளவு | ||
மொத்த P2O5 அளவு | ||
மொத்த K2O அளவு | ||
சேதன C | ||
மணல் | ||
ஈரப்பதன் | ||
தாவரப் பகுப்பாய்வு | அனைத்து பெரிய மற்றும் நுண் துணிக்கைகள் | அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படவில்லை |
நீர் பகுப்பாய்வு | pH | அங்கீகாரம் பெற்றுக்கொள்ளப்படவில்லை |
மின் கடத்துதிறன் |
மண் மாதிரி பகுபாய்வு
மண்ணில் அதீத உரப்பாவணையின் விளைவாக தேவையற்ற போசணைகள் மண்ணில் படிவதால் மண்ணில் போசணை ஏற்றத்தாழ்வு உருவாகின்றது. இதனால் மண் பரிசோதனையின் முடிவின் அடிப்படையில் உரப் பரிந்துரையைப் பயன்படுத்துவது செய்தல் சிறந்த போசணை முகமைத்துவ திட்டமிடலாகும்.
சரியான மூலப்பொருள் சரியான அளவினில் பயன்படுத்தப்படுவதால் மண்ணில் சேரும் தேவையற்ற பதார்த்தங்கள் சேர்தல் குறைவடைகின்றது. மேலும் மண் பரிசோதனையின் மூலம் மண்ணின் pH பெறுமானம் இனக்காணப்பட்டு அதனை நிவர்த்தி செய்வதற்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகின்றது.
மண் மாதிரி பகுப்பாய்வின் போது மண்ணின் pH பெறுமானம், மின் கடத்து திறன், கிடைக்கும் பொசுபரஸ் இன் அளவு, பரிமாற்றம் செய்யக்கூடிய பொட்டாசியத்தின் அளவு மற்றும் மண்ணில் காணப்படும் சேதனப் பொருற்கள் தொடர்பிலும் பகுப்பாய்வு செய்யப்படும்.
கொம்போஸ்ட் பகுப்பாய்வு
விவசாய உள்ளீடுகளின் தரம் தொடர்பில் அவதானம் செலுத்தி, தேவையான சந்தர்ப்பங்களில் தகுந்த பரிந்துரைகளை வழங்குதல் விவசாயத்துறையின் நிலைப்பாட்டிற்கு முக்கியமானதாகும்.
pH அளவு, மின் கடத்துத்திறன், மண்ணின் ஈரப்பதன், சேதன காபன், மொத்த நைதரசன், மொத்த பொசுபரஸ், மொத்த பொட்டாசியம் மற்றும் மணல் ஆகியவை உரம் பகுப்பாய்வின் போது பகுப்பாய்வு செய்யப்பட்டு அறிக்கைகள் சமர்ப்பிக்கப்படும்.
உர மாதிரி பகுப்பாய்வு
இரசாயன உரங்களின் தரத்தை பரிசோதித்து, உயர்தர இரசாயன உரங்களை பயன்படுத்த அனுமதிப்பதன் மூலம் பல்வேறு சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார பிரச்சனைகளை குறைத்து தரமான மற்றும் பாதுகாப்பான உணவை பொதுமக்களுக்கு வழங்க முடியும்.
இரசாயன உர பகுப்பாய்வின் போது ஈரப்பதன், மொத்த நைதரசன், பொசுபரஸ், பொட்டாசியம் மற்றும் நீரில் கரையக்கூடிய பொசுபரஸ் என்பவற்றுடன் உள்ளடங்கியுள்ள கன உலோகங்கள் தொடர்பிலும் ஆய்வு செய்யப்படும்.
பயிர் சோதனை
விவசாயிகளின் பயிர் நிலங்களில் உருவாகும் பிரச்சினைகள், குறைப்பாடுகள், அல்லது நச்சுக்கள் தொடர்பில் ஆய்வுகூடத்தில், அவர்களுடைய பயிர் மாதிரிகளை பரிசோதிக்கப்பட்டு ஆலோசனைகள் வழங்கப்படும்
நீர் மாதிரி சோதனை
பெறப்படும் மாதிரிகளின் pH மற்றும் மின் கடத்து திறன் பொதுவாகசோதிக்கப்படும்.
கட்டண அறவீடுகள் மேற்கொள்ளப் படுவதில்லை.
உணவு மாசுபாடு மற்றும் பூச்சிக்கொல்லி பகுப்பாய்வு ஆய்வுகூடம்
மத்திய பகுப்பாய்வு ஆய்வு கூடம்
பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம்
விவசாயத் திணைக்களம்
தயாரிப்பு(கள்)/ சோதனைப் பொருட்கள் | நோக்கம் | செயற்படுத்தப்படும் குறித்த சோதனை அடிப்படைகள் | அங்கிகாரத்தின் தன்மை |
பூச்சிக்கொல்லி எச்சம் பகுப்பாய்வு | காய்க்கறி மற்றும் பழப் பயிர்கள், GC/MS இன் மூலம் | Diazinon-±0.031mg/kg Chlofyrifos-±0.034 mg/kg Prothiofos-±0.029 mg/kg Fipronil-±0.028 mg/kg Oxyflurofen-±0.052 mg/kg Tebuconazole-±0.050 mg/kg | அங்கீகாரம் பெற்றது |
நீர், GC/MS இன் மூலம் | Diazinon-±0.031mg/kg Chlofyrifos-±0.034 mg/kg Prothiofos-±0.029 mg/kg Fipronil-±0.028 mg/kg Oxyflurofen-±0.052 mg/kg Tebuconazole-±0.050 mg/kg | அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன | |
கன உலோகங்களின் பகுப்பாய்வு | அரிசி | As- ±0.001 mg/kg, Se-±0.0024 mg/kg, Cd-±0.0002 mg/kg, Hg-±0.0003 mg/kg, Pb-±0.0009 mg/kg | அங்கீகாரம் பெற்றது |
காய்க்கறி பயிர்கள் | As- ±0.001 mg/kg Se-±0.0024 mg/kg Cd-±0.0002 mg/kg Hg-±0.0003 mg/kg Pb-±0.0009 mg/kg | அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன | |
நீர் | As- ±0.001 mg/kg Se-±0.0024 mg/kg Cd-±0.0002 mg/kg Hg-±0.0003 mg/kg Pb-±0.0009 mg/kg | அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன | |
Be, V, Cr, Mn, Co, Ni, Cu, Tl | அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன | ||
பூச்சிக்கொல்லி உருவாக்கம் பகுப்பாய்வு | பெளதீக சோதனை | ||
Emulsion stability சோதனை | ± 0.012 ml | அங்கீகாரம் பெற்றது | |
Persistent forming சோதனை | ± 0.019 | ||
Wettability சோதனை | ± 0.051 sec | ||
pH | ± 0.016 | ||
அடர்த்தி & தன்னீர்வை | ± 0.001 | ||
இரசாயண சோதனை | |||
ஆக்கக்கூறுகள் | Diazinon-± 6.542 g/Kg Fipronil-±1.216 g/Kg | அங்கீகாரம் பெற்றது | |
பூச்சிக்கொல்லி அடையாளம் | FTIR சோதனை | ||
கன உலோகங்களின் பகுப்பாய்வு | As- ±0.001 mg/kg Se-±0.0024 mg/kg Cd-±0.0002 mg/kg Hg-±0.0003 mg/kg Pb-±0.0009 mg/kg | அங்கீகாரம் பெற்றது | |
Be, V, Cr, Mn, Co, Ni, Cu, Tl | அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன | ||
| Acephate , Omethoate , Pymetrozine, Dinotefuran, Nitenpyram, Methomyl, Thiamethoxam, Carbendazim, Monocrotophos, Imidacloprid, Clothianidin, Carbofuran-3-hydroxy, Acetamiprid, Acetamiprid 01, Cymoxanil, Cymoxanil 01, Thiacloprid, Aldicarb [M+NH4], Tricyclazole, Paraoxon-methyl, Phosphamidon, Carbofuran, Bendiocarb, Malaoxon, Carboxin, Carbaryl, Thiodicarb, Flutriafol, Metalaxyl, Metalaxyl-M, Chlorantraniliprole, Azoxystrobin, Fenamidone, Ethiprole, Flutolanil, Iprovalicarb, Fipronil, Flusilazole, Kresoxim-methyl, Phenthoate, Tebuconazole, Flubendiamide, Edifenfos, Diazinon, Fenthion, Propiconazole, Tridemorph, Hexaconazole, Fipronil sulfone, Pyraclostrobin, Pencycuron, Spinosada, Difenconazole, Trifloxystrobin, Indoxacarb, Spinosadd, Benfuracarb, Profenophos, Quizalofop-ethyl, Buprofezin, Emamectin-b1b-benzoate, Chlorpyrifos, Emamectin-b1a-benzoate, Lufenuron, Flufenoxuron, Fenpyroximate, Fenazaquin, Carbosulfan, Etofenoprox (M+NH4) | அங்கீகாரத்திற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன |
பூச்சிக்கொல்லி எச்சம் பகுப்பாய்வு
உணவு மற்றும் தண்ணீரில் உள்ள பூச்சிக்கொல்லி துணிக்கைகள் தொடர்பில் ஆய்வு செய்து வெளியிடுவதற்காக இவ்விரசாயண ஆய்வு கூடம் LC-MS /MS, GC-MS மற்றும் GC-ECD போன்ற மேம்பட்ட தொழில்நுட்ப உபகரணங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இந்த பகுப்பாய்வுகளைச் செய்ய சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட QuEChERS முறை பயன்படுத்தப்படுகிறது. இந்த முறைகள் SANTE/12682/2019 வழிகாட்டுதல்களின்படி சரிபார்க்கப்பட்டவை.
2023/34 மற்றும் 14.06.2017 தேதியிட்ட, உணவில் காணப்படக்கூடிய அதிகபட்ச பூச்சிக்கொல்லி துணிக்கைகளின் அளவுகள் தொடர்பான வர்த்தமானி அறிவுப்புக்கமைய உணவுகளில் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகின்றது
- மரக்கறி மற்றும் பழப் பயிர்கள்
- அரிசி
- தானியங்கள்
- நீர்
கன உலோகங்கள் உட்பட துணிக்கை மூலகங்களின் பகுப்பாய்வு
உணவு மற்றும் நீரில் உள்ள ஆர்சனிக் (As), காட்மியம் (Cd), ஈயம் (Pb) மற்றும் இரசம் (Hg) உள்ளிட்ட பதினான்கு வகையான மூலகங்களின் பகுப்பாய்வு செய்யப்பட்டு அறிக்கையிடப்படுகின்றன. ICP-MS (inductively coupled plasma mass spectrometer) இனைப் பயன்படுத்தி பகுப்பாய்வுப் பணிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
இங்கே, FAO / WHO ஆல் வெளியிடப்பட்ட உணவுகளின் அதிகபட்ச கன உலோக அளவீடுகளைக் கொண்டு உணவின் பாதுகாப்பு உறுதி செய்யப்படுகிறது.
- காய்கறி பயிர்கள்
- நீர்
- அரிசி
பூச்சிக்கொல்லிகளின் பகுப்பாய்வு
ஆய்வுகூடம் GC-ECD/NPD/FID, HPLC, FTIR, UV spectroscopy, மற்றும் Karl Fisher Titrator போன்ற அதிநவீன கருவிகள் பொருத்தப்பட்டுள்ளன. பூச்சிக்கொல்லிகளின் அளவு ரீதியான மற்றும் தரம் தொடர்பில் பகுப்பாய்வு செய்யப்பட்டு, பூச்சிக்கொல்லிகளில் இருக்கும் கன உலோகங்களின் அளவு மாசுகளாக பதிவு செய்யப்படுகிறது.
மேலும் நாட்டினுள் இறக்குமதி செய்யப்படும் பூச்சி நாசினிகளின் தொழிற்பாடு மற்றும் தரம் தொடர்பில் சான்றிதல் வழங்குவதில் பங்களிப்பு செய்கின்றது.
- பெளதீக பரிசோதனை (pH, Density, Persistent Foaming, Emulsion Stability, Wettability, Testing for Moisture)
- ஆக்கக்கூறுகளின் உள்ளடக்கம் (பூச்சிக்கொல்லி திரவியம்)
- கன மூலகங்களின் ஆய்வு (மாசுப்பொருற்களாக)
- போலி மோசடிக்கான சட்ட மாதிரி நடைமுறை பரிசோதனைகள்