rrdi_technology_agronomy_DroughtTolerantVarieties_ta

RRID- Bathalagoda LOGO

தொழினுட்பங்கள்

பயிராக்கவியல் பிரிவு Bg 251 மற்றும் Bg 314 உலர் இடை வலயங்களில் மானாவாரி நெற் செய்கைக்கான வரட்சியை தாங்கும் வர்க்கங்கள்

முறையற்ற மழைவீழ்ச்சி கோலத்தினால் இலங்கையில் உலர்  இடைவலயங்களில் மானாவாரி பயிர்ச் செய்கையில் வரட்சி அதிக அழுத்தம் கொடுக்கும்  ஒன்றாக  மாறியுள்ளது. போதுமானளவு  நீரின் கிடைப்புத்தன்மை இல்லாத காரணத்தினால் 35 வீதம்  மானாவாரி நெல் விவசாயிகள் பெரும் போகத்தை விட சிறு போகத்தில் நெற்  பயிர்ச் செய்கையைக்கை விடுகின்றார்கள். நாட்டின் தேசிய அரிசி உற்பத்தி மற்றும் உணவு  பாதுகாப்புக்கு  பயிரிடப்படும்  அளவின் குறைப்பு, பயிர் இழப்பு என்பன  அச்சுறுத்தல்  அளிக்கிறது.வரட்சியின் அழுத்தத்தை  தணிக்க மானாவாரி நெற் செய்கையில் புதிய அரிசி வர்க்கங்களின் அறிமுகம்மற்றும் ஈடு கொடுப்பதுடன் நீரை சேமிக்கும் நுட்பங்களை அறிமுகப்படுத்துவது  முக்கியமாகும்.

2008ம் ஆண்டு முதல் ஈரப்பதன் குறைவான நிலைகளில் நெல் தாங்கி வளரும் வர்க்கசந்​தியை உருவாக்கும் செயற்பாடு ஆரம்பிக்கப்பட்டது. ‘கிறீன் சுபர் ரைஸ்’ திட்டம் மற்றும் INGER நிகழ்ச்சித் திட்டம்மூலமாக சர்வதேச வரட்சி தாங்கும் நெல் நாற்றுமேடை 2007  (IRDTN) இருந்து வரட்சியை தாங்கும் நெல் கிடைக்கப் பெற்றது. இவை உள்ளூர் சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களுடன் நீரை தகைப்பு மற்றும் நீர்பாசன நிலைமையின் கீழ் கலப்புச் செய்யப்பட்டு இரு சந்தர்ப்பத்திலும் சிறப்பாக செயற்படும் சந்ததி தெரிவு செய்யப்பட்டது. இவை பெருக்கப்பட்டு 2010  ஆண்டு முதல் தூய்மையாக்கப்பட்டது.

 

அரிசிசந்ததியைதெரிவுசெய்தல்

கோட்டுதெரிவு-மானாவாரி
விளைச்சல்பரீட்சிப்பு – மானாவாரி
விளைச்சல்பரீட்சிப்புநீர்ப்பாசனம்

இயைபாக்கப் பரீட்சிப்பு

2012 மற்றும் 2014 ல் இயைபாக்கப் பரீட்சிப்பதற்காக தேசிய ஒருங்கிணைக்கப்பட்ட நெல் வர்க்கத்தை பரீட்சிக்கும் திட்டம் (NCRVT) க்குநம்பிக்கைக்குரிய இரு நெல் விதைகள் முறையே Bg 10-9028 மற்றும் IRDTN 07-11 பரிந்துரைக்கப்பட்டன. இவை தேசிய வர்க்க வெளியிடும் குழுவிற்கு சமர்ப்பிக்கப்பட்டு உலர் இடை வலயங்களில் மானாவாரி செய்கைக்காக 2020ல் இருந்து Bg  314 வர்க்கம்IRDTN 07-11 இருந்து Bg  251 GSRவெளியிடப்பட்டது, மேலும் 2014ல் Bg10-9028நெல் வெளியிடப்பட்டது.

Bg 314

வயது : 95-100 நாட்கள் (3 மாத வர்க்கம்)

சராசரி விளைச்சல்

ஆய்வு கூட நீர்ப்பாசனம்  முகாமைத்துவம் : 5.1 t/ha

மானாவாரி தகைப்புடன் : 2.4 t/ha

மானாவாரியில் அதிகபட்ச விளைச்சல்

WZ  : 5.6 t/ha தஹமன (இரத்தினபுரி – பலாங்கொடை)

IZ  : 3.97 t/ha நாரம்மல (குருநாகலை)

நீர்ப்பாசனத்தில் அதிகபட்ச விளைச்சல்

விவசாயின் வயல் : 8.06 t/ha சியபலான்டுவ

ஆய்வு முகாமைத்துவம் : 6.19 t/ha – RRS முருகன்

Bg 251 GSR

வயது : 78-82 நாட்கள் (2 1/2 மாத வர்க்கம்)

தானிய வகை : வெள்ளை நீண்ட நடுத்தரமான (நாடு)

சராசரி விளைச்சல்

நீர்ப்பாசன நிலைமை : 5.5 t/ha

மானாவாரி நிலைமை : 3.57 t/ha

அதிக விளைச்சல் பதிவு செய்யப்பட்டுள்ளது :

8.34 t/ha (முருங்கன்)