FCRDI Divisions [Ongoing Page] – Plant Breeding Division – Tamil

FCRDI- MI LOGO

இப்பக்கம் வடிவமைப்பு செயற்பாட்டில் இருப்பதனால்  அதுவரைக்கும் கீழேயுள்ள பக்கங்களை அணுகவும்.

FCRDI இன் பிரிவுகள்

தாவர இனவிருத்திப்பிரிவு

இப்பிரிவின் நோக்கம்

உயிர்ப்பான உயிர்ப்பற்ற தகைப்பு நிலைமைகளிலும் இசைவாக்கமடையக்கூடிய சூழல் நிலைமைகளிலும் எதிர்த்து அல்லது சகித்து வாழக்கூடிய உயர் விளைச்சல் தரக்கூடிய மறுவயற் பயிர்களை விருத்தி செய்தல்.

மறுவயற் பயிர்கள்:

  • உப தானியங்கள் : சோளம் , குரக்கன்,இறுங்கு மற்றும் ஏனைய தானியங்கள்
  • சுவையூட்டிகள் : மிளகாய் , பெரிய வெங்காயம் , சின்ன வெங்காயம்
  • தானிய பயிர்கள் : பயறு, உழுந்து , கெளபீ , சோயா அவரை , துவரை , கொள்ளு 
  • எண்ணெய் பயிர்கள் : நிலக்கடலை , எள்ளு, சூரியகாந்தி , கடுகு

பிராந்திய ரீதியான நோக்கம்:

  • பழப்பயிர்கள் , மரக்கறி பயிர்கள் , நெல்

சேவைகள்

  1. பின்வரும் அம்சங்களில் பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல்
    • வேறுபட்ட விவசாய சூழல்களில் மறு வயற்பயிர்களின் விவசாய நடைமுறைகள்.
    • தனிநபர் மற்றும் சமூககுழுக்கள்  சார்ந்த தரமான விதை உற்பத்தி.
    • நாட்டில் மறுவயற் பயிர்ச்செய்க்காய்க்கான சாத்தியப்பாடு
    • மறுவயற்பயிர்களில் உற்பத்தி திறனை உயர்த்துதல்
    • கலப்பின விதைகளை உற்பத்தி செய்தல்
  1. விவசாயிகள் மற்றும் அவை சார்ந்த அமைப்புக்களால் முன்வைக்கப்படுகின்ற களப்பிரச்சனைகளை ஆராய்ந்து அவர்களுக்கான தீர்வுகளை பெற்றுக்கொடுத்தல்
  2. ஊடகங்கள், கண்காட்சிகள் மற்றும் வயல் விழாக்கள் போன்ற பிற பிரச்சாரங்கள் மூலம் தொழிநுட்பங்களை பரப்புதல்.
  3. அனைத்து மறுவயற்பயிர் வகைகளின் இனவிருத்தி விதைகளை விதை மற்றும் நடுகைப்பொருட்கள் அபிவிருத்தி நிலையத்திற்கு வழங்குதல்.
  4. மிளகாய் மற்றும் சோளப் பயிர்களில் கலப்பின விதைகளின் உற்பத்திக்காக பொது மற்றும் தனியார் துறைக்கு தாய்த்தாவர மற்றும் மூல விதைகளை வழங்குதல்.
  5. வெளிநாட்டு மறுவயற்பயிர்களின் வர்க்கங்களை  மதிப்பிடல்.

தொழிநுட்பங்கள்

  1. மறுவயற்பயிர் வர்க்கங்களை கலப்பினம் மூலமும் திறந்த மகரந்த சேர்க்கை மூலமும் விருத்தி செய்த்தாலும் மேம்படுத்தலும் .
  2. மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பங்கள் மூலம் சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காய உண்மை விதைகளை உற்பத்தி செய்தல்
  3. மேம்படுத்தப்பட்ட தொழிநுட்பத்தினூடாக மிளகாய் மற்றும் சோளப் பயிர்களில் கலப்பின விதை உற்பத்திகளை மேற்கொள்ளல்.
  4. திறந்த மகரந்தச் சேர்க்கை வகைகளின் மரபணுத் தூய்மையைப் பராமரிப்பதற்கான தொழிநுட்பம்.

இப்பிரிவின் உத்தியோகத்தர்கள்

கலாநிதி K.N. கன்னங்கரா
முதன்மை விவசாய விஞ்ஞானி - தாவர இனவிருத்திப்பிரிவு (மிளகாய்)
திரு B.I. ஹெட்டியாராச்சி
உதவி விவசாயப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) - தாவர இனவிருத்திப்பிரிவு (வெங்காயம்)
திரு D.C.M.S.I. விஜேவர்த்தன
உதவி விவசாயப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) - தாவர இனவிருத்திப்பிரிவு (உபதானியப்பயிர்கள்)
திருமதி M.J.M.P. குமாரரத்ன
உதவி விவசாயப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) - தாவர இனவிருத்திப்பிரிவு (பயறு மற்றும் உழுந்து)
திருமதி N.H.M.S. சித்ரபால
உதவி விவசாயப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) - தாவர இனவிருத்திப்பிரிவு (கெளபீ மற்றும் சோயா அவரை)
திருமதி W.A.R. தம்மிகா
உதவி விவசாயப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) - உயிரியல் தொழில்நுட்பம்
திருமதி H.M.S.N. ஹேரத்
உதவி விவசாயப்பணிப்பாளர் (ஆராய்ச்சி) - தாவர இனவிருத்திப்பிரிவு