Agriculture Research Station, Thirunelvely – Tamil

ARS-Thiru LOGO

FCRDI Sub Unit

விவசாய ஆராய்ச்சி நிலையம் -

திருநெல்வேலி

விவசாய ஆராய்ச்சி நிலையம் – திருநெல்வேலியானது 1950களில் யாழ் மாவட்டத்திலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் விவசாயிகளுக்கு அவர்களின்  விவசாயம் சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பதற்காகவும்,  ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்காகவும் , புதிய இனங்களை உற்பத்தி செய்வதோடு புதிய தொழிநுட்பங்களை அறிமுகப்படுத்துவதற்காகவும், விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு பல்வேறு நுட்பங்களை உருவாக்கி பிரதானமாக ஏனைய களப் பயிர்களின் பேண்தகு உற்பத்தியை அதிகரிப்பதற்காகவும் உருவாக்கப்பட்டது.

ஏனைய களப்பயிர்கள், நெல், பழப்பயிர், மரக்கறிகள் போன்றவற்றிற்கு இவ் ஆராய்ச்சி நிலையம் பொறுப்புடையதாக இருப்பதுடன் பயிராக்கவியல், பயிர்பாதுகாப்பு, மண்வளமும் முகாமைத்துவமும், நீர்முகாமைத்துவம்  போன்ற ஆராய்ச்சிகளிலும் ஈடுபட்டு விவசாயிகளின் வருவாயை முன்னேற்ற இந்நிலையமானது பெரும் பங்காற்றி வருகின்றது

பிரதான நோக்கங்கள்

  • ஏனைய களப்பயிர்கள் மற்றும் வறள் நிலங்களிற்குரிய மரக்கறிகள் என்பவற்றின் அனுசரணை ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றின் நோய்பீடை மற்றும் வரட்சியை தாங்கும் தன்மை என்பவற்றை பரீட்சித்தல்.
  • பூச்சிமற்றும் நோய்த்தாக்கங்களால் ஏற்படும் பயிர் இழப்புக்களை குறைப்பதற்கு புதிய முகாமைத்துவ உத்திகளை உருவாக்குதல்.
  • புதிய பயிராக்கவியல் தொழிநுட்பங்களை பயன்படுத்தி குறைந்த செலவில் அதிகளவு உற்பத்திகளை மேற்கொண்டு விவசாய நிலங்களின் உற்பத்தி திறனை அதிகரித்தல்.
  • மண், மண்வளம் மற்றும் நீர்முகாமைத்துவ முறைகளை உருவாக்கி சுற்றுச்சூழலை பாதுகாத்தல்.
  • யாழ்ப்பாண மாவட்டத்திலும் அண்டிய பிரதேசங்களிலும் விவசாயிகளின் வாழ்க்கை நிலையை மேம்படுத்துவதற்கு தொழிநுட்பங்களை உருவாக்கி பிரதானமாக ஏனைய களப்பயிர்களின் பேண்தகு உற்பத்தியை அதிகரித்தல்.

வழங்கப்படும் சேவைகள்

  1. ஏனைய களப்பயிர்களில் ஏற்படும் பிரச்சனைகளைத் தீர்த்தல்: மிளகாய், சின்னவெங்காயம், குரக்கன், பயறு, உழுந்து, கௌபீ, சோயா, சிறுதானியம் மற்றும் சோளம் என்பவற்றில் ஏற்படும் நோய்பீடை,  பயிராக்கவியல் மற்றும்  களப்பிரச்சனைளை களத்திற்கு விஜயம் செய்து ஆய்வுகூடங்களிலும், களங்களிலும் ஆய்வுகளை மேற்கொண்டு பிரச்சனைகளை தீர்க்கும் வழிமுறைகளை முன்வைத்தல்.
  2. இனவிருத்தியாள் விதை உற்பத்தி: வடபிராந்தியத்தில் ஏற்படும் விதை தேவைகளை பூர்த்தி செய்யும் முகமாக சோளம், சோயா, கௌபீ, பயறு, உழுந்து, நிலக்கடலை ஆகிய வயற்பயிர்களதும் பாகல், புடோல் மற்றும் கத்தரி போன்ற மரக்கறி பயிர்களிலும் இனவிருத்தியாளர் விதைகளை உற்பத்தி செய்தல்.
  3. தொழில்நுட்ப பரிமாற்றம்: வயல்விழாக்கள், செய்முறை துண்டங்கள், வானொலி நிகழ்ச்சிகள், பத்திரிகை கட்டுரைகள் போன்றவற்றாலும்  பல்கலைக்கழக மாணவர்கள், பாடசாலை மாணவர்கள் மற்றும் சம்பந்தப்பட்டோருக்கு பயிற்சிகளை வழங்குதல்.

செயற்பாடுகள்

  1. மண் விஞ்ஞானப்பிரிவு: விவசாயிகளிடமிருந்து எழும் மண் தொடர்பான பிரச்சனைகளுக்கு மண்மாதிரிகளைப் பெற்று பரிசோதனை செய்து அவற்றிற்கான அறிக்கை சமர்ப்பித்து பரிந்துரை வழங்குதல்.
  2. நீர்முகாமைத்துவ பிரிவு: கரையோர பகுதிகளில் ஏற்படும் உவர்பிரச்சனைகளையும் ஏனைய நீர்முகாமைத்துவ பிரச்சனைகளையும் இனங்கண்டு ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
  3. பூச்சி மற்றும் விலாங்குப்புழு பிரிவு: வயற்பயிர்களில் உருவாகும் பீடை மற்றும் விலாங்குப்புழு தாக்கம் பற்றிய ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
  4. தாவர நோயியற்பிரிவு: மிளகாய், சின்னவெங்காயம், சோளம் மற்றும் பயிரிடப்படும் பயிர்களில் உருவாகும் நோய் சம்பந்தமான ஆராய்ச்சிகளை மேற்கொண்டு அவற்றிற்கான தீர்வுகளை வழங்குதல்.
  5. பயிராக்கவியல் பிரிவு: சரியான பயிர் இடைவெளி, ஊடுபயிர்,கத்தரித்தல் மற்றும் களை மேலாண்மை போன்ற பயிராக்கவியல் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
  6. பழப்பயிர் பிரிவு:  வாழை,   திராட்சை, மா மற்றும் மரக்கறிப்பயிர் செய்கைகளுக்கான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளல்.
நிறுவனத் தலைவர் - விவசாய ஆராய்ச்சி நிலையம் - திருநெல்வேலி

திருமதி பா.பாலகௌரி

பிரதிப்பணிப்பாளர் (ஆராய்ச்சி)
விவசாய ஆராய்ச்சி நிலையம்
திருநெல்வேலி

எம்மை தொடர்புகொள்ள