FCRDI Divisions [Ongoing Page] – Agronomy Division – Tamil

FCRDI- MI LOGO

இப்பக்கம் வடிவமைப்பு செயற்பாட்டில் இருப்பதனால்  அதுவரைக்கும் கீழேயுள்ள பக்கங்களை அணுகவும்.

FCRDI இன் பிரிவுகள்

பயிரியல் பிரிவு

இப்பிரிவின் நோக்கம்

இலங்கையின் உலர் வலயத்தில்  பல்வேறு விவசாய முறைகளில் இயற்கை வளங்களின் நீடித்த பயன்பாடு மற்றும் உயிரிலித்தகைப்புக்களை திறன்பட நிர்வகிப்பதன் மூலம் அதிக உற்பத்தித்திறனை பெற்றுக்கொள்ள பொருத்தமான பயிர் முகாமைத்துவ நடைமுறைகள் மற்றும் பயிர்முறைகளை உருவாக்குதல்.

சேவைகள்

  1. கீழ்வரும் அம்சங்களில் பயிற்சி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடாத்துதல்
    • வேறுபட்ட விவசாய சூழல்களில் மறு வயற்பயிர்களின் விவசாய நடைமுறைகள்.
    • மறு வயற்பயிர்ச்செய்கையில் காலநிலை மாற்றத்தின் தாக்கங்களும் அதற்கான தீர்வு முறைகளும்.
    • உலர்வலயத்தில் மறு வயற்பயிர்ச்செய்கையின் சாத்தியமான விளைச்சல்.
    • மறு வயற்பயிர்ச்செய்கையில் உற்பத்தித்திறனை எவ்வாறு மேம்படுத்துதல்.
    • பல்வேறு பயிர்முறைமைகளின் உற்பத்தித்திறனை மேம்படுத்துதல்.
  2. விவசாயிகள் மற்றும் பங்குதாரர்களின் கோரிக்கையின் பேரில் வெவ்வேறு களப்பிரச்சனைகள் குறித்து பரிந்துரைகளை வழங்குவதற்கான கள ஆய்வுகள்.
  3. ஊடகங்கள் மற்றும் கண்காட்சிகள் போன்ற பிற பிரச்சாரங்கள் மூலம் விவசாய தொழிநுட்பங்களை பரப்புதல்.

தொழிநுட்பங்கள்

  • மிளகாய் பயிருக்கு மூடுபடையிடுதல், உழுதல் மற்றம் சேதனப்பசளையிடல் என்பன ஒருங்கிணைய ஆய்வு செய்யப்பட்டு அதன்விளைவு பரிசோதிக்கப்பட்டது.
  • மிளகாய்க்கு இயக்கப்பட்டுக்கு தேவையான நைதரசன் பயன்பாட்டுமுறை பரிசோதிக்கப்பட்டது.
  • நெல் சோயா மற்றும் சோளத்தின் மகரந்த மலட்டுத்தன்மையில் விதான நிலை வெப்பநிலையின் தாக்கம் சுற்றுப்புறச்சூழல் நிலமையின் கீழ் ஆய்வு செய்யப்பட்டது.
  • BG 366 மற்றும் BG 358 என்பவற்றின் விதான வெப்பநிலை மற்றும் மகரந்த கருக்கட்டல், கருக்கட்டல் ஆகியவற்றின் போது அதிக காற்று வெப்பநிலை மற்றும் மிதமான ஈரப்பதத்தின் தாக்கம் என்பன ஆய்வு செய்யப்பட்டது.
  • பெரிய வேங்காயச் செய்கையில் உமி, வைக்கோலை பகுதியாக எரிக்கச்செய்து வைக்கோல் மற்றும் கிளிசிரீடியா ஆகியவற்றை சேதன மூடுபடையாக பயன்படுத்தி ஆய்வு செய்யப்பட்டதில்  வைக்கோல் மூடுபடையாக பயன்படுத்தியபோது அதிக விளைவு பதிவாகியது. இதன் விளைச்சல் 38t /ha  மற்றும் கடுமையான நிறமுடைய குமிழ் பெறப்பட்டது.
  • இலங்கையில் பயன்படுத்தப்படும்ட றைசோபியம் inculum மூலமாக  சோயாபயிரில் வரட்சிக்குத் சகிப்புத்தன்மையானது மேம்படுத்துவது கண்டறியப்பட்டது.
  • சிறப்பான ஆரம்பவிதை ஈரப்பதன், சேமிக்கப்பயன்படுத்தும் பொருள் மற்றும் சேமிக்கும் இடம் என்பன சோயாவின் சேகரிக்கும் காலத்தை அதிகரிப்பதற்கு அதன் இயலுமை குறையாமல் இனங்காணப்பட்டது.
  • நீர்ப்பாசன நிலமையின் கீழ் புதிதாக சிபார்சு செய்யப்பட்ட பயிர் அடர்த்தி, பயிர் இடைவெளி 45cm x 30cm மற்றும் விகிதாசார நைதரசன் பயன்பாடு கலப்பினத்திற்கு வழங்கப்பட்டது. விளைச்சல் நன்மை 20 – 25 % கிடைக்கப்பெற்றது.
  • பொருத்தப்பாடான மேடைவகை, பயிர் அடர்த்தி மற்றும் உகந்த பூக்கும் ஒத்திசைவு நுட்பங்கள் என்பவற்றை இனங்காண்பதன் மூலம் கலப்பின சோள விதை உற்பத்தி நுட்பங்கள் மேம்படுத்தப்பட்டது.
  • இலங்கையில் உலர் வலய நிலைமைகளின் கீழ் அதிக விளைச்சல் திறன் கொண்ட டயோஸ்கோரியா இனங்கள் அடையாளம் காணப்பட்டன.

இப்பிரிவின் உத்தியோகத்தர்கள்

கலாநிதி M.A.P.W.K. மலவியாராய்ச்சி
முதன்மை விவசாய விஞ்ஞானி - பயிரியல்
கலாநிதி R.L. சேனநாயக்க
உதவி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) - பயிரியல்
திருமதி H.M.P.T.K. ஹெட்டிகெதர
உதவி விவசாயப் பணிப்பாளர் (ஆராய்ச்சி) - பயிரியல்