Tamil: HORDI Crop – Kiri ala

HORDI - LOGO

சேம்பு கிழங்கு

Xanthosoma sagittifolium

உயர் போசணை மிக்க பயிர் நீர்பாசனத்தின் கீழ் வருடம் முழுவதுமான செய்கை. இது பொருளாதார ரீதியில் பயன் தரக்கூடிய குறைந்த ஆபத்துடனான ஒர நிலங்களில் குறை உள்ளீட்டுடன் செய்கை பண்ணலாம்.

தொடர்புடைய வர்க்கங்கள்

கால நிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

வருடாந்த மழைவீழ்ச்சி 1500 மீ.மி தேவை. இடைப்பட்ட உலர் காலத்தில் உயர் வெப்பம் பொருத்தமானது.

மண்

பொருத்தமான பி.எச். வீச்சானது 5.5 – 5.6 அதிக சேதன பொருட்களுடனான மண் பொருத்தமானது.

தேவையான வெட்டுத்துண்டங்கள்

9000 – 10,000 தாவரம் ha

நாற்றுமேடை முகாமைத்துவம்

நடுகைப்பொருளாக தாய் தண்டு கிழங்கு பாவிக்கப்படும் தாய் தண்டு கிழங்கானது 2-2.5 அங்குல அகல துண்டுகளாக வெட்டப்படும் அவை பங்கசு நாசினி அல்லது சாம்பல் மூலம் தொற்றுநீக்கப்படும்

நிழலான இடத்தில் மணல் நாற்றுமேடையில் அல்லது துண்டங்கள் மேல் மண்,சேதன பசளை மற்றும் மணற் கலவையுடனான (1:1:1விகிதம்) கலவையில் நடப்படும் நடுகையின் போது 3-4 அங்குல இடைவெளியை துண்டங்களுக்கிடையில் பேண வேண்டும்.

5-2 மாத வயதில் தாவரம் 4-5 இலைகள் கொண்டிருக்குமாயின், தாவரம் கள நடுகைக்கு தயாராக இருக்கும்.

நிலம் தயார் செய்தல்

நிலத்தை உழுது சாதாரண மண்ணில் 45 cm x 45 cm x 45 cm அளவில் குழிகளை தயார் செய்ய வேண்டும். கடினமான மண்ணாயின் 60 cm x 60 cm x 45 cm குழிகள் தயாரிக்க வேண்டும். சேதன பொருட்களைக் கொண்டு குழிகளை நிரப்ப வேண்டும்.

நடுகை செய்தல்

நாற்றுமேடையில் இருந்து 1.5 மாத வயதுடைய நாற்றுகளை வேர் சேதமடையாதவாறு அகற்ற வேண்டும். நீர் பாசனத்துடன் சிறுபோகம், பெரும்போகம் இரண்டிலும் நடுகை செய்ய முடியும்.

நடுகை இடைவெளி

1m x 1m

பசளையிடல்

முடிந்தவரை சேதன பசளையிடவும் விவசாய திணைக்களத்தால் பரிந்துரைக்கப்பட்ட அளவில் அசேதன பசளை இடல்

1ha க்கு பரிந்துரைக்கப்பட்ட பசளை

இடவேண்டிய காலம்

யூரியா(Kg)

முச்சுபர் பொசுபேற்று (Kg)

மியூரைட் பொட்டாசு (Kg)

அடிக்கட்டு பசளை (நடுகை செய்ய 3 நாள் முதல் அல்லது நடுகை செய்து 2 வாரங்களின் பின்)

30

120

60

மேற்கட்டு பசளை 01 (நடுகைசெய்து 1.5-2 மாதங்களின் பின்)

60

60

மேற்கட்டு பசளை 02 (நடுகை செய்து 3-3.5 மாதங்களின் பின்)

60

60

4-4.5 மாத வயதின் பின் நைதரசன் பசளையை குறைக்கவும், இது பதியவளர்ச்சியை குறைப்பதோடு தண்டு கிழங்கு உருவாக்கத்தை அதிகரிக்கும்.

நீர் வழங்கல்

நீர் பாசனம் அவசியமானது. உலர் காலத்தில் இலைகள் கருகும்.

களைக் கட்டுப்பாடு

களைக் கட்டுப்பாடு அவசியமானது, முக்கியமாக பயிரின் ஆரம்ப நிலையில் ஆகும்

Pest Management

நோய் முகாமைத்துவம்

பிரதான நோயானது இலைகள் மஞ்சளாதல் கிழங்கின் உட்பகுதி அழுகல் வேரழுகல் மற்றும் இலைகள் மஞ்சளாதல் என்பன இதன் அறிகுறிகளாகும். இதை நன்கு தயாரிக்கப்பட்ட காற்றோட்டமுள்ள மண்ணுடனான நல்ல வடிகால் அமைப்பை தயாரிப்பதனால் கட்டுப்படுத்தலாம். கருக்கிய உமியை முழுமையாக எரியாத) நல்ல வளியூட்டத்துக்காக மண்ணுக்கு பயன்படுத்தலாம் இரசாயன கட்டுப்பாட்டில் அரை மணி நேரம் கணுக்களை பரிந்துரைத்த இரசாயனத்தில் அமித்திவைத்தபின் களத்தில் நடவும்.

  • Homa WP – 5g / 5l
  • Thiram WP – 7g / 5l

அறுவடை

8-10 மாதங்களில் அறுவடை செய்யலாம். முதிர்ந்த இலை நீளம், இலை வளர்ச்சி அரிதாக குறைதல்

விளைச்சல்

14-15t/ha பெறப்படும். சராசரி தண்டு கிழங்கின் நிறை 125-150 கிராம்

பழக்கப்படுத்தல்

மேற்பரப்பு வேர்களை வெட்டுவதால் பதிய வளர்ச்சி குறையும்.