Tamil: HORDI Sub Institute5-Kalpitiya

HORDI - LOGO

HORDI உப அலகுகள்

விவசாய ஆய்வு நிலையம்- கற்பிட்டி

கற்பிட்டி விவசாய ஆய்வு நிலையமானது கன்னொறுவையின் பூங்கனியியல் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தின் (HORDI) நோக்கத்தின் கீழ் வருகிறது. கற்பிட்டி தீவில் விளையும் மரக்கறிகள் மற்றும் பழங்களுக்கான தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதற்கு ARS கற்பிட்டிக்கு ஆணையிடப்பட்டுள்ளது. ARS கற்பிட்டியானது புத்தளம் மாவட்டத்தில் அமைந்துள்ளதுடன் விவசாய காலநிலை வலயமான DL3ன் கீழ் காணப்படுகிறது. தீவின் பிரதான மண் வகையானது ரெகசோல் ஆகும். இப் பிரதேசத்தில் பொதுவாக மாதுளை, திராட்சை, பப்பாசி மற்றும் கொய்யா என்பன விளையும். கற்பிட்டி விவசாயிகள் பெரும்பாலும் வளர்க்கும் மரக்கறிகளாவன சின்னவெங்காயம், பச்சை மிளகாய், கறி மிளகாய், வெள்ளரி, பாகல், கத்தரி, பீட்ரூட், பயற்றை, வெண்டி, கோலிபிளவர் மற்றும் கோவா ஆகும்.

ஆய்வுகள் மற்றும் வெளியீடுகள்

விவசாய ஆய்வு நிலையத்தில் செயல்முறையில் உள்ள ஆய்வுகள் மற்றும் வெளியீட்டு தகவல்கள் -கற்பிட்டி

மேலதிக தகவல்கள்>>

சேவைகள்
  1. பல்கலைக்கழகம் மற்றும் விவசாய கல்லூரிகள் மாணவர்கள், விவசாயிகள் மற்றும் திணைக்களம் மற்றும் தொடர்புடைய அதிகாரிகளுக்கான பயிற்சிகள்
  2. தாவர நடுகை பொருள் உற்பத்தி செய்தல்- மாதுளை, கொய்யா, மரக்கறிகள்
  3. வெளியூர் மரக்கறி வர்க்கங்களின் மதிப்பீடு
  4. சிறப்பு பசளை சோதனை நிகழ்ச்சி
செயற்பாடுகள்
  • ஆய்வுகள் மற்றும் ஆய்வுத்திட்டங்கள்- முக்கியமான மண் வளம்., பசளை மற்றும் நீரின் தர மதிப்பீட்டில்
  • விவசாயம் சார் பயிற்சி கற்கை மற்றும் பழ மற்றும் செய்கைக்கான பரிசோதனை
  • புதிய வர்க்க அறிமுகத்திற்காக விருத்தியாளருடன் இணைந்த ஆய்வு
  • விதை பெருக்கம் மற்றும் விருத்தியாளர் விதை உற்பத்தி
  • வெளியூர் வர்க்க மதிப்பீடு
  • சேதன மற்றும் அசேதன பசளை பரிசோதனை
  • NCVT சோதனைகள் – மரக்கறி, தானியம், கிழங்கு பயிர், மறுவயற் பயிர்
  • நடுகை பொருள் உற்பத்தி- குறிப்பாக பரிந்துரைக்கப்பட்ட வர்கங்களின் உற்பத்தி மையம்
  • பல்கலைக்கழகங்களுடன் இணைந்த ஆய்வு மற்றும் சோதனை
  • தாய் தாவரங்களை பராமரித்தல்- மாதுளை, கொய்யா, திராட்சை
  • அரச மற்றும் தனியார் துறையின் ஏனைய நிறுவனங்களுடன் இணங்கிய வேலை
  • விவசாயிகள், பாடசாலை மாணவர்கள், பல்லைக்கழக மாணவர்கள் மற்றும் அரச அலுவலகர்களுக்கான பயிற்சி திட்டங்களை ஒழுங்கு செய்தல்
  • வளிமண்டலவியல் தரவு சேகரிப்பு மற்றும் அறிக்கை
  • நிலையத்தில் நிர்வாகம் மற்றும் அலுவலக வேலைகள்

உப நிலையங்களில் உள்ள அலுவலகர்கள்- ARS கற்பிட்டி

திரு. எஸ்.பி.ஆனந்த வீரவர்ண

பிரதி பணிப்பாளர் (ஆராய்ச்சி)

எங்களை தொடர்பு கொள்ள

இணைப்புகள்