- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
வெள்ளரிக்காய்
Cucumis sativus
வெள்ளரிக்காய் சமையல் வகை அல்லது சலாது வகையில் பிரபல்யமான ஒரு மரக்கறி
வெளியிடப்பட்ட வர்க்கங்கள்
காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
வருடம் முழுவதும் ஈரவலயத்திலும் பெரும் போகத்தில் உலர் வலங்களிலும் செய்கை பண்ணலாம். கடல் மட்டத்தில் இருந்து 1000 மீற்றர் வரை செய்கை பண்ணலாம். 300C பொருத்தமான வெப்பநிலையாகும்.
மண்
நல்ல நீர் வடிப்பு மற்றும் சேதன பொருட்கள் கொண்ட மாறுபட்ட மண் வகைகளில் செய்கை செய்யலாம். பொருத்தமான pH 5.5-7.5 ஆகும்.
வித்து தேவை
1 kg/ha
நாற்று மேடை முகாமைத்துவம்
நாற்றுமேடை அவசியமில்லை நேரடி விதைப்பு போதுமானது
நிலத்தை தயாரிப்பு
களை களகற்றி சுத்தம் செய்த பின், 30cm x 30cmx30cmஅளவில் குழிகளை தயார் செய்தல்
நடுகை செய்தல்
நேரடி விதைப்பு
நடுகை இடைவெ ளி
1m x 1m இடைவெளி தனி செய்கைக்கு பொருந்தும். சில நேரங்களில் இந்த பயிர் கலப்பு பயிராக செய்யப்படும்.
பசளையிடல்
இட வேண்டிய காலம் | யூரியா kg/ha | முச்சுபர் பொசுபேற்று kg/ha | மியூரைட் பொட்டாசு kg/ha |
அடிக்கட்டுப் பசளை | 75 | 200 | 60 |
4 வாரங்களில் பின் | 75 | – | 60 |
5 வாரங்களின் பின் | 75 | – | 60 |
நீர் வழங்கல்
நீர் தேங்காது போதியளவு நீர் வழங்கல்
களைக் கட்டுப்பாடு
ஆரம்ப நிலையில் களைகளை அகற்றல் மூடுபடை இடுவது களைக் கட்டுப்பாட்டிற்கு சிறந்தது.
அறுவடை செய்தல்
விளைச்சல்
திறந்த மகரந்த சேர்க்கை வர்க்கங்கள் 15-20 t/ha
கலப்பின வர்க்கங்கள் 25-30 t/ha
பீடை முகாமைத்துவம்
இந்த விளக்கம் விரைவில் கிடைக்கும் …
அதுவரை தயவு செய்து கீழுள்ள இணைப்பு மூலம் சிங்கள மொழி பக்கத்தின் பூச்சி கட்டுப்பாட்டை அனுகவும்.
நோய் முகாமைத்துவம்
- பங்கசு நோய்கள்
- முதலில் முதிர்ந்த இலைகளில் வெளிர் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும்
- இந்த புள்ளிகள் பெரிதாகி வெள்ளையாகும், இலைகளின் மேல்புறத்தில் பஞ்சு போன்ற மைசிலியம் உருவாகும்
- தீவிர பாதிப்புக்குட்பட்ட இலைகள் கபிலமாகி சுருங்கி மற்றும் உதிர்வு என்பன ஏற்படும்
- நோய் விருத்தியுற்ற ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவணை ( குறிப்பு: 2019, DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
- அறுவடைக்கு பின் பாதிக்கப்பட்ட தாவர கழிவுகளை அகற்றல்
நோயாக்கி : Pseudoperonospora cubensis
அறிகுறிகள்:
- இலை மேற்புறத்தில் இலை நரம்புகளால் கோணலான மஞ்சல் புள்ளிகள் உருவாகின்றன
- இலைகள் மஞ்சலாக மாறி இறுதியில் இலைய இறப்பு மற்றும் விருந்து வழங்கி தாவர கலம் இறக்கும்
முகாமைத்துவம்:
- நோய் விருத்தியடைந்து ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பயன்பாடு (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
- அறுவடையின் பின் பாதிக்கப்பட்ட தாவர கழிவுகளை அகற்றல்
நோயாக்கி: Sclerotium spp., Fusarium spp.
அறிகுறிகள்:
- ஆரம்பத்தில் தாவரம் தற்காலிக வாடல் குறிகளை காட்டும்
- இலைகள் மஞ்சளாதல், தளர்வான கொந்தளிப்பு மற்றும் உதிர்வை காட்டும்
- சமமாக தாவரங்கள் இறக்கும்
- கழுத்துப்பகுதியில் உள்ள நரம்பு முடிச்சிகள் மஞ்சள் அல்லது கபிலமாகும்
முகாமைத்துவம்:
- பாதிக்கப்பட்ட தாவரங்களை மண்ணுடன் அழித்தல்
- நீர் வடிகாலை மேம்படுத்தல்
- நோய் விருத்தியடையும் ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவனை (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
நோயாக்கி: Didymella bryoniae
அறிகுறிகள்:
- இலைகளில் மற்றும் பழங்களில் உள்ள காயங்களில் வழமையான நீர் ஊரிய பகுதிகள் பரவலடையும்
- ஆரம்பத்தில் மஞ்சளான ஒளிவட்டமானது இளம் கபில மற்றும் ஒழுங்கற்ற வெளிக்கோடுகள் ஆகும்
- பழங்களில் இருண்ட விரிசல்களுடனான குழிவான அடையாளங்கள் காணப்படும்
- குழிவான , புற்றுநோயால் தாவரம் சரியும்
- தண்டுகளில் உள்ள புள்ளிகள் நீண்டு கோடுகளாகும் மற்றும் பசை போன்ற திரவம் வெடிப்புகளில் இருந்து வரும்
- பழம்,தண்டு அல்லது இலைகளில் கடும் கபிலம் முதல் விருத்தி உடல்கள் (pycnidia) காணப்படும்
முகாமைத்துவம்:
- பங்கசு வாழ்தகவை குறைக்க அறுவடையின் பின் உடனடியாக தாவர கழிவுகள் ஆழத்திற்கு உழ வேண்டும்
- நோய் விருத்தியடையும் ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவனை (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
- பற்றீரிய நோய்
- சடுதியான இலை உதிர்வு
- முழுத்தாவரமும் இறுதியில் வாடும்
- இலைகள் கபிலமாகி காயும்
- நரம்புகள் வெளிரல்
- நிரந்தர வாடல்
- பாதிக்கப்பட்ட மண், நீர் , தாவர கழிவு, நெமற்றோடு மற்றும் பூச்சிகள், கத்தரித்தல், களைகள் விருந்து தாவரமாக இருத்தல்
- பாதிக்கப்பட்ட தாவரத்தை மண்ணுடன் அழித்தல்
- எளிதில் பாதிப்படையாத தாவரங்களுடனான பயிர் சுழற்சி முறை (வெண்டி, சோளம்)
- குருசிபெரேசியே பயிர்களுடனான கலப்பு பயிர்ச் செய்கை
- பாதிக்கப்பட்ட களத்தில் இருந்து ஆரோக்கியமான களத்திற்கு உபகரணங்களை எடுத்துச் செல்வதை தவிர்த்தல்
- வைரஸ் நோய்கள்
- மேற்புற சுருளல்,குருகுதல் மற்றும் அடையாளங்கள்
- தாவரம் குறளடைதல் மற்றும் பழங்கள் விகாரமடைதல்
- இலைகளில் சித்திர வடிவம் மற்றும் அடையாளங்கள்
- இலை திரிபடைதல்
- பழங்கள் விகாரமடைதல் மற்றும் உருவளவு குறைதல்
- தீவிர பாதிப்பில், பழ மேற்பரப்பில் எண்ணெய் தன்மையான அடையாளங்கள் ஏற்படல்
காவி விதையிலுள்ள சாறு மூலம்
அறிகுறிகள்:
- பச்சை புள்ளிகள், இலை உரு திரிபடைதல்
- பழங்களில் பச்சை புள்ளிகள், பிரகாசமான மஞ்சளாகி சிதைவடையும்
- பழங்கள் விகாரமடைதல்
அறிகுறிகள்
- குறளடைதல், மஞ்சளாதல்,வெளிரல் (காலத்திற்கு), சித்திரவுரு, இலை திரிபு (கொப்புளங்கள் தொடராக காணப்படல்)
- பழங்கள் நிறமற்று போதல் மற்றும் திரிபடைதல்
- பைடோபிளாஸ்மா நோய்