Tamil: HORDI Crop – Bean

HORDI - LOGO

போஞ்சி

Phaseolus vulgaris L.

போஞ்சி பெபேசியே குடும்பம் மற்றும் பெசியோலஸ் இனத்தை சேர்ந்தது.​ இது பரவலாக பதுளை, நுவரெலியா, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களில் பயிர்செய்யப்படும். உயர் வெப்பநிலை (>320C) மற்றும் தொடர்ச்சியான உயர் மழைவீழ்ச்சி கொண்ட பிரசேதம் போஞ்சி செய்கைக்கு பொருத்தமற்றது. பூ பூக்கும் காலத்தில் வெப்பநிலை கட்டாயம் 300C ஐ விட குறைவாக இருக்க வேண்டும்  ஏனெனில், உயர் வெப்பநிலை பூத்தல் மற்றும் காய்  உருவாக்கத்தை மோசமாக பாதிக்கும் அத்துடன் போஞ்சி பிரதானமாக மலை நாட்டு இடை வலயங்களில் பயிரிடப்படும். மேலும் மலை நாட்டு உலர் வலயத்திலும் பயிரிடப்படும்.

போஞ்சி அதன் வளரும் தன்மை கொண்டு இரு வகையாக பிரிக்கப்படும் அவை கொடி வகை ‘ போல் போஞ்சி’ மற்றும் புதர் வகை ‘புதர் போஞ்சி’ ஆகும். கொடி வகையானது விவசாயி மற்றும் நுகர்வோரிடத்தில் மிக பிரபல்யமானது. கொடி போஞ்சி வர்க்கமானது  தொடர்ச்சியாக வளரும் மற்றும் மேல் நோக்கி வளர அதற்கு  ஆதாரம் தேவை. கொடி போஞ்சி காய்கள் பெரிய  அளவில் இளம் நிறமானவை. புதர் போஞ்சி பெரிய அளவில் விளைச்சலை உற்பத்தி செய்யாது மற்றும் காய்கள் கடும் பச்சை நிறமானவை. பொதுவாக இது இரு பிரதான பயிர் செய்கைக்கு நடுவில்  இடைப்பயிராக செய்யப்படும்.

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

கொடி வகை ( போல் போஞ்சி)
புதர் வகை (புதர் போஞ்சி)

காலநிலை தேவை / பயிர்செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

மலைநாட்டு இடை வலயம் மற்றும் மலை நாட்டு ஈரவலயம் (பதுளை, நுவரெலியா, மாத்தளை மற்றும் கண்டி மாவட்டம்) என்பன பயிர் செய்கைக்கு மிக பொருத்தமான இடங்கள்

மண்

நல்ல வடிகாலுடன் செம்மஞ்சள் பொட்சோலிக் மண் மற்றும் இருவாட்டி அல்லது மணல் இருவாட்டி இழையமைப்பு உகந்தது. மண் அதிக களி தன்மையில் குறைந்த வடிப்புடன் காணப்படின் அது வேர் அழுகல் மற்றும் பூ உதிர்வுக்கு காரணமாகும். சிறந்த வளர்ச்சிக்கான பொருத்தமான மண் pH5 – 6.5 ஆகும்

விதைத் தேவை

கொடி வகை – 50 kg/ha

புதர் வகை – 75 kg/ha

நாற்றுமேடை முகாமைத்துவம் / நடுகைக் காலம்

நாற்றுமேடை தேவையில்லை. நேரடி விதைப்பு பொதுவாக செய்யப்படும்

பதுளை மாவட்டம் –

  • பெரும்போகம் – நவம்பர், டிசம்பர்
  • சிறுபோகம் – மார்ச், ஏப்ரல்

நிலப்பண்படுத்தல்

மண்ணை உழுது தூர்வையாக்கவும் மற்றும் மூன்று வரிசைகள் அமைக்கும் வன்னம் நிலத்தை தயார் செய்தல். பரிந்துரைத்த அளவில் குழிகளை தயார் செய்தல்

நடுகை செய்தல்

நடுகை செய்ய முன்னர் 24 மணிநேரத்திற்கு விதைகளை ஊறவிடவும். 3-4 விதைகள் ஒரு நடுகை குழிக்கு எனும் ஒழுங்கில் நடவும். மேடைக்கு நன்கு நீர் ஊற்றல். முளைத்து இரு வாரங்களின் பின் இரு ஆரோக்கியமான நாற்றுகளை ஒரு நடுகை குழியில் வைத்து ஏனைய நாற்றுகளை அகற்றல்.

நடுகை இடை வெளி

கொடி வகை – வரிகளுக்கு இடையில் 50 செ.மீ மற்றும் பயிர்களுக்கு இடையில் 40 செ.மீ

புதர் வகை – வரிகளுக்கு இடையில் 50 செ.மீ மற்றும் பயிர்களுக்கு இடையில் 15 செ.மீ

பசளையிடல்

வித்து இட ஐந்து அல்லது ஆறு நாட்களுக்கு முன்னர் 10தொன் நன்கு உக்கிய சேதன உரம் இட்டு பரிந்துரைத்த அளவு அசேதன உரம் (அடிக்கட்டு பசளை) விதையிட ஒன்று அல்லது இரு நாட்களுக்கு முன் இடல்

கொடி போஞ்சி

இடவேண்டிய காலம்

யூரியா kg/ha

முச்சுப்பர்  பொசுபேற்று kg/ha

மியுரியேற்று ஒப் பொட்டாசு kg/ha

அடிக்கட்டுப் பசளை

110

270*

75*

மேற்கட்டு பசளை

110

75

புதர் போஞ்சி

அடிக்கட்டுப் பசளை

85

165*

65*

மேற்கட்டு பசளை (நடுகைசெய்து மூன்று வாரத்தின் பின்)

85

65

* இதனை மண் சோதனையின் பின் இடுவது சிறந்தது.

 

நீர் பாசனம்

பூத்தல் மற்றும் காய் உருவாகும் போது மண் ஈரத்தன்மை பொருத்தமான அளவில் பேணுவதால் உயர் விளைச்சல் பெறலாம். ஆகையால், மழை கிடைக்காத போது துணை நீர் பாசனம் செய்ய வேண்டும்.

களை கட்டுப்பாடு

களத்தை களைகள் இன்றி பராமரிப்பதால் பீடை, நோய் கட்டுப்பாட்டுடன், ஊட்டசத்து குறைபாட்டை குறைக்கலாம்.

பீடை முகாமைத்துவம்

வளரும் பருவத்தில் அநேகமான பூச்சிப் பீடைகள் தாவரம் மற்றும் காய்களை சேதப்படுத்தும். பரிந்துரைக்கப்பட்ட இரசாயனங்களை தெளித்தல் அல்லது வித்து சிகிச்சை மூலம் அந்த பீடைகளை கட்டுப்படுத்தலாம்.

பொதுப் பெயர்

விஞ்ஞானபெயர்

போஞ்சி ஈ

Ophiomyia phaseoli

சிற்றுண்ணு

Tetranychus urticae

பனிப்பூச்சி

Thrips spp

வெண் ஈ

Bemisia tabaci

அழுக்கணவன்

Aphis spp

காய் துளைப்பான்

Maruka vitrata

நோய் முகாமைத்துவம்

போஞ்சி செய்கையில் நான்கு நோய்கள் பிரதானமானவை. இந்த நோய் தாக்கம் உயர் மழை வீழச்சியில் (பெரும்போகம்) தீவிரமடையும். பங்கசு நாசினியின்றி கட்டுப்படுத்த முடியாது. நோயை கட்டுப்படுத்த விவசாய திணைக்களம் பரிந்துரைத்த அளவு பங்கசு நாசினி பாவிக்கவும்.

நோய்

நோய் ஏற்படுத்தும் காரணி

பாதிக்கும் பகுதி

அந்திரக்னோஸ்

Coletotrichum lindemuthianum

காய், இலை மற்றும் தண்டு

துரு

Uromyces appendiculatus

இலை மற்றும் காய்

கோணல் இலைப் புள்ளி

Phaeoisariopsis griseola

இலைகள் மற்றும் காய்

வேரழுகல்

Fusarium oxysporum

Fusarium solani

வேர் மற்றும் அடித்தண்டு

  • போஞ்சி செய்கையின் நான்கு வைரஸ் நோய்கள் பொதுவானவை
  • பாதிக்கப்பட்ட இலைகள் சித்திர வடிவமாக அல்லது மஞ்சள் / தங்க நிறமாக மாறும்
  • நோய் பரவலை கட்டுப்படுத்த பாதிக்கப்பட்ட தாவரத்தை முடிந்த வரை வேகமாக அகற்றி அழிக்கவும்
  • வைரஸ் காவிகளுக்கு எதிராக பரிந்துரைக்கப்பட்ட பூச்சிநாசினி பயன்பாடு

பொதுப்பெயர்

காவி

பொதுவான போஞ்சி மொசாக் வைரஸ் (BCMV)

அழுக்கணவன்

போஞ்சி மஞ்சள் மொசாக் வைரஸ் (BYMV)

அழுக்கணவன்

போஞ்சி தங்க மொசாக் வைரஸ் (BGMV)

வேண் ஈ

கொள்ளு மஞ்சள் மொசாக் வைரஸ் (HYMV)

பனிப்பூச்சி

அறுவடை

  • முதிர்ச்சி அடைய முன் காய்களை பறித்தல் (இளம் காய்)
  • நடுகை செய்து 60 நாட்களின் பின் கொடி வகையை அறுவடை செய்யலாம்.
  • நடுகை செய்து 45 நாட்களின் பின் புதர் வகையை அறுவடை செய்யலாம்.
  • கன்னொறுவை பில் ஒவ்வொரு 4 நாட்களிலும் ஏனைய வர்க்கங்கள் ஒவ்வொரு 7 நாட்களிலும் அறுவடை செய்யலாம்.

விளைச்சல்

  • புதர் வகை 5 – 10 t/ha
  • கன்னொறுவை கிறீன் 18-20t/ha
  • கன்னொறுவை பில் 20 t/ha
  • கெகுளு போஞ்சி – 25 t/ha
  • ஏனைய கொடி வகை 12-16 t/ha

அறுவடைக்கு பின் கையாளுதல்

அறுவடை செய்யப்பட்ட காய்களை நிழலில் வைத்தல்

போதுமான காற்றோட்டத்துடன் பெட்டி அல்லது பைகளில் கவனமாக பொதியிடல்

தனித்துவமான பயிர் முகாமைத்துவ பயிற்சி

  • நடுகை செய்து 2-3 வாரங்களின் பின் கொடி வகை வர்க்கத்திற்கு ஆதாரம் வழங்குதல்
  • ஆதாரத்திற்கு 6-7 அடி உயரமான குச்சியை பயன்படுத்தவும்
  • கெபடிபொல நில் வர்க்கத்திலிருந்து அதிக விளைச்சல் பெற தாங்கும் தடுக்கு பயன்படும்