- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
கரட்
Daucus carota
கரட் எபேசியா குடும்பத்தை சேர்ந்ததாகும். இதை அனைத்து விவசாய காலநிலை வலயத்திலும் வெற்றிகரமாக வளர்க்கலாம்.
பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்
அவசியமான காலநிலை / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
மலையக பிரதேசத்தின் குளிரான இடங்களில் கரட் நன்றாக வளரும். இதை அனைத்து விவசாய காலநிலை வலயங்களிலும் செய்கை பண்ணலாம்.
மண்
இதற்கு நன்கு தயார்செய்யப்பட்ட நன்கு நீர் வழிந்தோடக்கூடிய அதிக சேதன பொருட்கள் கொண்ட மண் தேவை
தேவையான விதை
ஹெக்டேயருக்கு 4 கி.கி விதை
நாற்றுமேடை முகாமைத்துவம்
நேரடி விதையிடல்
நிலப்பண்படுத்தல்
நடுகைக்கு மண்ணை 30 செ.மீ ஆழம் வரை பிரட்டி தூர்வையாக்கவும். விதைகள் உயர் பாத்திகளின் 1 மீ இடைவெளியில் நடவேண்டும்.
நடுகை
நேரடி விதையிடல் – வரிசையில் விதையிடவும்
இடைவெளி
வரிகளுக்கிடையிலான 25 செ.மீ இலைவெளியில் நட்டு நாற்றை ஐதாக்கள் நாற்றுக்கிடையில் 5 ச.மீ இடைவெளி விட்டு
பசளையிடல்
சேதன உரம் 10 t/ha
இடவேண்டிய காலம் | யூரியா கி.கி / ஹெக் | முச்சுப்பர் பொசுபேற்று கி.கி / ஹெக் | மியூறியேற்றுப் பொட்டாசு கி.கி / ஹெக் |
அடிக்கட்டு பசளை | – | 270 | – |
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 3 வாரங்களின் பின்) | 55 | – | 43 |
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 6 வாரங்களின் பின்) | 82.5 | – | 63.5 |
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 8 வாரங்களின் பின்) | 82.5 | – | 63.5 |
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 9 வாரங்களின் பின்) | 110 | – | 85 |
நீர்பாசனம்
கரட்டில் வேர் பெரிதாகும் பருவத்தில் நீரின் தேவை அத்தியாவசியமாகும். நல்ல விசைச்சலுக்கு தொடர்ச்சியான நீர் பாசனம் தேவை
களை கட்டுப்பாடு
களைக் கட்டுப்பாடானது கையாலும் இரசாயன முறையிலும் செய்யலாம். முளைக்க முன்னரான களைநாசினி, மெற்றிபியூசனின் 0.35 கி.கி அளவானது ஒரு ஹெக்டேயருக்கு நாற்று முளைக்க முன்னர் பயன்படுத்தலாம்.
பீடை கட்டுப்பாடு
உலர் பருவத்தில் தீவிர பீடையாக காணப்படும்
பாதிப்பு அறிகுறி
நிறையுடலி உணவுக்கும் முட்டையிடவும் இலையை துளையிடும் இது இலைப்பகுதியில் புள்ளி தோற்றத்தை ஏற்படுத்தும். புழு இலைகளில் சுரங்கத்தை ஏற்படுத்துவதால் இலைகள் காய்வதோடு வாடும். பிற்கூற்று அழுகலால் இரண்டாம் நிலை தொற்று ஏற்பட்டு தாவரம் பாதிக்கப்படும்.
முகாமைத்துவம்
- தொடர்ச்சியாக கள அவதானிப்பு
- மஞ்சள் நிற ஒட்டும் தன்மை பொறி
- ஈக்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பொருத்தமான பொருட்களை கொண்டு பயிர்களை மூடுதல்
- களத்தைச சூழ உள்ள வேறு விருந்து வழங்கி தாவரங்களை அகற்றுதல்
- பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி அழித்தல்
- Diglyphus isaea புறவொட்டுண்ணிக்கான பெருக்கம்
- இயற்கையாக காணக்கூடிய hemiptarsenus Semibiclavas மற்றும் Opius spp ஒட்டுண்ணிகளை ஊக்குவித்தல்
இரசாயன கட்டுப்பாடு
- 16 லீ நீருக்கு 16 மி.லீ அளவு அசடிரெக்டிக் 1% EC
- 16 லீ நீருக்கு 9.6 மி.லீ அளவு அபமெக்டிக் 18கி/லீ EC
- 16 லீ நீருக்கு 640 கிராம் அளவு வேம்பு விதைச்சாறு
பாதிப்பு அறிகுறி
பொதுவாக இவை இரவில் தாக்கும் ஆரம்பத்தில் இலைகளில் வட்டமான துளை ஏற்படுத்தும். பின்னர், நிலமட்டத்துக்கு அண்மித்த தளிர்களை பாதிக்கும். பெரும்பாலும் தாவர அடிப்பகுதியை முளைக்கும் பருவத்தில் வெட்டும். ஒரே இரவில் தாவரத்தை பல துண்டங்களாக வெட்டி மண்ணுக்குள் தள்ளிவிடும். வெட்டப்பட்டதாவரம் பகற் பொழுதில் வாடும். கிழங்கில் உண்ணிப்பாக காண முடியாத துளைகளை ஏற்படுத்தும்
முகாமைத்துவம்
- தொடர்ச்சியான மேற்பார்வை
- கையால் சேகரித்தல் மற்றும் அழித்தல்
- களைக்கட்டுப்பாடு
- முறையா கள தூய்மை
- புழுக்களும் குடம்பிகளும் மண் மேற்பரப்பிற்கு வருமாறு மண்ணை நன்கு உழ வேண்டும்
- நிலப்பண்படுத்தலின் போது இரைகௌவிப் பறவைகள் புழுக்கள் உண்பதை ஊக்குவித்தல்
இரசாயன கட்டுப்பாடு
- 16 லீ நீரில் 32 மி.லீ அளவு புரொபெனோபஸ் 500 கி/லீ EC
- 16 லீ நீரில் 24 மி.லீ அளவு இடோபென்புரொக்ஸ் 100கி/லீ EC
பாதிப்பு அறிகுறி
ஆரம்பத்தில் சிறிய அடையாளம் போன்று ஏற்பட்டு நெமற்றோடு குடித்தொகை அதிகரிக்கையில் இது பெரிதாகும்
- மஞ்சளாதல்
- வளர்ச்சி குன்றும்
- வாடல்
- ஒழுங்கற்ற வளர்ச்சி
- பிடுங்கும் போது கிழங்குகளை காணலாம்
- விருந்து வழங்கி கிழங்குகளில் கொப்புளங்களை காணலாம்
- ஆனிவேரை முற்கரண்டியால் எடுத்தல்
- வேர்களை அணைத்தல்
முகாமைத்துவம்
- உள்நுளைவதை தடுத்தல்
- பாதிக்கப்பட்ட களத்திலிருந்து பயிர் மற்றும் மண் இடமாற்றுகையை தவிர்த்தல்
- பாதிக்கப்பட்ட களத்தினூடு பாசன நீர் வருவகை தவிர்த்தல்
- பாவணைக்கு முன் ஆயுதங்களை முழுமையாக சுத்தம் செய்தல்
- நிலத்தை இரண்டு முதல் மூன்று தடவை உழுவதால் சூரிய வெளிச்சத்திற்கு உட்படுத்தல்
- விதையிடுவதற்கு இரு வாரங்களுக்கு முன் கோழி எரு சேர்த்தல்
- பயிர் சுழற்சி
பாதிப்பு அறிகுறிகள்
நாற்று முளைக்கும்போது அழிக்கப்படல் அதிக மழைவீழ்ச்சியின் போது பாதிப்பு தீவிரம் அடையும்
முகாமைத்துவம்
- பகற் பொழுதில் அவை தங்கும் இடங்களை அழித்தல்
- நத்தைகளை பிடித்தல் மற்றும் அழித்தலை வழக்கமாக்கல்
- குப்பைகளை அகற்றி களத்தை தூய்மையாக பேணுதல்
- முறையான களைக் கட்டுப்பாடு
- தொடர்ச்சியாக கள மேற்பார்வை மற்றும் கையால் அகற்றல்
- இரைகௌவி பறவைகளில் இயற்கை வாழிடங்களை அதிகரிப்பதால் ஊக்குவித்தல்
இரசாய கட்டுப்பாடு
- 10 – 40 கி.கி / ஹெக். மெதைல் அல்டிகைட் 5% GR
- 10 – 40 கி.கி / ஹெக். மெதைல் அல்டிகைட் 3% RB
- 10 – 40 கி.கி / ஹெக். மெதைல் அல்டிகைட் 4% RB
நோய் முகாமைத்துவும்
- ஆரோக்கியமான விதை பாவனை
- கள தூய்மை
- பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி – மங்கோசெப், மனெப்
- கள தூய்மை
- களத்தின் வடிகால் அமைப்பை மேம்படுத்தல்
அறுவடை
மண்ணை இலக்குவதால் பெரிய வேர்களை (ஏறதாழ 5 செ.மீ அளவு) அறுவடை செய்யலாம்.
விளைச்சல்
30 – 40 தொன் / ஹெக்.