Tamil: HORDI Sub Institute1-Bandarawela

HORDI - LOGO

HORDI உப அலகுகள்

பிரதேச விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையம் (RARDC) பண்டாரவலை

RARDC பண்டாரவலையானது 1972ம் ஆண்டு HORDI யின் நோக்கத்தின்ன் கீழ் UCIZ ன் விவசாய சமூகத்தின் தேவைகளை வழங்க நிறுவப்பட்டது. இது கடல் மட்டத்தில் இருந்து 1400 மீற்றருக்கு மேற்பட்ட இடத்தில் மலைநாட்டு இடை வலையத்தில் அமைந்திருப்பதோடு குறிப்பாக மேல் ஊவா பிரதேசத்தில் (பதுளை மாவட்டம்) மற்றும் சப்ரகமுவ மாவட்டத்தின் பலாங்கொடை பயிரிடப்படும் பகுதியில் உணவு பயிர்களின் விளைச்சல் மற்றும் தரத்தை அதிகரிப்பதற்காக பொருத்தமான தொழில் நுட்பங்களை இனங்காணல் / உருவாக்கும் முக்கிய மையமாக செயற்படுகிறது. இது கட்டாயமாக IU2, IM2, IM3, IL2 மற்றும் WM3 ஆகிய விவசாய காலநிலை வலய பிரதேசங்ளை கொண்டுள்ளது. கட்டுப்படுத்தப்பட்ட பிரதேசத்தில் பரந்தளவிலான பயிர் பன்முகத்தன்மை காணப்படுகிறது. நிலையத்தால் கையாளப்படும் பிரதான பயிர்களாவன போஞ்சி, தக்காளி, கோவா, உருளைக் கிழங்கு மற்றும் கொண்டுவரப்பட்ட மரக்கறிகள் மற்றும் பூக்கள் UCIZல் 90 களின் பிற் பகுதியில் பாதுகாக்கப்பட்ட விவசாய துறை தொடங்கப்பட்டத்தில்  இருந்து பாதுகாக்கப்பட்ட விவசாயம் தொடர்பான ஆராய்ச்சியிப் பணிகளை தொடங்கியது. ஆய்வு நடவடிக்கைகள் பண்டாரவலை, RARDC னால் எடுத்துச் செல்லப்பட்ட அனைத்து முக்கிய விவசாயம் சார் கட்டுபாடுகளை தாவர விருத்தி தாவர பாதுகாப்பு, மண் மற்றும் தாவர போசணை முகாமைத்த்துவம், பயிராக்கவியல் மற்றும் தாவர  உயிர் தொழில் நுட்பத்தில் கவனம் செலுத்துகிறது. ஆய்வு நடவடிக்கைகள் மட்டுமின்றி, இம்மையம் தொழில்நுட்ப இடமாற்றம் மற்றும் விவசாயிகளுக்கு பயிற்சி வழங்கள், மண் பரிசோதனை அடிப்படையிலான உர பரிந்துரை, விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீரவு வழங்கல், விருத்தியாளன் வித்து மற்றும் நடுகை பொருள் உற்பத்தி மற்றும்  ஏனைய விவசாயம் சார் அபிவிருத்தி நடவடிக்கைகள்.

ஆய்வு மற்றும் வெளியீடுகள்

பிரதேச ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிலையத்தில் ஆராய்ச்சி மற்றும் வெளியீடுகள் பண்டாரவலை

மேலதிக தகவல்கள்>>

செயற்பாடுகள்
  1. உயர் விளைச்சல் மற்றும் உயர் தரத்துடனான புதிய மரக்கறி வர்க்கங்களை அபிவிருத்தி செய்தல்
  2. நோய், பீடை அபிவிருத்தி மற்றும் தாவர போசணை முகாமைத்துவ உத்திகள் மற்றும் பயிராக்கவியல் முறைகள் என்பவற்றால் உற்பத்தி மற்றும் நிலையான மரக்கறிக்கான தொழில்நுட்பங்களின் உற்பத்தி
  3. நடுகை பொருட்களின் மரபுரீதியான மற்றும் விரைவான இனப்பெருக்கத்துக்கான தொழில்நுட்ப அபிவிருத்தி
  4. சூழல் நேயமானவை மற்றும் செலவு குறைந்த தொழில்நுட்பங்களை பரிந்துரைப்பதன் மூலம் பாதுகாக்கப்பட்ட விவசாயம் சார் உற்பத்திகளின் உற்பத்தி மற்றும் தரத்தை மேம்படுத்தல்.
அலகுகள் / பிரிவுகள்

நிலையத்தில் ஏழு ஆராய்ச்சி பிரிவுகள் உள்ளன அவையாவன: தாவர இனவிருத்தி, பயிராக்கவியல், தாவர நோயியல், பூச்சியியல், பூங்கனியியல், இழைய வளர்ப்பு / உயர் தொழில்நுட்பம் மற்றும் மண் விஞ்ஞானம் மற்றும் தாவர போசணை

தொர்புடைய தொழில்நுட்பங்கள்
சேவைகள்
  • தேசிய மண்சோதனை செயற்றிட்டம்

மேலதிக தகவல்கள்>>

  • விவசாயிகளின் பிரச்சினைகளை தீர்த்தல்

உப நிலையத்திலுள்ள அலுவலகர்கள் - RARDC பண்டாரவலை

கலாநிதி கே.எம்.எஸ். கொடிகார

பிரதி பணிப்பாளர் (ஆராய்ச்சி)

செல்வி ஜி.டி.ஜி. சதுரானி

உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)

செல்வி ஜி.ஜி.எஸ்.யூ. கமகே

உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)

செல்வி டி.கே.ஏ.ஐ. ஹாஜி

உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)

செல்வி ஆர்.என். திஸ்ஸாநாயக்க

உதவி விவசாய பணிப்பாளர் (ஆராய்ச்சி)

எம்மை தொடர்பு கொள்ள

இணைப்புகள்