Tamil: HORDI Home page

HORDI - LOGO

பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்திற்கு வரவேற்கின்றோம் - HORDI

பயிர்கள்

பயிர்கள் பற்றி…

Technology

தொழில்நுட்பம்

தொழில்நுட்பங்கள் பற்றி ...

ஆராய்ச்சி

ஆராய்ச்சிகள் பற்றி ...

நோய் கண்டறிதல் மற்றும் பிற சேவைகள்

நோய் கண்டறிதல் மற்றும் பிற சேவைகள் பற்றி ...

அபிவிருத்தி திட்டங்கள்

அதிகாரிகள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு ஆராய்ச்சிப் பிரிவுகளால் உருவாக்கப்பட்ட புதிய தொழில்நுட்பங்களை பரிமாற்றல் ...

புதிய வர்க்கங்கள்

கண்டறியப்பட்ட புதிய வர்க்கங்கள் பற்றி ...

bg

எம்மை பற்றி

பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையத்திற்கு (HORDI) காய்கறி, மற்றும் கிழங்கு பயிர்கள் மற்றும் மலர் வளர்ப்பின் தொழில்நுட்ப வளர்ச்சியின் மீது பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. மேம்படுத்தப்பட்ட பயிர்களின் வளர்ச்சி, புதிய இனப்பெருக்கம் முறைகள், அறுவடைக்கு பிந்தைய மற்றும் உணவு பதப்படுத்தும் முறைகள், பாதுகாப்பான கலாச்சாரத்தின் பயன்பாடு மற்றும் இரசாயனங்களை குறைவாகச் சார்ந்து சிறந்த தாவர ஆரோக்கியத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் ஆராய்ச்சி திட்டம் கவனம் செலுத்துகின்றது. இது பிராந்திய விவசாய ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி நிறுவனங்கள், விவசாய ஆராய்ச்சி நிலையங்கள் மற்றும் பூங்கனியியல் பண்ணைகளை ஒருங்கிணைத்து, பேராதெனிய, கன்னொறுவ பிரதேசத்தில் அமைந்துள்ளது.

பணிக்கூற்று

தேசிய விவசாய பொருளாதாரத்தையும், சமூக அபிவிருத்தியையும் உறுதி செய்வதற்காக பூங்கனியியல் பயிர் துறையில் நிலைபேறான உற்பத்தித்திறன் வாய்ந்த தொழில்நுட்பங்களை விருத்தி செய்யும் மத்திய நிலையமாக பணியாற்றுதல்.

HORDI இன் வரலாறு

விவசாயத் திணைக்களம் 1912 இல் ஸ்தாபிக்கப்பட்டதுடன், நிறுவனத்தின் ஆராய்ச்சிப் பிரிவு அதன் முக்கியமான பிரிவுகளில் ஒன்றாக அமைந்தது. தேயிலை, இறப்பர், தென்னை போன்ற பெருந்தோட்டப் பயிர்கள், பொருளாதார மற்றும் அலங்கார முக்கியத்துவம் வாய்ந்த பிற தாவரங்களை நிறுவுதல் பற்றிய அறிவியல் ரீதியாக தகவல்களை வழங்குதல் இதன் முக்கியமான செயற்பாடுகளாக அமைந்தது.

தேயிலை, இறப்பர் மற்றும் தென்னை பயிர்களுக்கு மூன்று தனித்தனி நிறுவனங்கள் நிறுவப்பட்ட பின்னர் விவசாயத்துறையில் ஆராய்ச்சிகளின் முக்கியத்துவத்தினை கருத்திற் கொண்டு திணைக்களத்தின் ஆராய்ச்சிப் பிரிவு மத்திய விவசாய ஆராய்ச்சி நிலையமாக உருமாற்றம் பெற்றது.

மத்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனத்தின் புதிய ஆய்வுகூடங்களுக்கான அடிக்கல் நட்டும் வைபவம் 1958 ஜூன் 21 தினத்தன்று கெளரவ எஸ்.டப்ளியூ.ஆர்.டி பண்டாரநாயக்க தலைமையில் கன்னொருவையில் இடம்பெற்றதுடன்,  மறைந்த பிரதம மந்திரி கௌரவ டட்லி சேனநாயக்க அவர்களால் 1967 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6 ஆம் திகதி இந்நிறுவனம் அதிகாரபூர்வமாக திறந்து வைக்கப்பட்டது. இங்கு நிறுவனத்தின் நிர்வாகக் காரியாலயத்துடன், விவசாய தாவரவியல், விவசாய இரசாயனவியல், தாவர நோயியல், பூங்கனியியல் பயிர்கள், உணவுத் தொழில்நுட்பம் ஆகியவை தொடர்பிலான ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில் பிரிவுகள் அமையப்பெற்றிருந்தது. சிறு தோட்ட பயிர்கள், புகையிலை, மண் பாதுகாப்பு மற்றும் புள்ளி விவரங்கள் தொடர்பிலும் பங்களிப்பு செய்து வந்தது.

விவசாயத் திணைக்களத்தின் 1994 இல் மேற்கொள்ளப்பட்ட மறுசீரமைப்புடன் பூங்கனியியல், நெல் மற்றும் வயல் பயிர் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக மூன்று தேசிய நிறுவனங்கள் நிறுவப்பட்டன. இதனூடு கன்னொருவையில் அமையப்பெற்ற மத்திய விவசாய ஆராய்ச்சி நிறுவனம், பூங்கனியியல் தொடர்பில் மேம்படுத்தப்பட்ட ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் அடிப்படையில், பூங்கனியியல் பயிர் ஆராய்ச்சி அபிவிருத்தி நிலையம் என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.

எங்களை தொடர்பு கொள்ள

இணைப்புகள்