Tamil: HORDI Crop – Yams

HORDI - LOGO

கருணைக்கிழங்கு

Dioscore spp

உலகில் 650 இனங்கள் உள்ளன. இலங்கையில் ஒன்பது வகைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. Dioscorea alata ஒரு பிரபலமான வகையாகும். Dioscorea alata spp ஆனது நீர் கிழங்கு மற்றும் வெள்ளை கிழங்கு எனும் வெவ்வேறு பெயர்களால் பிரபல்மடைந்து உள்ளது. தாவரத்தின் எப் பகுதியிலும் ஊதா நிறத்தை அவதானிக்கலாம்.

ஏனைய இனங்களாவன

  1. Dioscorea esculenta
  2. Dioscorea rotundata
  3. Dioscorea bulbifera
  4. Dioscorea pentaphylla
  5. Dioscorea tomantosa
  6. Dioscorea trimenii
  7. Dioscorea oppositifolia

ஈர வலயத்தில் வீட்டுத் தோட்டங்களில் பருவகால பயிராக பிரதானமாக செய்கை செய்யப்படுவதோடு நீர் பாசனத்துடன் ஈர மற்றும் உலர் வலயம் இரண்டிலும் பயிரிடலாம்.

வெளியிடப்பட்டுள்ள வர்க்க்கங்கள்

காலநிலை தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

இப் பயிரை கடல்மட்டத்தில் இருந்து 900 மீற்றர் உயரம் வரையான பகுதியில் செய்கை பண்ணலாம்.

25-300 செல்சியச் உகந்த வெப்பநிலை ஆகும். 20 0C க்கு குறைந்த வெப்பநிலை பொருத்தமானதல்ல

கொடி வளர்ச்சிக்கு நீண்ட பகல் நாள் (12 1/2 மணி ) தேவைப்படுவதோடு குறுகிய நாள் 10-11 மணி) கிழங்கு உருவாக்கத்திற்கு தேவை

மண்

அதிக சேதனபொருட்களுடன் கூடிய இருவாட்டி மண்ணுடனான நல்ல நீர் வடிப்பு தேவை.

விதை / வெட்டுத் துண்டு தேவை

ஒரு ஹெக்டேயருக்கு 250 கிராம் நிறையுடைய 10,000 விதை கிழங்கு துண்டங்கள் தேவை

நாற்றுமேடை முகாமைத்துவம்

250 கிராம் நிறையுடைய வெட்டுத்துண்டங்கள் எடுக்கப்பட்டு பங்கசு நாசினி அல்லது சாம்பல் மூலம் தொற்றுநீக்க வேண்டும். மணல் நாற்று மேடையில் நடுகை செய்து வைக்கோலால் மூடி நீர் வழங்கவும். உறங்கு நிலை முடிடைந்த பின்னர் துண்டங்களில் இருந்து தளிர்கள் வெளிவரும்.

நில தயாரிப்பு

நிலத்தை உழது 1x1x1 எனும் அளவில் குழிகளை தயார் செய்து சேதன பொருட்களினால் நிரப்பிய பின் துண்டங்களை நடவும்.

நடுகை செய்தல்

சிகிச்சையளிக்கப்பட்ட கிழங்குகளை களத்தில் நேரடியாகவோ அல்லது கள நடுகைக்கு முன் நாற்றுமேடையிலேயோ நடுகை செய்யலாம். சிறந்த வளர்ச்சிக்கு 7 அடி நீள கம்புகளை நட வேண்டும்.

நடுகை இடைவெளி

பெரிய கிழங்குடைய இனங்களுக்கு 1m x 1m

சிறிய கிழங்குடைய இனங்களுக்கு 1m x 0.5m

பசளையிடல்

ஹெக்டேயருக்கு 10 தொன் சேதன பசளை இடல் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைக்கமைய அசேதன பசளையிடல்

பசளை இட வேண்டிய காலம்

யூரியா kg/ha

TSP kg/ha

MOP kg/ha

அடிக்கட்டு பசளை

65

150

60

1ம் மேற்கட்டு பசளை (நடுகை செய்து 1-1/2 மாதத்தின் பின்)

65

60

2ம் மேற்கட்டு பசளை (நடுகை செய்து 3 1/2 -4 மாதத்தின் பின்)

65

60

நீர் வழங்கல்

நல்ல வளர்ச்சிக்கு நல்ல நீர் பாசனம் தேவை குறிப்பாக முதல் மூன்று மாதங்களுக்கு

களைக் கட்டுப்பாடு

இப்பயிர் அறுவடை செய்ய நீண்டகாலம் எடுப்பதால் களைக்கட்டுப்பாடு அவசியம் 1ம் மேற் கட்டு பசளை இட முன் களைகயகற்ற வேண்டும்

Pest Management

நோய் முகாமைத்துவம்

நோய் காரணி : colletotrichum gloeosporiodes

அறிகுறிகள் :

இலைகளில் கபில புள்ளிகளை காணலாம் மற்றும் அவற்றின் காயங்களின் அளவு சீராக அதிகரிக்கும். கபில புள்ளியைப் சுற்றி மஞ்சள் நிற விளிம்பு காணப்படும். இறுதியில் கபில பரப்பு காயந்து துளைகளாகும்

முகாமைத்துவம் :

  • Carbendazin பங்கசு நாசினி தெளித்தல்
  • எதிர்ப்பு வர்க்கங்களை தெரிவு செய்தல்
  • ஆரோக்கியமான நடுகை பொருட்களை பயன்படுத்தல்
  • வயலின் தூய்மை நிலையை மேம்படுத்தல்

நோய் காரணி : Goplana dioscoreae cummins

அறிகுறிகள் :

இலைகள் கீழ் மேற்பரப்பில் மஞ்சட் கபில (துரு) நிற கொப்புளங்களை காணலாம்

முகாமைத்துவம் :

  • எதிர்ப்பு வர்க்கங்களை செய்கை செய்தல்
  • களையகற்றல்
  • Mancozeb / Azoxystrobin போன்ற பங்கசு நாசினிகளை தெளித்தல்

அறுவடை

அறுவடை செய்ய முதிர்ச்சியடையும் போது கொடிகள் மஞ்சள் நிறமாகும். 8-9 மாதங்கள் எடுக்கும்.

விளைச்சல்

ராஜ அல 35-35 t/ha

கெகுளு அல 35-38 t/ha

குகுளல 30-32 t/ha