Tamil: HORDI Crop – Winged Bean

HORDI - LOGO

சிறகவரை

Psophocarpus tetragonolobus

இது பெபேசிய குடும்பத்தை சார்ந்தது. இந்த பயிரை கடல் மட்டத்தில் இருந்து 2000 மீற்றக்கு மேல் உள்ள பிரதேசங்களில் வளர்க்கலாம். அத்துடன் சுதேச தெரிவு சிறகவரை பெரும் போகத்தில் ஒளி உணர்த்திறனால் காய் உற்பத்தி செய்யும். புதிய வர்க்கங்கள் வருடம் முழுவதும் விளைச்சல் தருவதற்காக விருத்தி செய்யப்பட்டுள்ளன.

வெளியிடப்பட்டுள்ள வர்க்கங்கள்

காலநிலை தேவை/ செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

சிறந்த செயல்திறனுக்கு 18-320C வெப்பநிலை

கடல் மட்டத்தில் இருந்து 2000 மீற்றக்கு மேல் உள்ள எந்த இடத்திலும் வளர்க்கலாம்.

மண்

நல்ல நீர் வடிந்தோடக்கூடிய சேதன பொருளுடனான மணல் இருவாட்டி அல்லது களி இருவாட்டு மண் சிறந்தது. ஆனால் களி மண்ணை விட மணல் மண்ணில் சிறப்பாக வளரும்

விதைத் தேவை

21-23 kg /ha

நாற்றுமேடை முகாமைத்துவம்

நேரடி விதைப்பு

மழை கால தொடக்கத்துடன் விதையிடலாம் அல்லது நீர் பாசன வசதி இருக்கும் பட்சத்தில் நடுகை செய்யலாம்.

நிலத்தை தயார் செய்தல்

மண்ணை ஆழமாக உழுது மண்ணை உடைக்கவும். நீர் மண்ணில் தேங்குமானால். உயர் பாத்தி அல்லது வரம்புகளை தயார் செய்து விதையிடலாம். வழங்கப்பட்ட பரிந்துரைகளுக்கு அமைய குழிகளை குறிக்க வேண்டும்.

நடுகை செய்தல்

சிறந்த முளைதிறனுக்கு நடுகை செய்ய 24 மணிநேரத்திற்கு முன்னர் விதைகளை நீரில் ஊறவிட வேண்டும். ”கெப்டன்” போன்ற பங்கசு நாசினிகளை இட்டு வித்து சிகிச்சை வழங்குவது சிறந்தது. ஒரு குழிக்கு 3-4 விதையிட வேண்டும்.

நாற்று முளைத்து 2 வாரங்களின் பின், 2 ஆரோக்கியமான தாவரத்தை விட்டு ஏனையவற்றை அகற்றுதல்

பயிற்சியளித்தல்

குழிக்கு அருகில் 7 அடி கம்புகளை நடுவதால் கொடிகளுக்கு ஆதாரம் வழங்கலாம்.

கொடிகளை கம்பங்களுக்கு பழக்கப்படுத்தல்

நடுகை இடைவெளி

வரிகள் மற்றும் தாவரங்களுக்கு இடையே முறையே 75cm x 60cm

பசளையிடல்

10t/ha நல்ல உக்கிய சேதன பொருட்களை சேர்த்தல். பரிந்துரைக்கப்பட்ட இரசாயன பசளையை மேலதிகமாக சேர்த்தல். நடுகை செய்ய 2-3 நாட்களுக்கு முன்னர் அடிக்கட்டு பசளை இடல்.

பசளை இட வேண்டிய காலம்யூரியா kg/haமுச்சுபர் பொசுபேற்று kg/haமியுரைட்டு பொட்டாசு kg/ha
அடிக்கட்டு பசளை (நடுகை  செய்ய 2 நாட்களுக்கு முன்)

45

215

65

1ம் மேற்கட்டு பசளை (நடுகை செய்து 4 நாட்களின் பின்)

20

1ம் மேற்கட்டு பசளை (நடுகை செய்து 10 நாட்களின் பின்)

20

நீர் வழங்கல்

உலர் கால நிலையில் கிழமைக்கு ஒரு தடவை பயிருக்கு நீர் வழங்கல். மணல் மண்ணுக்கு குறைந்த வீதத்தில் நீர் வழங்கல்.

களைக் கட்டுப்பாடு

ஆரம்ப கட்டத்தில் பயிர் மெதுவாகவே வளரும், ஆகையால் களைக்கட்டுப்பாட்டில் சிறந்த கவனம் செலுத்த வேண்டும். களைக்கட்டுப்பாடு விதை முளைத்து 1,3,5,7 மற்றும் 12ம் வாரங்களில் பரிந்துரைக்கப்படுகிறது.

Pest Management

நோய் முகாமைத்துவம்

நோய் காரணி : Ralstonia solanacearum

அறிகுறிகள் :

வயற் கொள்ளளவு நிலையில் காணப்படும் போதும் தாவரத்தில் திடீர் வாடல் ஏற்படல் தண்டு துண்டை (வேரை அண்டிய பகுதி) நீரில் அமிழ்த்தும் போது பிசின் வெளியேறலை அவதானிக்க முடியும்.

முகாமைத்துவம்:

  • பாதிப்புற்ற தாவரங்களை மண்ணுடன் அகற்றல்
  • நீர் வடிகால் அமைப்பை மேம்படுத்தல்
  • பற்றீரிய நோய்களுக்கு எவ்வித இரசாயன சிகிச்சைகள் இல்லை
  • வயலின் தூய்மை நிலையை மேம்படுத்தல்

அறுவடை

ஒவ்வொரு 3-4 நாட்களில் காய்களை அறுவடை செய்தல்

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்களில் 70-75 நாட்களில் முதல் அறுவடை பெறலாம். ஆனால் அதிகமாக சுதேச வர்க்கங்கள் பயிர் செய்யப்படுவதால் 90-100 நாட்களின் பின் அறுவடை பெறலாம்.

முதல் அறுவடை பெற்று 6-7 வாரங்களின் பின் மறு அறுவடை பெறலாம்.

விளைச்சல்

SLS -44 : 15-20 t/ha

கிருஷ்ணா : 27t/ha