Tamil: HORDI Crop – Pumpkin

HORDI - LOGO

பூசணிக்காய்

Cucurbita maxima

வெளியிடப்பட்ட வர்க்கங்கள்

காலநிலை தேவைகள்/ செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

இந்த பயிர் உலர் மற்றும் இடை வலயங்களில் 500 மீற்றக்கு அதிகமான இடத்தில் வளரும். பூசணிக்காய் சிறுபோகத்தில் வளர்க்கப்படும். அதேவேளை ஸ்குவாஸ்யை பெரும்போகம் அல்லது சிறுபோகத்தில் வளர்க்கலாம்.

மண்

மண் உக்கிய பொருட்களுடனான 5.5-7.5 ph வீச்சில் காணப்பட வேண்டும்.

விதைத் தேவை

1 kg/ha

நிலம் தயாரித்தல்

a) நிலத்தை 20-30 ஆழத்திற்கு உழுதல் மற்றும் நன்கு தூர்வையாக்கல்

b) 30x30x30 cm அளவில் நடுகை குழிகளை தயார் செய்தல்

c) ஒரு நடுகை குழிக்கு 5 kg சேதன பொருட்களை சேர்த்தல், மண்ணுடன் கலந்து தரை மட்டத்தில் இருந்து 10cm உயரம் வரை குவியலாக்கல்.

நடுகை செய்தல்

தீவிர மழையின் பின் நடுகை செய்தல்

a) லோகல் ஸ்ரோய்ன்ஸ் மற்றும் A.N.K.

i) ஒரு குழிக்கு 4 விதையிடல் (விதைகளுக்கு இடையில் 10cm)

b) பட்டர் நட்

i) உயர் முளைத்திறனுடனான விதைகள் – 2 விதைகள் / குவியல்

ii) குறை முளைத்திறனுடனான விதைகள் – 3 விதைகள் / குவியல்

iii) முளைத்து 2 வாரங்களில் குவியலில் 2 தாவரம் தவிர ஏனையவற்றை அகற்றல்.

iv) பாதகமான வானிலையால் ஏற்படும் பாதிப்புகளை தடுக்க நாற்றுகளை பொலித்தீன் பைகள் அல்லது நொரிடோகோ நாற்று மேடைகளில் நடலாம்.

நடுகை இடை வெளி

a) லோகல் ஸ்ரெயின் – 3 x 3m

b) A.N.K. – 2.5 x 2.5 m

c) பட்டர் நட் – 50 x 100 cm

பசளையிடல்

N -140 kg/ha, P2O5-175 kg/ha, K2O – 105 kg/ha

பசளை இட வேண்டிய அளவுயூரியா kg/haமுச்சுபர் பொசுபேற்று Kg/haமியூரைட் பொட்டாசு kg/ha
அடிக்கட்டு பசளை220380125
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 4 மற்றும் 8 வாரங்களின் பின்)4525
பசளை இட வேண்டிய அளவுயூரியா kg/haமுச்சுபர் பொசுபேற்று Kg/haமியூரைட் பொட்டாசு kg/ha
அடிக்கட்டு பசளை7520060
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 4 மற்றும் 8 வாரங்களின் பின்)7560

நீர் வழங்கல்

a) நீர்பாசனம் அல்லது வடிகாலுக்காக நடுகை குவியலுக்கு 25 செ.மீ க்கு அப்பால் ஆழமற்ற காண்களை அமைத்தல்

b) முழுமையாக முளைக்கும் வரை தினமும் நீர்பாசனம் செய்தல் மற்றும் அதன்பின் ஒவ்வொரு 7 நாட்களும் நீர்பாசனம் செய்தல்

C) பாத்தி கள கொள்ளளவை அடையும் வரை நீர்பாசனம் செய்தல், கொடிகள் மூழ்காமல் இருப்பதில் கவனம் செலுத்துதல்

 

களைக் கட்டுப்பாடு

கைகளால் கட்டுப்படுத்தல் மற்றும் முளைத்து 3 வாரங்களின் பின் வைக்கோல் மூடுபடையிடல்

அறுவடை

பழங்களில் தூள் படலம் விருத்தியடையும் போது அறுவடை செய்யலாம்.

1 பூசணிக்காய்

a)A.N.K. – பூ பூத்து 40 நாட்களின் பின் அறுவடை செய்யலாம்.

b) சுதேச வர்க்கம் – பூ பூத்து 60 நாட்களின் பின் அறுவடை செய்யலாம்.

2 பட்டர் நட் – பூ பூத்து 20 நாட்களின் பின் அறுவடை செய்யலாம்.

விளைச்சல்

அனைத்து வர்க்கத்திற்கும் 15,000-20,000 kg/ha சராசரி விளைச்சல் மாறுபடும்.

அறுவடைக்கு பின்

a) 6-8 மாதங்கள் பூசணியை களஞ்சியபடுத்தலாம்.

b) கட்டுப்படுத்திய சூழலில் பட்டர்நட்டை 1 மாதம் வரை சேமிக்கலாம்.

Pest Management

நோய் முகாமைத்துவம்

  • பங்கசு நோய்கள்
நோயாக்கி : Podosphaera xanthii அறிகுறிகள:
  • முதலில் முதிர்ந்த இலைகளில் வெளிர் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும்
  • இந்த புள்ளிகள் பெரிதாகி வெள்ளையாகும், இலைகளின் மேல்புறத்தில் பஞ்சு போன்ற மைசிலியம் உருவாகும்
  • தீவிர பாதிப்புக்குட்பட்ட இலைகள் கபிலமாகி சுருங்கி மற்றும் உதிர்வு என்பன ஏற்படும்
முகமைத்துவம்:
  • நோய் விருத்தியுற்ற ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவணை ( குறிப்பு: 2019, DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
  • அறுவடைக்கு பின் பாதிக்கப்பட்ட தாவர கழிவுகளை அகற்றல்

நோயாக்கி : Pseudoperonospora cubensis 

அறிகுறிகள்:

  • இலை மேற்புறத்தில் இலை நரம்புகளால் கோணலான மஞ்சல் புள்ளிகள் உருவாகின்றன
  • இலைகள் மஞ்சலாக மாறி இறுதியில் இலைய இறப்பு மற்றும் விருந்து வழங்கி தாவர கலம் இறக்கும்

முகாமைத்துவம்:

  • நோய் விருத்தியடைந்து ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பயன்பாடு (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
  • அறுவடையின் பின் பாதிக்கப்பட்ட தாவர கழிவுகளை அகற்றல்

நோயாக்கி:  Sclerotium spp., Fusarium spp.

அறிகுறிகள்:

  • ஆரம்பத்தில் தாவரம் தற்காலிக வாடல் குறிகளை காட்டும்
  • இலைகள் மஞ்சளாதல், தளர்வான கொந்தளிப்பு மற்றும் உதிர்வை காட்டும்
  • சமமாக தாவரங்கள் இறக்கும்
  • கழுத்துப்பகுதியில் உள்ள நரம்பு முடிச்சிகள் மஞ்சள் அல்லது கபிலமாகும்

முகாமைத்துவம்:

  • பாதிக்கப்பட்ட தாவரங்களை மண்ணுடன் அழித்தல்
  • நீர் வடிகாலை மேம்படுத்தல்
  • நோய் விருத்தியடையும் ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவனை (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)

நோயாக்கி: Didymella bryoniae

அறிகுறிகள்:

  • இலைகளில் மற்றும் பழங்களில் உள்ள காயங்களில் வழமையான நீர் ஊரிய பகுதிகள் பரவலடையும்
  • ஆரம்பத்தில் மஞ்சளான ஒளிவட்டமானது இளம் கபில மற்றும் ஒழுங்கற்ற வெளிக்கோடுகள் ஆகும்
  • பழங்களில் இருண்ட விரிசல்களுடனான குழிவான அடையாளங்கள் காணப்படும்
  • குழிவான , புற்றுநோயால் தாவரம் சரியும்
  • தண்டுகளில் உள்ள புள்ளிகள் நீண்டு கோடுகளாகும் மற்றும் பசை போன்ற திரவம் வெடிப்புகளில் இருந்து வரும்
  • பழம்,தண்டு அல்லது இலைகளில் கடும் கபிலம் முதல் விருத்தி உடல்கள் (pycnidia) காணப்படும்

முகாமைத்துவம்:

  • பங்கசு வாழ்தகவை குறைக்க அறுவடையின் பின் உடனடியாக தாவர கழிவுகள் ஆழத்திற்கு உழ வேண்டும்
  • நோய் விருத்தியடையும் ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவனை (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
  • பற்றீரிய நோய்
நோய் காரணி : Ralstonia solanacearum அறிகுறிகள்:
  • சடுதியான இலை உதிர்வு
  • முழுத்தாவரமும் இறுதியில் வாடும்
  • இலைகள் கபிலமாகி காயும்
  • நரம்புகள் வெளிரல்
  • நிரந்தர வாடல்
நோய்காரணி பரவல்;
  • பாதிக்கப்பட்ட மண், நீர் , தாவர கழிவு, நெமற்றோடு மற்றும் பூச்சிகள், கத்தரித்தல், களைகள் விருந்து தாவரமாக இருத்தல்
நோயை கண்டறிதல் : தெளிந்த நீரில் பாதிக்கப்பட்ட தாவரத்தின் அடியை வெட்டி போடும் போது மெல்லிய பிசுபிசுப்பான பற்றீரிய சுரப்பு வெளியேறும் முகாமைத்துவம்:
  • பாதிக்கப்பட்ட தாவரத்தை மண்ணுடன் அழித்தல்
  • எளிதில் பாதிப்படையாத தாவரங்களுடனான பயிர் சுழற்சி முறை (வெண்டி, சோளம்)
  • குருசிபெரேசியே பயிர்களுடனான கலப்பு பயிர்ச் செய்கை
  • பாதிக்கப்பட்ட களத்தில் இருந்து ஆரோக்கியமான களத்திற்கு உபகரணங்களை எடுத்துச் செல்வதை தவிர்த்தல்
  • வைரஸ் நோய்கள்
வெண் ஈ மூலம் காவப்படும் (Bemicia tabaci) அறிகுறிகள்:
  • மேற்புற சுருளல்,குருகுதல் மற்றும் அடையாளங்கள்
  • தாவரம் குறளடைதல் மற்றும் பழங்கள் விகாரமடைதல்
அழுக்கணவன் மூலம் காவப்படும் அறிகுறிகள்:
  • இலைகளில் சித்திர வடிவம் மற்றும் அடையாளங்கள்
  • இலை திரிபடைதல்
  • பழங்கள் விகாரமடைதல் மற்றும் உருவளவு குறைதல்
  • தீவிர பாதிப்பில், பழ மேற்பரப்பில் எண்ணெய் தன்மையான அடையாளங்கள் ஏற்படல்

காவி விதையிலுள்ள சாறு மூலம்

அறிகுறிகள்:

  • பச்சை புள்ளிகள், இலை உரு திரிபடைதல்
  • பழங்களில் பச்சை புள்ளிகள், பிரகாசமான மஞ்சளாகி சிதைவடையும்
  • பழங்கள் விகாரமடைதல்

அறிகுறிகள்

  • குறளடைதல், மஞ்சளாதல்,வெளிரல் (காலத்திற்கு), சித்திரவுரு, இலை திரிபு (கொப்புளங்கள் தொடராக காணப்படல்)
  • பழங்கள் நிறமற்று போதல் மற்றும் திரிபடைதல்
  • பைடோபிளாஸ்மா நோய்
நோய் அறிகுறிகள் இலைகள் சிறிய, தடிப்பான மற்றும் மஞ்சள் சார் பச்சை நிறமானவை. குறுகிய கனுவிடை மற்றும் தாரவம் குறளடைந்து சூனியக்காரியின் துடைப்ப நோய் அறுகுறிகள் ஏற்பட்டு பூக்கள் பச்சையாகும் . நோய் இலை தத்தி மூலம் பரவடைகிறது நோய் கட்டுப்பாடு – பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றல். பரிந்துரைக்கப்பட்ட பூச்சி நாசினிகளை பயன்படுத்தி காவிகளை கட்டுப்படுத்தல் ( இலை தத்தி)