Tamil: HORDI Crop – Potato

HORDI - LOGO

உருளைக் கிழங்கு

Solanum tuberosum

உருளைக்கிழங்கானது சொலனேசியா குடும்பத்தை சார்ந்தது. 1850ல் சாமுவல் பேகர் என்பவரால் இது இலங்கைக்கு அறிமுகம் செய்யப்பட்டது விவசாய திணைக்களத்தால் ராகலை பண்ணையில் பாரியளவில் உருளைக் கிழங்கு செய்கை ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் இது பற்றீரியா வாடலினால் தோல்வியுற்றது. விவசாயிகள் பெரிய பயிர்ச் செய்கை போகத்திற்கான (சிறுபோகம்) விதை உற்பத்திக்காக அதிஉயரமான நிலங்களில் விதை பெருக்கம் செய்கின்றார்கள் .

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

அவசியமான காலநிலை / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

உருளை கிழங்குகளில் 240 செல்சியஸ்கு குறைவான மண் வெப்ப நிலையிலேயே கிழங்கு உற்பத்தி நிகழும் வெற்றிகரமான பயிருக்கு பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை வித்தியாசம் 100C ஐ விட அதிகமாக இருக்க வேண்டும். மலைநாட்டு பிரதேசங்களில் உருளைக் கிழங்கு நன்கு வளரும் மற்றும் வெப்பத்தை தாங்கி வளரக்கூடியவை. யாழ்ப்பாணம் மற்றும் கல்பிட்டி போன்ற உலர் நிலங்களிலும் வளரும்

மண்

அதிகசேதன பொருட்கள் கொண்ட நன்கு நீர் வழிந் தோடக்கூடிய மண் தேவை. பொருத்தமான pH வீதம் (5.5 – 6.5 ஆகும்)

விதை தேவை

2000 கிலோ கிராம் கிழங்குகள் / ha

நாற்றுமேடை முகாமைத்துவம்

N/A

நிலப்பண்படுத்தல்

மண்ணை 30 செ.மீ ஆழம் வரை உழவேண்டும் மற்றும் Ph குறைவாக இரும்பின் சுண்ணாம்பு இடவும்

நடுகை செய்தல்

உருளை கிழங்குகளை உயர் மற்றும் மேடான பாத்திகளில் நடலாம். நடுகை செய்து 30 நாட்களின் பின் மண் அணைக்க வேண்டும்.

இடைவெளி

60 x 25 cm

பசளையிடல்

உயர் நிலமான நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்கள் மற்றும் யாழ்ப்பாண மாவட்டத்தில் சுண்ணாம்பு கலந்த செம்மஞ்சள் லெற்றசோல் மண்

இடவேண்டிய காலம்யூரியா   kg/ha

முச்சுபர் பொசுபேற்று

kg/ha

மியூறியேற்றுப் பொட்டாசு kg/ha
அடிக்கட்டு பசளை55270125
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 2 வாரங்களின் பின்)110
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 3-4 வாரங்களின் பின்)165125

நுவரெலியா மற்றும் பதுளை மாவட்ட நெல் சார்ந்த பயிர்ச்செய்கை முறைக்கு

இடவேண்டிய காலம்யூரியா   kg/ha

முச்சுபர்

பொசுபேற்று kg/ha
மியூறியேற்றுப் பொட்டாசு kg/ha
அடிக்கட்டு பசளை5527085
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 2 வாரங்களின் பின்)110
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 3-4 வாரங்களின் பின்)16585

கல்பிடிய ரெகசோல் நிலத்திற்கு

இடவேண்டிய காலம்யூரியா   kg/haமுச்சுபர் பொசுபேற்று kg/haமியூறியேற்றுப் பொட்டாசு kg/ha
அடிக்கட்டு பசளை270
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 2 வாரங்களின் பின்)6550
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 4,6,8 வாரங்களின் பின்)9070

நீர் வழங்கல்

கிழங்குருவாக்கம் மற்றும் கிழங்கு பருமனடையும் போது நீர் அதிகமாக தேவை. ​ உயர் விளைச்சல் தரும் பயிரிற்கு 70% நீர் கிடைப்புத்தன்மை இருக்கவேண்டும். சால் நீர் பாசனத்தை விட துளி மற்றும் தூவல் நீர்பாசனம் சிறந்தது.

களைக் கட்டுப்பாடு

முளைக்க முன்னான களை நாசினி. களைக்கட்டுப்பாட்டிற்கு மெற்றிபியூசைன் தெளிக்கலாம். நடுகை செய்து 2 மற்றும் 4 வாரங்களில் இடைக்கலாச்சார செயற்பாடுகள் மூலம் களைகளை கட்டுப்படுத்தலாம்.

பீடை முகாமைத்துவம்

உலர் காலங்களில் தீவிர பாதிப்பாக இருக்கும் பாதிப்பு அறிகுறிகள் நிறையுடலிகள் இலைகளை துளையிட்டு உண்பதோடு முட்டையிடுகின்றன. இது இலைகளில் புள்ளி தோற்றத்தை ஏற்படுத்தும். புழு இலைகளில் சுரங்கத்தை ஏற்படுத்துவதால் இலைகள் காய்வதோடு வாடும். பிற்கூற்று அழுகலால் இரண்டாம் நிலை தொற்று ஏற்பட்டு தாவரம் கீழாக மடங்கும்
முகாமைத்துவம்
  • தொடர்ச்சியான கள மேற்பார்வை
  • மஞ்சள் நிற ஒட்டும் தன்மையான பொறி
  • ஈக்களின் தாக்கத்தில் இருந்து பாதுகாக்க பொருத்தமான பொருட்களை கொண்டு  பயிர்களை மூடுதல்
  • களத்தை சூழவுள்ள ஏனைய விருந்துவழங்கி தாவரங்களை அகற்றுதல்
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி அழித்தல்
  • Diglyphus isaea புறவொட்டுண்ணிக்கான பெருக்கம்
  • இயற்கையாக காணக்கூடிய Hemiptarsenus Semibiclaves மற்றும் Opius spp ஒட்டுண்ணிகளை ஊக்குவித்தல்
இரசாயன கட்டுப்பாடு
  • 16 லீ நீருக்கு 16 மீ.லீ அளவு அசடிரெக்டின் 1% EC
  • 16 லீ நீருக்கு 9.6 மி.லீ அளவு அபமெக்டின் 18 கி/லீ EC
  • 16 லீ நீருக்கு 640 கி அளவு வேம்பு விதைச்சாறு
களஞ்சிய நிலையில் உருளை கிழங்குகளுக்கு பாரிய பொருளாதார சேதத்தை ஏற்படுத்தும் பாதிப்பு அறிகுறிகள் களத்தில் புழுக்கள் இலைகளில் சுரங்கத்தை ஏற்படுத்தல் அல்லது இளைய தளிர் மற்றும் இலை காம்புகளில் துளை ஏற்படுத்துவதால் சேதம் ஏற்படுத்தும். இது வாடல் மற்றும் ஒளித்தொகுப்பை குறைக்கும். கிழங்காக்கத்தின் பின் புழு கிழங்கினுள் உள்நுழைந்து அவற்றை உட்கொள்கின்றன. பாதிக்கப்பட்ட கிழங்குகளுக்கு இரண்டாம் நிலை பாதிப்பான அழுகல் ஏற்படுகிறது. களஞ்சியத்தில் கிழங்கு கண்களில் நிறையுடலிகள் முட்டையிடுவதால் பாதிப்பை ஏற்படுத்துகின்றது. புழுக்கள் கிழங்கின் தோலுக்கு கீழ் ஒழுங்கற்ற கொப்புளங்களையும் பாதைகளையும் உருவாக்குகின்றன. இப்பாதைகளின் நுழைவாயில் கருப்பு நிறத்தில் எச்சங்கள் இருப்பதை கொண்டு அடையாளம்  காணலாம். புழுக்களின் பாதிப்பால் உருளைக் கிழங்குகளின் நிறை மற்றும் தரம் பாதிப்படைகிறது
முகாமைத்துவம் களத்தில்
  • தொடர்ச்சியான மேற்பார்வை
  • ஆரோக்கியமான விதைகள் ஒரளவு ஆழத்தில் நடவேண்டும்.
  • முறையான மண் அணைப்பு கிழங்குகள் வெளிகாணலை தடுக்கும்
  • பயிர் சுழற்சி முறை
  • விருந்து வழங்கி தாவர வளர்ச்சியை கட்டுப்படுத்தல்
  • முறையான நீர் பாசனத்தால் மண் வெடிப்பை குறைத்தல்
  • அறுவடையின் போது அனைத்து கிழங்குகளையும் அகற்றுதல்
  • கழிவுகளை அகற்றி களத்தை தூய்மையாக பேணல்
இரசாயன கட்டுப்பாடு
  • 16 லீ நீரில் 5 கிராம் அளவில் குளோரன்டிரானிலிபரோல் 20% + தியமெதொசம் 20% WG
களஞ்சியத்தில்
  • உருளைக்கிழங்கு அந்துபூச்சியால் பாதிக்கப்பட்ட விதை தொகுதியை களம் அல்லது களஞ்சியத்தில் இருந்து அகற்றவும்
  • முறையான களஞ்சிய தூய்மையை பேணல்
  • கிழங்குகள் சேதமடையாது, மண் அல்லது எச்சங்கள் அற்றதாக இருத்தல் வேண்டும்.
  • கிழங்குகள் குளிரான இடத்தில் களஞ்சிய படுத்த வேண்டும்
  • வித்து சிகிச்சை முறை பயன்பாடு – தியோசைகலம் (ஐதரசன் ஒட்சலேட்) 50% SP – 40g / 100kg விதைகளுக்கு
இரசாயன கட்டுப்பாடு
  • 16 லீ நீருக்கு 60 மி.லீ அளவில் பைரிமிபோஸ் மெதைல் 500g/லீ EC
  • 16 லீ நீருக்கு 16 மி.லீ அளவில் அசிடாமைபிரிட் 200g / லீ SP
  • 16 லீ நீருக்கு16 மி.லீ அளவில் நோவலூரன் 100g / லீ EC
பாதிப்பு அறிகுறிகள் பொதுவாக இவை இரவில் தாக்கும். ஆரம்பத்தில் இலைகளில் வட்டமான துளை ஏற்படுத்தும். பின்னர், நிலமட்டத்துக்கு அண்மித்த தளிர்களை பாதிக்கும். பெரும்பாலும் தாவர அடிப்பகுதியை முளைக்கும் பருவத்தில் வெட்டும். ஒரே இரவில் பல தாவரத்தை துண்டங்களாக வெட்டி மண்ணுக்குள் தள்ளிவிடும். வெட்டப்பட்ட தாவரம் பகற் பொழுதில் வாடும். கிழங்கில் உண்ணிப்பாக காண முடியாத துளைகளை ஏற்படுத்தும்.
முகாமைத்துவம்
  • தொடர்ச்சியான மேற்பார்வை
  • கையால் சேகரித்து அழித்தல்
  • களை முகாமைத்துவம்
  • முறையான கள தூய்மை
  • புழுக்களும் குடம்பிகளும் மண் மேற்பரப்பிற்கு வருமாறு மண்ணை நன்கு பண்படுத்த வேண்டும்.
  • நிலப்பண்படுத்தலின் போது இரைகௌவிப் பறவைகள் புழுக்களை உண்பதை ஊக்குவித்தல்
இரசாயன கட்டுப்பாடு
  • 16 லீ நீரில் 32 மி.லீ அளவு புரோபெனோபொஸ் 500கி/லீ EC
  • 16 லீ நீரில் 24 மி.லீ அளவு இடபென்புரொக்ஸ் 100கி / லீ EC

பாதிப்பு அறிகுறிகள்

வேர்களில் இருந்து நெமற்றோடுகள் ஊட்டச்சத்துகளை அகற்றுவதோடு வேர்களை காயப்படுத்துவதால் தண்டு மற்றும் இலைகளுக்கு வழங்கும் ஊட்டச்சத்து மற்றும் நீர் நலிவடைவதோடு வளர்ச்சி குன்றும். நடுத்தர பாதிப்புள்ள பயிரில் சாதாரணமாக கிழங்கின் அளவு குறையும். அதிக பாதிப்புடைய தாவரங்கள் குறைவளர்ச்சியுடன் தாவரம் மஞ்சளாகும். வெப்பநிலை அதிகரிக்கும் தாவர வாடல் ஏற்படும்.

முகாமைத்துவம்

உருளைக்கிழங்கு முடிச்சு நெமற்றோடு முகாமையில் மூன்று அடிப்படை சவால்கள் உள்ளன.

  • செய்நிலத்தை உருளைக்கிழங்கு முடிச்சு நெமற்றோடு இல்லாது பேணல்
  • குறை தாக்க நிலம் உயர் தாக்க நிலமாக மாறாது பேணல்
  • உயர் பீடைக் குடித்தொகையை முகாமை செய்யும் அளவிற்கு கொண்டுவரல்

தொற்று ஏற்படாத நிலத்திற்கு கீழ்வரும் அறிவுறுத்தல்களை பின்பற்றவும்

  • DOA இனால் அத்தாட்சிப்படுத்தப்பட்ட விதை பாவனை
  • விதை கிழங்கு தொற்று ஏற்பட்ட நிலத்திலிருந்து பெற்ற விதைக்கிழங்கு, மண் மற்றும் உபகரண பாவனையை தவிர்த்தல்
  • நடுகைக்கு முன் விதையை 25-30 நிமிடங்கள் 1% சோடியம் ஐபோகுளோரைட் கரைசலில் பரிகரிப்பு செய்தல்
  • நடுகைக்கு முந்திய மண் பரிசோதனை
  • உருளை கிழங்கு பயிர்களுக்கு இடையிலான இடைவெளியை பேணல்
  • குறை தாக்க நிலம் உயர் தாக்க நிலமாக மாறாது பேணல்
  • பயிர் சுழற்சி முறை
  • பயிர் செய்யாது கைவிடல்
  • இரண்டு முதல் மூன்று பருவத்திற்கு உருளைக் கிழங்கு அல்லது சொலனேசியகுடும்ப பயிர்களை பயிரிடுவதைத் தவிர்த்தல்
  • எதிர்ப்புத் திறனுடைய வர்க்கங்களின் பயன்பாடு
  • மாதிரிகளின் தொடர்பாவனை மூலம் முகாமைத்துவத்தின் வெற்றியை அறிதல்
  • உயர் பீடை குடித்தொகையை முகாமை செய்யும். அளவிற்கு கொண்டுவரல்
  • 70kg / ha எனும் அளவில் கல்சியம் ஐபோகுளோரைட் இடல்

அது மட்டுமின்றி பின்வருவன பற்றி விவசாயிகளுக்கு கற்பித்தலும் முக்கியமானது

  • உருளைக் கிழங்கு முடிச்சு நெமற்றோடு ஒரு பீடையாக அதன் முக்கியத்துவம்
  • உருளைக்கிழங்கு முடிச்சு நெமற்றோட்டை கண்டறியும் எளிய முறை
  • கட்டுபாட்டு முறை
  • புதிய நிலத்திற்கு உருளைக் கிழங்கு முடிச்சு நெமற்றோடு பரவாது தடுத்தல்
பலதரப்பட்ட வைரஸ்களின் காவி. நேரடி உணவாக உட்கொள்ளல் தாக்கம் குறிப்பிடதக்கதல்ல பாதிப்பு அறிகுறிகள் அவை அதிகளவில் இளம் தளிர்களில் இலையில் கீழ்மேற்பரப்பில் தாவர சாற்றை உறிஞ்சி குடிக்கும் அழுக்கணவானின் தீவிர தொற்றால் இளம் இலைகள் சுருளடைந்து சிதைவடையும் தேன் உருவாக்கும். இவை கரும் பூஞ்சண Sooty moud யை உருவாக்கும் வைரஸை கடத்தும்.
முகாமைத்துவம்
  • அழுக்கணவான் குடித்தொகையை கண்களால் மேற்பார்வையிடல் அல்லது மஞ்சள் நிற நீர் பொறி பாவனை
  • களத்தின் களைக் கட்டுப்பாட்டின் மூலம் விருந்துவழங்கி தாவரங்களை குறைத்தல்
  • இரைகௌவி மற்றும் ஒட்டுண்ணிகளை பாதுகாப்பதன் மூலம் பரந்த செயலாற்றும் பீடை நாசினியின் தேவையற்ற பாவனையை குறைத்தல்
இரசாயன கட்டுப்பாடு
  • 16 லீ நீருக்கு 5 கிராம் அளவில் தியமெதசம் 25% WG
  • 16 லீ நீருக்கு 2 கிராம் அளவில் இமிடோகுளோபிரிட் 70% WG
  • 16 லீ நீருக்கு 40 கிராம் அளவில் தியோசைகலம் (ஐதரசன் ஒட்சலேட்) 50% SP
  • 16 லீ நீருக்கு 5 கிராம் அளவில் குளோரன்டிரனிலிபிரோல் 20% + தியோமெதொசம் 20% WG
  • 16 லீ நீருக்கு 45 மி.லீ புரோபிசின் 25% SC
  • 16 லீ நீருக்கு 16 மி.லீ அளவு அசடிரக்டிக் 5% EC

பாதிப்பு அறிகுறி

பனிப்பூச்சி உருளைக்கிழங்கு இலைகளை சுரண்டி தாவர கலங்களின் சாற்றை உறிஞ்சுதல் மூலம் உள்ளடக்கத்தை வெளியெடுத்து உண்ணும். இலைகளை உண்பதால் பயிர்  உருமாறும். இலையின் அடிப்பகுதியில் காணப்படும், பனிப்பூச்சி உட்கொண்ட இலை தண்டு மேற்பரப்பில் வெள்ளி நிற அல்லது வெண்கல வடுக்கல் காணப்படும்.

முகாமைத்துவம்

  • விருந்து வழங்கி தாவர கிடைப்பை குறைக்க பயிர் நிலத்தில் களை கட்டுப்பாடு
  • பரந்த செயலாற்றுகை பீடைநாசினிகளின் தேவையற்ற பாவனையை குறைப்பதன் மூலம் இரை கௌவிகள் மற்றும்  ஒட்டுண்ணிகளை பாதுகாத்தல்
  • சரியான நேரத்தில் நடுகை செய்தல்
  • பயிர் சுழற்சி முறை

இரசாயன கட்டுப்பாடு

 

  • 16 லீ நீருக்கு 5 கிராம் அளவில் தியமெதசம் 25% WG
  • 16 லீ நீருக்கு 2 கிராம் இமிடோகுளேபிரிட் 70% WG
  • 16 லீ நீருக்கு 40 கிராம் அளவில் தியோசைக்லம் (ஐதரசன் ஒட்சலைட்) 50% SP
  • 16 லீ நீருக்கு 5 கிராம் அளவில் குளோரன்டிரனிலிபுரோல் 20% + தியமெதசம் 20% WG
  • 16 லீ நீருக்கு 45 மி.லீ அளவில் பியுபுரோபெசின் 25% SC
  • 16 லீ நீருக்கு 16 மி.லீ அளவில் அசடிரெக்டின் 5% EC

பாதிப்பு அறிகுறி

நிறையுடலி மற்றும் அணங்கு தாவர சாற்றை உறிஞ்சி குடித்து தாவர விரைப்பு தன்மையை குறைக்கும். தீவிர தாக்கத்தில் இலைகள் மஞ்சளாகி விழும் உயர் குடித்தொகையின் போது அவை அதிக அளவில் தென்மெழுகை சுரக்கும். இது மேற்பரப்பில் கரும் பூஞ்சணத்தை ஏற்படுத்தி தாவர ஒளித்தொகுப்பை குறைக்கும்.

முகாமைத்துவம்

  • களத்தில் உயர் தர களைக் கட்டுப்பாட்டை மேற்கொள்வதன் மூலம் விருந்து வழங்கி தாவர கிடைப்பை குறைக்கலாம்.
  • மஞ்சள் / நீல ஒட்டுந்தன்மையான பொறி பாவனை (பொறியை விதான மட்டத்தில் அல்லது அதற்கு சற்று மேலே தொங்க விடுவதால் சிறந்த பலனைப் பெறலாம்)
  • நீர் தூவல் – இடம் பெயரும் நிறையுடலி கட்டுப்பாட்டிற்கு பயனுள்ளது

இரசாயன கட்டுப்பாடு

  • 16 லீ நீருக்கு 40 கிராம் அளவில் தியோசைக்லம் (ஐதரசன் ஒக்சலேட்) 50% SP
  • 16 லீ நீருக்கு 5 கிராம் அளவில் குளோரன்டிரனிலிபுரோல் 20% + தியாமெதசோம் 20% WG
  • 16 லீ நீருக்கு 45 மி.லீ அளவில் பியுபுரோபெசின் 25% SC
  • 16 லீ நீருக்கு அசடிரக்டின் 5% Ec

இந்த பீடையானது சில சமயங்களில் ஏற்படும் பீடையாகும்

பாதிப்பு அறிகுறி

புழு வேர், தண்டு மற்றும் கிழங்கை பாதிக்கும் மற்றும் கிழங்கின் சந்தை தரத்தை குறைக்கும்

முகாமைத்துவம்

  • புழு மேற்பரப்புக்கு கொண்டு வருமாறு மண்ணை ஆழமாக உழுதல்
  • நிலப்பண்படுத்தலின் போது இரைக்கௌவி பறவைகள் புழுக்களை உண்பதை ஊக்குவித்தல்
  • பயிர் சுழற்சி
  • கள தூய்மையை அதிகரித்தல்
  • பரிந்துரைக்கப்பட்ட அளவு முறையாக உக்கிய பண்ணை கழிவு / கொம்போஸ்ட் இடல்

பாதிப்பு அறிகுறி

இலைகளின் ஓரங்கள் சீரான ஒழுங்கற்ற துளைகள் மற்றும் இளந் தளிர்களை அழித்தல். மழை அல்லது அதிகபடியான களை வளர்ச்சியின் போது தாக்கம் பொதுவானது

முகாமைத்துவம்

  • பகற் பொழுதின் தங்குமிடங்களை அழித்தல்
  • பொறிவைத்தல் மற்றும் அகற்றுதலை தொடர்ச்சியாக மேற்கொள்ளல்.
  • பயிர் மிகுதிகளை அகற்றி களத்தூய்மையை பேணல்
  • முறையான களை முகாமைத்துவம்
  • தொடர்ச்சியான கள மேற்பார்வை மற்றும் கையால் சேகரித்தல்
  • இறைகௌவி பறவைகளின் இயற்கை வாழிடங்களை மேம்படுத்துவதன் மூலம் ஊக்குவித்தல்

இரசாயன கட்டுப்பாடு

  • 10 – 40 kg / ha க்கு மெதைல் அல்டிகைட் 5% GR

நோய் முகாமைத்துவம்

  • பயிர் சுழற்சி
  • சரியான நேரத்தில் பயிர்ச் செய்கையை ஆரம்பித்தல்
  • எதிர்பு தன்மை கொண்ட வர்க்க பாவனை – காரலஸ்
  • நோயற்ற கிழங்கு பாவனை
  • பங்கசுநாசினி பயன்பாடு – மங்குசெப், மனொப், மெடலெஸிலி, புளுவசினம் .
  • பயிர் சுழற்சி
  • பங்கசுநாசினி பயன்பாடு – மங்கொசெப், மனெப்
  • நோயற்ற கிழங்கு பாவனை
  • 0 – 5.2 வரை மண் பி.எச்.யை பேணல்
  • மண் நீர் மட்டத்தை பேணல்
  • பயிர் சுழற்சி
  • பயிர் சுழற்சி
  • நோயற்ற கிழங்கு பாவனை
  • பயிர் சுழற்சி / கைவிடல்
  • நோயற்ற கிழங்கு பாவனை
  • பயிர் சுழற்சி / கைவிடல் – குறைந்தது 3 வருடங்களுக்கு
  • களத்தின் வடிகாலை மேம்படுத்தல்
  • நோயற்ற கிழங்கு பாவனை
  • பயிர் சுழற்சி
  • காவிகளை கட்டுப்படுத்தல் – அழுக்கணவான்
  • தொடர்ச்சியான கள மேற்பார்வை
  • பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றி அழித்தல்

அறுவடை

கிழங்கு முதிர்ச்சிக்கான அறுவடைக்கு 2 வாரங்களுக்கு முதல் அடித்துண்டுகள் அகற்றப்பட வேண்டும்.

விளைச்சல்

2.0 – 2.5 தொன் / ஹெக்.