- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
வெண்டி
Abelmoschus esculantus
இந்த பயிர் மல்வேசியே குடும்பத்தை சார்ந்தது. இலகுவாக வளர்க்கலாம் மற்றும் வருடம் முழுவதும் வளர்க்க முடிவதால் இது விவசாயிகள் மத்தியில் பிரபல்யமாக உள்ளது.
தற்போது இது வெற்றிகரமாக ஹம்பாந்தோட்டை, குருநாகல், இரத்தினபுரி மற்றும் மாத்தளை மாவட்டங்களில் பயிர் செய்யப்படுகிறது மற்றும் அநுராதபுரம், புத்தளம், மாத்தறை, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் பரந்து காணப்படுகின்றது. இளம் காய்கள் உட்கொள்ளப்படுகின்றன ஆனால் இந்தியா மற்றும் ஆப்பிரிகாவில் இலைகள் சுவைக்கப்படுகின்றன. இதில் போஷனை மட்டம் உயர்ந்தது. அதிக நார்ச்சத்து, கனிப்பொருள், குறிப்பாக கல்சியம் மற்றும் அயடின் போன்றவை முதிர்ச்சியடையாத காய்களில் உள்ளது. வெண்டியில் கல்சியம் மற்றும் அயடின் அதிகளவில் இருப்பதால் தைரொக்சின் தொடர்பான நோய்களை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகுக்கிறது.
தொடர்புடைய வர்க்கங்கள்
காலநிலை தேவை / பயிர்ச் செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
மலை நாட்டு ஈரவலயம் தவிர்ந்த ஏனைய அனைத்து விவசாய காலநிலை வலயத்திலும் செய்கை செய்யலாம்.
மண்
தாவரத்தின் வெற்றிகரமான வளர்ச்சிக்கு அமில அல்லது காரமான நல்ல நீர் வடிப்புள்ள மண் பொருந்தும்
விதைத் தேவை
4.5 kg/ha
நிலத்தை தயார் செய்தல்
மண்ணை உழுது தூர்வையாக்கப்பட வேண்டும். வழங்கப்பட்ட இடைவெளிக்கு அமைய குழிகளை குறிக்க வேண்டும். குழிகளை உக்கிய சேதன உரம் கொண்டு நிரப்பவும். பல வடிகால்களை அமைப்பதன் மூலம் நீர் தேங்குதல், மூழ்குதலை தடுக்கலாம்
கள நடுகை
நேரடி விதைப்பு செய்யப்படும்
விதையிட முன் 24 மணி நேரத்திற்கு விதைகளை ஊற வைக்க வேண்டும். ஒரு நடுகை குழிக்கு 3-4 விதைகள் இட வேண்டும். களத்தில் போதிய ஈரப்பதனை பேணவும்.
வித்து முளைத்து 2 வாரங்களின் பின், 2 ஆரோக்கியமான நாற்றை விட்டு ஏனைய மேலதிக நாற்றை குழியில் இருந்து அகற்றவும்.
நடுகை இடைவெளி
வரிகளுக்கு இடையில் 90 செ.மீ
தாவரங்களுக்கு இடையில் – வரிசைக்கிடையில் 60செ.மீ
பசளையிடல்
மண்ணுடன் 10t/ha உக்கிய சேதன பொருட்களை கலக்கவும். மேலதிகமாக பரிந்துரைக்கப்பட்ட இரசாயன பசளைகளை இடவும். நடுகை செய்ய 2-3 நாட்களுக்கு முன் அடிக்கட்டு பசளைகளை இடவும்
பசளை இட வேண்டிய காலம் | யூரியா kg/ha | முச்சுபர் பொசுபேற்று kg/ha | மியூரைட் பொட்டாசு kg/ha |
அடிக்கட்டு பசளை | 50 | 195 | 25 |
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 2 வாரங்களின் பின்) | 50 | – | 25 |
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 5 வாரங்களின் பின்) | 100 | – | 50 |
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 8 வாரங்களின் பின்) | 100 | – | 50 |
நீர் விநியோகம் / நீர்பாசனம்
விதைகள் முளைக்கும் வரை நாளொன்றுக்கு இரு தடவை வீதம் நீர் வழங்க வேண்டும். பின்னர் மண்ணின் ஈரலிப்பை பொருத்து நீர்பாசனம் செய்ய வேண்டும்.
களை கட்டுப்பாடு
தாவரம் இளமையாக உள்ள போது, தாவரத்தை சூழ கைகளால் களையகற்றவும். எப்போதும் களத்தை களைகளற்று பேணவும். இது நோய் மற்றும் பீடை அபாயங்களை குறைக்கும்
Pest Management
நோய் முகாமைத்துவம்
அறிகுறிகள்
நோய் கட்டுப்பாடு
|
அறிகுறிகள்
நோய் கட்டுப்பாடு
|
அறுவடை மற்றும் பதப்படுத்தல்
நடுகைசெய்து 50-100 நாட்களின் பின் ஒவ்வொரு 2 நாட்களுக்கு ஒரு தடவை என 25 தடவை அறுவடை செய்யலாம்.
காலை வேளையில் தண்டுடன் அறுவடை செய்வதால் அறுவடை பாதிக்கப்படாது
நோய் தாக்கமுள்ள, உருமாற்றமடைந்த முதிர்ந்த மற்றும் பீடை பாதிப்பு ஏற்பட்ட காய்கள் வகை படுத்தப்பட்டு அகற்றப்படல்
அறுவடை செய்த காய்களின் மீது நேரடி சூரிய ஒளி படுவதை தவிர்த்தல்
கூடைகளில் அடைக்கப்படும் போது நல்ல காற்றோட்டம் மற்றும் அறுவடை சேதம் ஏற்படாது என்பதை உறுதி செய்தல்
விளைச்சல்
காலநிலை, வர்க்கம் மற்றும் பருவநிலையால் மாறுபடும். சராசரி விளைச்சல் சுமார் ஒரு ஹெக்டேயருக்கு 10-15மெட்ரிக்தொன். OKH 1 (கலப்பு) 30t/ha விளைச்சலை சராசரியாக வழங்கும்.