
- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234

கெக்கரி
Cucumis melo
இது ஒரு போசணை மிக்க பயிர். இது நீரிழிவு, குடல் அலற்சி மற்றும் சிறுநீரககல் போன்ற நோய்களை குணப்படுத்தும்
வெளியிடப்பட்ட வர்க்கங்கள்
விவசாய திணைக்களத்தால் எவ்வித வர்க்கங்களும் பரிந்துரைக்கப்பட வில்லை. பல சுதேச வர்க்கங்கள் விவசாயிகளிடையே பிரபல்யமடைந்துள்ளன.
காலநிலை தேவை / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
இது வெப்ப காலநிலைக்கு சிறந்தது. இப்பயிர் 300 – 350C வரையான வெப்பநிலையில் வெற்றிகரமாக வளரும். கடல் மட்டத்தில் இருந்து 1000 மீற்றர் வரை வளர்க்கலாம். வருடம் முழுவதும் செய்கை பண்ணலாம்.
மண்
பரந்த வீச்சிலான மண் வகைகளில் வளர்வதுடன் அதிக சேதன பொருட்கள் கொண்ட நல்ல நீர் வடிப்புள்ள மண் சிறந்தது. மண்ணின் பீ.எச். வீச்சானது 5.5-7.5 ஆகும்.
வித்து தேவை
ஒரு ஹெக்டேயர் நிலத்துக்கு 500 கிராம் வித்து போதுமானது ஒரு கிராம் விதையில் 90-100 வரையான வித்துக்கள் காணப்படும்.
நடுகை இடைவெளி
வரிகளுக்கு இடையே மற்றும் வரிகளுக்கு உள்ளேயான இடைவெளி 1.0 மீற்றர் ஆகும்.
நிலத்தை தயார் செய்தல் மற்றும் நடுகை செய்தல்
மண்ணை 20-30 செ.மீ ஆழம் வரை உழுது பெரிய மண் கட்டிகளை உடைக்கவும். நடுகை குழிகளை 30cm3 (நீளம், அகலம் மற்றும் ஆழம்) எனும் அளவில் தயார் செய்தல் மற்றும் அதிக அளவிலான உக்கிய சேதன பொருட்களை மேல் மண்ணுடன் கலந்த கலவையை குழிகளில் இட்டு நிரப்புதல் 10 செ.மீ உயரம் வரை நிரப்புதல். ஒரு குழியில் 3-4 வித்துகளை இடல். முளைந்து 2 வாரங்களில் நலிவான நாற்றுகளை அகற்றி இரு ஆரோக்கியமான நாற்றுகளை வளரவிடல்.
செய்கை காலம்
வருடம் முழுவதுமான செய்கை
பசளையிடல்
இட வேண்டிய நேரம் | யூரியா kg/ha | முச்சுபர் பொசுபேற்று kg/ha | மியூரைட் பொட்டசு kg/ha |
அடிக்கட்டு பசளை | 75 | 200 | 60 |
மேற்கட்டு பசளை (நாற்று முளைத்து 4 வாரங்களின் பின்) | 75 | – | 60 |
மேற்கட்டு பசளை (நாற்று முளைத்து 8 வாரங்களின் பின்) | 75 | – | 60 |
குறிப்பு – மண் பரிசோதனையின் பின் பொசுபரசு மற்றும் பொட்டாசியம் இடுவது சிறந்தது.
நீர் பாசனம்
வித்து முளைக்கும் வரை நாளாந்தம் நீர்பாசனம் செய்வது அவசியம். நீர் தேவை மற்றும் காலநிலையை பொருத்து ஒவ்வொரு 3-4 நாட்களுக்கு ஒரு முறை நீர் வழங்கலாம். தேவையற்ற நீர் பாசனம் கொடி மற்றும் விதையை அழுகலடையச் செய்யும்.
களைக் கட்டுப்பாடு
பயிரின் ஆரம்ப காலத்தில் களைக் கட்டுப்பாடு செய்வது அவசியம். மூடுபடையிடலும் களை கட்டுப்பாட்டிற்கு உதவும்
பீடை முகாமைத்துவம்
மெலோன் ஈ, அவுலக்கபோரா வண்டு, எபிலக்னா வண்டு, அழுக்கணவன், வெண் ஈ
பரிந்துரைக்கப்பட்ட பீடைநாசினிகளை தெளித்தல், களத் தூய்மையை பேணல்
நோய் முகாமைத்துவம்
தூள் பூஞ்சண நோய், கீழ் பூஞ்சண நோய்,மென்னழுகல் நோய்
பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினிகளை தெளித்தல், களத் தூய்மையை பேணல்
அறுவடை
காய் நன்கு முதிர்ச்சியடையும் போது, கூர்மையான கத்தி் கொண்டு காம்புடன் வெட்டி அறுவடை செய்யவேண்டும்.
விளைச்சல்
ஹெக்டேயருக்கு 25,000 – 30,000 கிலோ கிராம்.