- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
சிறு கிழங்கு
Coleus rotundifollius /Solenastemon rotundifolius
வெளியிடப்பட்ட வர்க்கங்கள்
காலநிலை தேவைகள் /செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
வருடம் முழுவதுமான மழை வீழ்ச்சி கிடைப்பது நல்லது. உயர் பகல் மற்றும் இரவு நேர வெப்பநிலை வித்தியாசம் கிழங்கு உருவாக்கத்திற்கு அவசியம்
வளர்ச்சிக்கு மிக பொருத்தமான பிரதேசங்கள் ஈர வலயம். முக்கியமாக காலி, களுத்துரை, கொழும்பு, கம்பஹா, மாத்தளை, மாத்தறை, இரத்தினபுரி மாவட்டங்கள்
மேலதிகமாக இடை வலயத்தில் இருந்து குருநாகல் மற்றும் உலர் வலயத்திலிருந்து (சிறிதளவு) ஹம்பாந்தோட்டை
மண்
நல்ல நீர்வடிப்புள்ள இலேசான மணல் இருவாட்டி மண்
தேவையான துண்டங்கள்
நாற்று மேடை அளவானது 12-15% செய்கை பரப்பில் தங்கியுள்ளது.
நில தயாரிப்பு
இலேசான மண் கிழங்கு உருவாக்கத்திற்கு பொருத்தமானது
நாற்றுமேடை முகாமைத்துவம்
முளைத்த ஆரோக்கியமான கிழங்குகள் நடுகைப் பொருளாக பயன்படுத்தப்படும்
விதை கிழங்குகள் முளைப்பதை தூண்டுவதற்கு சீமெந்து தரையில் பரப்ப வேண்டும்.
முளைத்த கிழங்குகளை நாற்றுமேடையில் 50cm x 50cm இடைவெளியில் நட வேண்டும்.
நாற்றுமேடைக்கு பரிந்துரைக்கப்பட்ட பசளை (நடுகை செய்ய முன் 4m2 பாத்தி)
யூரியா | 15 கிராம் |
முச்சுபர் பொசுபேற்று | 25 கிராம் |
மியூரைட் பொட்டாசு | 40கிராம் |
மாட்டெரு | 10-12 கிலோ கிராம் |
உச்சி வளர்ச்சியை தூண்ட, பின்வருமாறு திரவ பசளை அல்லது ஆட்டு சிறு நீரை தெளிக்கலாம்
3-6 வாரங்களில் (சில பாரம்பரிய விவாசயிகளின் பழக்கம்)
ஆட்டு சிறுநீர் 1 – 1 நீர்)
அல்லது
திரவ பசளை (அல்பட் கரைசல், பசுமை உரம், குரொப் மாஸ்டர்)
2-3 வாரங்களில் (பொது பயன்பாடு)
யூரியா 10g 1m2 க்கு
மியுரைட் பொட்டாசு – 10g
நடுகை செய்தல்
பயிர் முறை பருவம் மற்றும் காலநிலை வலயத்தில் தங்கியுள்ளது.
ஈரவலயம் – மழை வீழ்ச்சியுடன் ஜுன் – ஜுலை
உலர் வலயம் – மழை வீழ்ச்சியுடன் செப்டெம்பர் – ஒக்டோபர்
மூன்றாம் பருவ செய்கை – நெல் அறுவடை செய்த பின் – ஆகஸ்ட் 22
நடுகை இடைவெளி
நாற்றுமேடையில் 50cm x 50cm ஒரு குவியலில் ஒரு முளைத்த கிழங்கு
சிறு போகம் – துண்டங்கள் (30cm x 30cm)
பெரும் போகம் – துண்டங்கள் (15cm x 15cm)
பசளையிடல்
உயர் தரம் மற்றும் பொருளாதார விளைச்சலுக்காக சேதன மற்றும் அசேதன பசளைகளை இடலாம்.
உயர் விளைச்சலுக்கு மாட்டெரு பரிந்துரைக்கப்பட்டது.
இடவேண்டிய காலம் | யூரியா (Kg/ha) | முச்சுபர் பொசுபேற்று (Kg/ha) | மியுரைட் பொட்டாசு (Kg/ha) |
நடுகை இட முன் | – | 150 | – |
2 WAP | 65 | – | 60 |
6-8 WAP | 65 | – | 90 |
10-12 WAP | – | – | 60 |
*பூத்தலுக்கு முன் பசளையிட வேண்டும்
*மண் பி.எச். 5 தடை குறைவாயின் சாதாரண மட்டத்தை பேண நடுகை செய்ய இரு வாரங்களுக்கு முன் மண்ணுக்கு 1-2 (kg/ha) டொலமைட் சேர்த்தல்
*பெரிய மற்றும் தரமான கிழங்கிற்கு 10 வாரத்தில் மியூரைட் பொட்டாசு சேர்ப்பது அவசியம்
நீர் வழங்கல்
மழைவீழ்ச்சி மற்றும் பிரதேசத்தை பொருத்தது
களைக் கட்டுப்பாடு
நாற்றுமேடை மற்றும் முதல் மாதம் மாத்திரம்
பீடை முகாமைத்துவம்
முன்னாள் பதிவு இல்லை, கடந்த 2-3 வருடங்களில் வெட்டுப் புழு Spodoptera litura தாக்கம் பதிவாகியுள்ளது
நீண்ட காலமாக ஒரே பயிரை செய்கை செய்வதால் நெமற்றோடு தாக்கம் பதிவாகியுள்ளது
கட்டுப்பாடு
- பயிர் சுழற்சி
- மண்ணுக்கு கோழிஎரு சேர்த்தல்
- ஆரோக்கியமான விதை கிழங்கு பாவனை
நோய் முகாமைத்துவம்
சிறு கிழங்கு செய்கையில் எவ்வித குறிப்பிடக் கூடிய நோய் பாதிப்பும் கண்டறியப்படவில்லை ஆனால் தொடர்ந்து சிறு கிழங்கை ஒரே களத்தில் நடுகை செய்கையில் வட்டப்புழு (நெமற்றோடு ) பாதிப்பு ஏற்படலாம்
வட்டப்புழுக்களால் ஏற்படும் வேர் முடிச்சுகளால் தாவர வளர்ச்சி குன்றல் மற்றும் தாவர இறப்பு ஏற்படலாம்.
இதை தவிர்க்க
- ஆரோக்கியமான விதை கிழங்கு பயன்படுத்தல்
- சேதன கோழியெரு பயன்படுத்தல்
அறுவடை
ஜனவரி முதல் பெப்ரவரி வரை, தாவரத்தின் வளர்ச்சி பகுதிகள் மஞ்சளாகுதல்
கை முள்ளு மூலம் கிழங்கை வெளியே எடுப்பதால் கிழங்கு பாதிப்பில் இருந்து பாதுகாக்கலாம்
விளைச்சல்
சாசரி விளைச்சல் 10-12 kg/ha
சாத்திய விளைச்சல் 18-20 kg/ha (தாழ் நிலம்)