
- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234

வல்லாரை
Centella asiatica
பண்டைய காலம் முதல் வல்லாரை இலங்கையரிடம் மிகவும் பிரசித்தி பெற்ற இலை மரக்கறி ஆகும். காரணம் இதன் குணாதிசியமான தனித்துவ சுவை. இது மருத்துவ குணம் மற்றும் உயர் இரும்பு சத்தை கொண்டது. ஆகையால் உயர் சந்தை மதிப்புடையது.
காணப்படும் வகைகள்
வல்லாரையின் வளர்ச்சி தன்மையின் அடிப்படையில் இரு வகைப்படும்
- புதர் வகை
- கொடி வகை
வல்லாரையின் இலைகளின் அளவிற்கமைய கொடி வகையில் மூன்று வகைகள் உள்ளன.
- பெரிய இலைகள் உடைய வகை (பெரிய வல்லாரை)
- நடுத்தர அளவு இலை கொண்ட வகை (மீரிகம தெரிவு). இது அதிகமாக பொருளாதார ரீதியில் வளர்க்கப்படும் வகை மற்றும் நல்ல சுவையுடையது.
- சிறிய இலைகளுடனான வகை (கொடி வல்லாரை)
காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
தாழ் நாட்டு ஈரவலயம் செய்கைக்கு மிகப் பொருத்தமானது நீர்பாசன வசதி இருப்பின், நாட்டின் ஏனைய பிரதேசங்களில் வளர்க்கலாம்.
மண்
செய்கைக்கு நன்கு நீர்வடிப்புள்ள தாழ் நிலம் பொருத்தமானது. பொருத்தமான மண் பி.எச். 6-7 வீச்சாகும்.
நடுகை பொருட்கள்
செய்கைக்கு பாதி முதிர்ந்த ஆரோக்கியமான ஓடிகள் உடனான வேர்கள் தெரிவு செய்யப்படும். நடுகை பொருளாக எடுப்பதற்கு 2-3 நாட்களுக்கு முன் இலைகளை வெட்டி அகற்ற வேண்டும்.
100m2 க்கு தேவையான நடுகை பொருட்கள்
- பெரிய இலைகளுடனான வகை – 5000 – 7500 ஓடிகள்
- நடுத்தர அளவு இலையுடனான வகை 9000 – 10000 ஓடிகள்
நிலம் தயாரிப்பு
தெரிவு செய்யப்பட்ட நிலத்திற்கு அமைய உயர் பாத்தி அல்லது தாழ் பாத்தி அமைப்பதன் மூலம் வடிகாலை மேம்படுத்தலாம். ஆழமான வேருக்கு நல்ல இழையமைப்புடனான தூர்வையாக்கப்பட்ட மண் பொருத்தமானது.
நடுகை செய்தல்
குறித்த நடுகை இடைவெளிக்கமைய ஓடிகளை நடுகை செய்ய வேண்டும். நடுகை செய்ய முன் சேதன பசளையை மண்ணுடன் கலக்க வேண்டும். நடுகையின் போது மண் ஈரத்தன்மையுடன் காணப்பட வேண்டும். ஓலைகளால் மூடுவதன் மூலம் பாத்தி உலர்வதை தடுக்கலாம்.
நடுகை இடைவெளி
- பெரிய இலைகளுடனான வகை 20cm x 20cm
- நடுத்தர இலைகளுடனான கொடிவகை – 15 cm x 15 cm
பசளையிடல்
பயிருக்கு சேதன மற்றும் அசேதன என இருவகை பசளையும் இடலாம்.
1000m2 (1/4ac) க்கு தேவையான பசளை
- சேதன பசளை – 1 தொன்
மாட்டெரு, கோழியெரு அல்லது கூட்டுப் பசளையை இடலாம். வணிக ரீதியான செய்கையாளர்கள் பொதுவாக கோழியெருவை பயன்படுத்துவர்
- இரசாயன பசளை
இடவேண்டிய காலம் | யூரியா (kg) | முச்சுபர் பொசுபேற்று (kg) | மியூரைட் பொட்டாசு (kg) |
அடிக்கட்டு பசளை (நடுகை செய்து இரு நாட்களுக்கு முன்) | 9.0 | 13.5 | 10.0 |
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 4 வாரங்களின் பின்) | 9.0 | – | – |
மேற்கட்டு பசளை (ஒவ்வொரு அறுவடையின் போதும்) | 4.5 | – | 1.5 |
மேற்கட்டுபசளை (ஒவ்வொரு 6 மாதம்) | – | 6.5 | – |
நீர் வழங்கள்
நீர்பாசனமானது மண் ஈரலிப்பை பேண அவசியமானது. நீர் தேங்குதலை தவிர்க்க வேண்டும்.
களைக் கட்டுப்பாடு
களைகட்டுபாட்டை மேற்கொள்வதால் அறுவடை தரத்தை பேணுவதோடு நோய் மற்றும் பீடை பரவலை குறைக்கலாம்
Pest Management
நோய் முகாமைத்துவம்
இதன் விளக்கம் விரைவில் கிடைக்கும் …
அதுவரை, தயவு செய்து நோய் கட்டுப்பாட்டை சிங்கள பக்கத்தில் கீழுள்ள இணைப்பு மூலம் அணுகவும்
அறுவடை
முதல் அறுவடையானது நடுகை செய்த நாளில் இருந்து 100 நாட்களில் பெறப்படும். அறுவடை முறைக்கமைய அறுவடை எண்ணிக்கை மாறுபடும்.
விளைச்சல்
100m2 (1/4ac) களத்திலிருந்து 1000 – 1250kg வல்லாரை அறுவடையை பெறலாம். தாவரத்தின் அறுவடையானது 2-3 வருடங்களுக்கு தொடர முடியும்.