- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்: (+94) 081-2388234
கோளிபிளவர் முட்டைகோவா
Brassica oleracea var. botrytis
அதிக போசணைமிக்க மரக்கறியாக அறிமுகப்படுத்தப்பட்டது. நாட்டில் வெவ்வேறு பிரதேசங்களில் வளரக்கூடிய வெவ்வேறு வர்க்கங்கள் காணப்படுகின்றன.
பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்
காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
அனைத்து விவசாய காலநிலை சூழல் வலயங்களுக்கும் பொருத்தமானது. மலைநாடு, தாழ்நாடு மற்றும் இடை வலயங்களில் வளரக்கூடிய வர்க்கங்கள் உள்ளன.
மண்
நன்கு வழிந்தோடக்கூடிய இருவாட்டி மண் பொருத்தமானது. 0-6.8 pH உகந்தது.
செய்கை காலம்
இடை நாட்டு ஈரவலயம் – ஜனவரி, பெப்ரவரி மற்றும் நவம்பர், டிசம்பர்
உயர்நாட்டு ஈரவலயம் – ஜனவரி முதல் மார்ச் மற்றும் ஒக்டோபர் முதல் டிசம்பர்
உயர்நாட்டு இடை வலயம் – ஜனவரி, பெப்ரவரி மற்றும் நவம்பர் டிசம்பர்
நாற்று நடுகைக்கு பொருத்தமான பிரதேசங்களாகும்.
விதைத் தேவை
300 கி/ஹெ
நடுகை இடைவெளி
வரிசைகளிக்கிடையே 40-50 செ.மீ மற்றும் வரிசைகளினுள் 40செ.மீ
நில தயாரிப்பு மற்றும் நடுகை
நிலத்தை 30-40 செ.மீ ஆழத்திற்கு உழுது மட்டப்படுத்தல் 3-4 வார வயதுடைய ஆரோக்கியமான நாற்றுகளை உயர்பாத்தி அல்லது வரம்புகளின் வளர்க்கலாம்.
நாற்றுமேடை முகாமைத்துவம்
1 மீற்றர் அகல மற்றும் 20 செ.மீ உயரமான, இலகு மண்ணுடனான உயர் பாத்திகளை தயார் செய்தல்
நீர் வழங்கள் / நீர்பாசனம்
களத்தில் நாற்றுக்களை நடுகை செய்யும் வரை தினமும் நீர்பாசனம் செய்தல், பின்னர், 2 வாரம் வரை ஒவ்வொரு 2 நாட்களுக்கு ஒரு முறை நீர்பாசனம் செய்தல். இறுதியில் மழைவீழ்ச்சியை பொருத்து நீர்வழங்கள்
பயிர் பராமரிப்பு
நடுகை செய்த பின்னர் நாற்றுகள் வாடுவதில் இருந்து தடுத்து நிழல் வழங்க வேண்டும். நேரடி சூரிய ஒளியில் இருந்து தடுக்க அருகிலுள்ள இலைகளால் பூந்தலைகள் மூடப்பட வேண்டும்
களைக் கட்டுப்பாடு
நடுகை செய்த பின் 2 மற்றும் 4 வாரங்களில் கையால் களையகற்ற வேண்டும்.
பளையிடல்
நுவரெலியா மாவட்டம்
இட வேண்டிய காலம் | யூரியா கி/ஹெக் | முச்சுபர் பொசுபேற்று கி/ஹெக் | மியுரைட் பொட்டாசு கி/ஹெக் |
அடிக்கட்டு பசளை | – | 270 | 75 |
நடுகை செயது 2 வாரங்களின் பின் | 110 | – | – |
நடுகை செயது 5 வாரங்களின் பின் | 110 | – | 75 |
நடுகை செயது 8 வாரங்களின் பின் | 110 | – | – |
ஏனைய மாவட்டங்கள்
இட வேண்டிய காலம் | யூரியா கி/ஹெக் | முச்சுபர் பொசுபேற் கி/ஹெக் | மியுரைட் பொட்டாசு கி/ஹெக் |
அடிக்கட்டு பசளை | 110 | 270 | 75 |
நடுகை செய்து 3 வாரங்களின் பின் | 110 | – | – |
நடுகை செய்து 6 வாரங்களின் பின் | 110 | – | 75 |
குறிப்பு மண் மாதிரி மதிப்பீட்டின் பின் அடிக்கட்டு பசளையாக பொசுபரஸ் மற்றும் பொட்டசியம் பசளை இடுவது சிறந்தது.
பீடை முகாமைத்துவம்
கொழுக்கி கம்பளிப்புச்சி, வைர கருப்பு அந்துப்பூச்சி மற்றும் கருப்பு புழு என்பன பொதுவான பீடைகள் மற்றும் கோவாவின் கட்டுப்பாட்டு முகாமைத்துவங்களை ஒத்தது.
நோய் முகாமைத்துவம்
குண்டாந்தடி வேர்,வேர் கருகல், கீழ் பூஞ்சண நோய் மற்றும் பற்றீரிய மென்னழுகல் போன்ற பொதுவானவற்றை களத்தில் காணலாம். குறைவான நீர் வடிப்பின் போது நாற்றுமேடை பருவத்தில் நாற்றழுகலை காணலாம். கோவாவை போன்ற அறிகுறிகள் மற்றும் நோய் முகாமைத்துவம்
நோயாக்கி: Plasmodiaphora brassicae
அறிகுறிகள்
- பிரதான கிடை வேர்களில் வீக்கம் அல்லது விகாரமடைவதை குண்டாந்தடியுருவாதல் என்பதோடு அக் கொப்புளங்கள் வேர்களில் குழுவாக அல்லது சூழல்களாக தோன்றும்
- பாதிப்புருவதால் பயிர் முழுமையாக அழிவடையும்
முகாமைத்துவம்
- மண் பீ.எச். ஐ அதிகரிக்க 2.4 t/ha எனும் அளவில் சுண்ணாம்பிடல் மற்றும் விவசாய சுண்ணாம்பிடல் மூலம் மண்ணை 1-7.2pH உடைய ஒரளவு காரத் தன்மையில் பேணலாம்.
- நோயற்ற நாற்றுகளின் பயன்பாடு
- போதிய நீர் வழங்கலுடன் பயிர் சுழற்சி
நோய் காரணி : Fusarium , Phythium , Rhizoactonia spp.
அறிகுறிகள்
- நாற்றழுகலானது நாற்றுகள் முளைக்க முன் அல்லது முளைக்கும் போது நாற்றுகளை அழிக்கும். நாற்றுகள் முளைத்து மண்ணுடன் இணைந்திருக்கும் இளம் தண்டில் நசிவுப்புண்கள் தோன்றும்
முகாமைத்துவம்
- பங்கசு நாசினி (திபினேட், மெதைல் / திராம்) மூலம் அல்லது எரித்து மண்ணை தொற்று நீக்கல்
- பங்கசு நாசினி கரைசல் மூலம் நாற்று மேடையை நனைத்தல்
அறுவடை மற்றும் பதப்படுத்தல்
நடுகை செய்து 60-75 நாட்களில் தலைப்பகுதி அறுவடை செய்ய தயாராகி விடும். எனினும். இது வர்க்கம் மற்றும் சூழல் வலயங்களுக்கு ஏற்ப மாறுபடும்.
விளைச்சல்
6.0 – 9.0 t/ ha