- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
கறி மிளகாய்
capsicum annuum
இது இலங்கையில் மிகவும் பிரசித்தி பெற்ற ஒரு மரக்கறி. இது பெரும்பாலும் உலர் மற்றும் இடை வலயங்களில் வளரும். பெரும்பாலும் வருடத்திற்கு 4000ha செய்கை செய்யப்பட்டு 36000mt விளைச்சல் வழங்கப்படுகிறது. தனி நபர் நுகர்வு 890g ஆகும். உள்நாட்டு தேவை உள்நாட்டு உற்பத்தியால் தீர்க்கப்படுகிறது. இந்த பயிர் அனைத்து மாவட்டங்களிலும் பெரும் போகம் மற்றும் சிறு போகங்களில் செய்கை செய்யப்படுகின்றது. நாட்டின் பல்வேறு பாகங்களிலும் வருடம் பூராகவும் செய்கை செய்யப்படுகின்றது. நுவரெலியா, பதுளை, குருநாகல், புத்தளம் மற்றும் அநுராதபுரம் போன்ற மாவட்டங்கள் பிரதான பயிர் செய்யும் பிரதேசங்களாகும்.
பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்
காலநிலை தேவை / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
இது நாட்டின் பெரும்பாலும் அனைத்து விவசாய காலநிலை வலயத்திலும் வருடம் முழுவதும் கடல் மட்டத்திலிருந்து1500 மீற்றர் உயரத்தில் செய்கை செய்யலாம். உலர் காலத்தில் மாற்றீட்டு நீர்ப்பாசனம் தேவை
மண்
நல்ல வடிகாலுடைய ஆழமான மற்றும் வளமான இருவாட்டி மண்ணில் நன்கு வளரும். போதிய சேதன உரம் கிடைக்கும் போது மணல் மண்ணும் சிறந்தது. 5.5 – 6..8 க்கு இடைப்பட்ட pH பெறுமானம் பொருத்தமானது.
விதைத் தேவை
CA 8 – 1 kg/ha
HYW மற்றும் LYW- 1.75 kg/ha
நாற்றுமேடை முகாமைத்துவம்
3 m x 90cm மற்றும் 15cm உயரமுடைய பாத்தியை தயார் செய்ய வேண்டும். ஒரு சதூர மீற்றரிட்கு 3-4 kg கொம்போஸ்ட் அல்லது மாட்டெரு சேர்க்க வேண்டும். எரித்தல், சூரிய வெப்பப்படுத்தல் அல்லது விவசாய இரசாயன பாவனை மூலம் மண்ணை தொற்றுநீக்கம் செய்ய வேண்டும். விதைகளை வரிசைக்கிடையில் 10-15cm இடைவெளியில் 01 cmக்கு குறைவான ஆழத்தில் இட வேண்டும். பொருத்தமான மூடுபடை மற்றும் நீர்பாசனம் வழங்க வேண்டும். 8-10 நாட்களில் வித்து முளைக்கும். 21 நாட்களில் நாற்றுகள் நடுகைக்கு தயாராகும்.
நிலப் பண்படுத்தல்
களத்தை 15-20 cm ஆழத்திற்கு உழவேண்டும் மற்றும் உயர் பாத்தி அமைத்து இரு முறை பண்படுத்துவது நல்ல வடிகாலுக்கு அவசியம்
நடுகை செய்தல்
சிறுபோகம் – ஏப்ரல் மற்றும் மே
பெரும் போகம் – நவம்பர் மற்றும் டிசம்பர்
இதை வருடம் முழுவதும் மாற்றீட்டு நீர்பாசனத்தின் கீழ் மற்றும் மழை நீர் சேமிப்பு அல்லது பாதுகாப்பு இல்லங்களில் செய்கை பண்ணலாம்
நடுகை இடைவெளி
(HYW) மற்றும் LYW தாவரம் மற்றும் வரிகளுக்கு இடையிலான இடைவெளி 15 m x 30cm
CA8 மற்றும் கன்னொறுவை பிரர்த்தனா – பயிர் மற்றும் வரிகளுக்கு இடையிலான இடைவெளி 40 x 40cm
பசளையிடல்
பரிந்துரை (kg/ha)
யூரியா Kg/ha | முச்சுபர் பொசுபேற்று Kg/ha | மியூரியேற்று ஒப் பொட்டாசு Kg/ha | |
அடிக்கட்டு பசளை | 100 | 215 | 65 |
நடுகை செய்து 1 மாதத்தின் பின் | 100 | – | 65 |
நடுகை செய்து 2 மாதத்தின் பின் | 100 | – | 65 |
நீர் பாசனம்
பயிரின் ஆரம்பத்தில் 4-5 நாள் இடை வெளியில் நீர்பாசனம் செய்தல், பின்னர் 1 வார இடைவெளியில் நீர் தேவை. இது மழை வீழ்ச்சியை பொருத்தது. நீர்ப்பாசனமானது பசளையிடலுக்கு முன் மற்றும் பின் தேவை மற்றும் பூ பூக்கும் போது மற்றும் காய் உருவாக்கத்தின் போது அவசியம்.
களை கட்டுப்பாடு
நடுகை செய்து 2,4 மற்றும் 8 வாரங்களில் களை கட்டுப்பாடு செய்ய வேண்டும். களை கட்டுப்பாடு செய்த பின் பசளை இடலாம். களைக்கட்டுப்பாடு மற்றும் பசளை இட்ட பின் தாவரத்திற்கு மண் சேர்க்கலாம்.
Pest Management
நோய் முகாமைத்துவம்
நோய்க் காரணி : – Fusarium spp., Pythium spp., Rhizoctonia spp., மற்றும் Sclerotium spp.
நோய் அறிகுறி: –
- முளைக்க முன் நாற்றழுகல்
- நாற்றுகள் முளைக்கும் முன் மண் மட்டத்தில் இறத்தல்
- விதை மற்றும் நாற்றுகள் அழுகல்
- முளைத்த பின் நாற்றழுகல்
- நாற்று முளைத்த பின் மண் மட்டத்தில் இறத்தல்
- தொற்று முதலில் தாவரத்தின் அடி அல்லது வேரில் காணப்படும்.
- பாதிக்கப்பட்ட இடத்தில் ஈரலிப்பு மற்றும் இழையங்களில் மென்னழுகலை காணலாம்.
- பாதிப்புற்ற பகுதி சுருங்கிய மற்றும் தாவரம் முற்றாக விழும் நிலையை, தீவிர பாதிப்பில் காணலாம்.
- தாவரம் இறக்க முன் இலைகள் உதிரும்
- தாவரத்தில் பல பகுதிகளில் சிதறிய முறையில் இறத்து காணப்படும்
நோய் கட்டுப்பாடு: –
- நாற்றுமேடையை கட்டாயம் நல்ல நீர் வடிகாலுடைய இடத்தில் அமைக்க வேண்டும் மற்றும் முந்தைய செய்கையில் தக்காளி, கத்தரி மற்றும் மிளகாய் போன்ற சொலனேசிய தாவரம் வளர்க்காத இடமாக இருக்க வேண்டும்.
- விருந்து வழங்கி தாவரம் அல்லாத பயிர்களுடனான பயிர் சுழற்சி முறை தேவை
- நாற்றுமேடை தொற்று நீக்கம் (உதா – எரித்தல், சூரியவெப்பப்படுத்தல்)
- நாற்றுமேடையில் அதிக விதைகளை இடுவதை தவிர்க்கவும் (3 x 1 m அளவுடைய பாத்திக்கு 40g விதை பரிந்துரைக்கப்பட்டது)
- நோய் தாவரத்தை மண்ணில் இருந்து பிடுங்கி அழிக்க வேண்டும்.
நோயாக்கி : – Colletotrichum spp
நோய் அறிகுறி: –
- அறிகுறிகளை தாவர இலை, தண்டு மற்றும் காய்களில் காணலாம்
- பூ தண்டு, பூ மொட்டு மற்றும் தளிர்களில் நிறமாற்றத்தை அவதானிக்கலாம்
- பூ உதிர்வு
- காய்களில் அதிக எண்ணிக்கையான புள்ளிகளால் இளம் காய்கள் உதிரும்
- சிறிய வட்டமான மற்றும் குழிவான புண்கள் காய் மேற்பரப்புகளில் காணப்படுவதோடு அதன் நீள் பக்கமாக பரவி காணப்படும்
- பழுத்த காய்களில் கபில நிற வட்ட புள்ளிகளை காணலாம்
- காலப்போக்கில் சிறிய கருப்பு நிற துளைகளை, இந்த புண்களில் ஒரு மைய வளையமாக காணலாம்
- பழுத்த காய்கள் அழுகும்
- தீவிர நோய் நிலமையில், பின்னோக்கிய இறப்பு உச்சியில் தொடங்கி கீழ் நோக்கி பரவும். (வளரும் பருவ கட்டத்தில் பின்னோக்கிய இறப்பு ஏற்படும்)
- தீவிர நோய் நிலைமையில் தாவரம் வாடுதல் மற்றும் இறப்பு ஏற்படும் நோய் முழுமையாக தாவரத்தில் பரவும்
நோய் கட்டுப்பாடு: –
- நோய் எதிர்ப்பு திறனுடைய வர்க்கங்களின் பயிர்ச் செய்கை
- செய்கைக்கு ஆரோக்கியமான விதைப் பாவனை
- கள தூய்மை (பயிர் கழிவுகளை அழித்தல்)
- நோய் தொற்றுக்குள்ளான தாவர பகுதிகளை களத்தில் இருந்து அகற்றல்
- ஒவ்வொரு 2-3 வருடகாலத்திற்கும் ஒரு முறை விருந்துவழங்கியற்ற பயிர் மூலம் பயிர் சுழற்சி முறை
- களத்தின் வடிகாலை மேம்படுத்தல்
- தாவரங்களுக்கிடையில் பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியை பேணுதல்
- Trichoderma spp மற்றும் Pesudomonas Fluorescens ஐ பயன்படுத்தல்
நோயாக்கி : – Ralstonia solanacearum
நோய் அறிகுறி: –
- வலயத்தில் தனி அல்லது பல வாடிய தாவரத்தை காணலாம்
- இளம் இலைகள் நாளின் வெப்பமான நேரத்தில் வாடும்
- பின் அது திடீர் நிரந்தர வாடலை காட்டும்
- இலைகள் விழுந்த சில நாட்களிலேயே வாடிய தாவரம் இறக்கும்
- இந்த நோய் தாக்கம் ஏற்பட்டதாக கருதும் தாவரத்தின் தண்டை வெட்டி தூய நீரில் இடுவதன் மூலம் இலகுவாக நோயை கண்டறியலாம். வெட்டிய பகுதியினூடு பற்றீரிய சுரப்பை காணலாம்
நோய் கட்டுப்பாடு: –
- களத்தில் விருந்து வழங்கியற்ற தாவரங்களால் பயிர் சுழற்சி செய்தல்
- வாடல் எதிர்ப்புதிறனுடைய வர்க்க பாவணை
- அனைத்து பாதிக்கப்பட்ட வேர் மற்றும் விருந்து வழங்கி களைகளை அகற்றி அழித்தல்
- பாதிப்புக்குள்ளான பயிர்கள் கட்டாயம் அகற்றப்படல் மற்றும் அதனைச் சூழவுள்ள மண்ணையும் அழித்தல்
- பாதிக்கப்பட்ட களத்தில் இருந்து ஆரோக்கியமான களத்திற்கு நீர் வழங்கக்கூடாது
- வடிகாலை மேம்படுத்தல்
- சொலனேசிய பயிர்கள் அதிகமாக பாதிக்கப்படும் (மிளகாய், கறிமிளகாய், தக்காளி, கத்திரி, உருளைக்கிழங்கு)
- பயிரின் அனைத்து கட்டத்திலும் நோயை அவதானிக்கலாம்
காவி – வெண் ஈ
நோய் அறிகுறி: –
- இலைகள் மற்றும் நரம்பு மஞ்சளாதலை தெளிவாக காணலாம்
- கனுவிடை நீளம் குறைவதால் தாவரம் குரளடையும் மற்றும் அதிகபடியான எண்ணிக்கையில் தளிர்கள் உருவாகும்
- குறைந்த இலை அளவால் இலைகள் மேல் நோக்கி சுருளடையும்
- பாதிக்கப்பட்ட காய்கள் சிறிதாகும்
நோய் கட்டுப்பாடு: –
- குறித்த நேரத்திலான பயிர்ச் செய்கை
- காற்றுத் தடைகளை அமைத்தல் (உதா- சோளம்)
- மாறுப்பட்ட விருந்து வழங்கி தாவரங்களை அழித்தல் (உதா – களைகள்)
நோய் காரணி : – Cercospora capsici.
நோய் அறிகுறி: –
- நோய் தாக்கம் ஏற்பட்டு ஆரம்ப நிலையில், இலைகளில் இளம் சாம்பல் மையம் மற்றும் மஞ்சள் நிற விளிம்புடைய கபிலநிற வட்ட புள்ளிகளை காணலாம் (தவளை கண், தோற்றம்)
- பாதிப்பு ஏற்பட்ட பிந்திய நிலையில், இலைகள் மஞ்சளாகி உதிரும்
- பாதிக்கப்பட்ட இலைகள் வாடியபின், சுருண்டு விழும்
- உயர் Rh நிலையில் அதிக இலை உதிர்வு ஏற்படும்
- எப்போதாவது இலை காம்பு, காய் அல்லது கிளைகளில் கபில நிற காயங்கள் தோன்றும்
- கீழுள்ள முதிர்ந்த இலைகள் பொதுவாக முதலில் பாதிக்கப்படும்.
- பாதிப்பு தீவிரமடையும் போது, மேல் இலைகளும் பாதிப்படையும்.
- பாதிக்கப்பட்ட பயிர் குப்பைகள், வெப்பமான சூழல் 200C – 250C மற்றும் உயர் சாரீரபதன் நோய் தொற்றுக்கு உகந்த காரணியாகும்.
நோய் கட்டுப்பாடு: –
- பாதிக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழித்தல் (களச் சுகாதாரம்)
- உயர் Rh ஐ தடுக்க, பரிந்துரைக்கப்பட்ட பயிர் இடைவெளி மற்றும் போதிய வடிகாலை மேம்படுத்தல்
- பரிந்துரைக்கப்பட்ட அளவு சேதன பசளை இடல்
நோய்க் காரணி: –
நோய் அறிகுறி: –
- இலை மேற்பரப்பில் இளம் மஞ்சள் நிற இலை புள்ளிகள் முதல் அறிகுறியாகும்.
- பின் வெள்ளை தூள் பூஞ்சண நோய் இலைகளின் கீழ் பரப்பில் தோன்றும் விரைவில் பெரிய பற்றைகளாக விரிவடையும்.
- படிப்படியாக இலைகள் மஞ்சளாகி உதிரும்
நோய் கட்டுப்பாடு: –
- களத் தூய்மை
- நோய்த் தாக்குதிறனுடைய வர்க்கங்களின் பாவனை
- பயிர் இடைவெளி மற்றும் களை கட்டுப்பாட்டினூடு முறையான காற்றோட்டத்தைப் பேணல்
- Trichoderma spp பயன்பாடு
நோய் காரணி : – Choanephora spp
நோய் அறிகுறி: –
- நாற்றுகளில் இருந்து தாவரத்தின் ஆரம்ப பூக்கும் நிலை வரை இவை அதிகம் பாதிப்படையும்
- தாவரத்தில் பூ மொட்டு மற்றும் உச்சி பகுதியில் முதலில் அறிகுறி தோன்றும்
- பாதிக்கப்பட்ட பகுதிகள் கபிலம் அல்லது கருப்பு நிறமாகும். பங்கசு விரைவாக கீழ் நோக்கி பரவும். மேல் பகுதி தாவரம் இறக்கும்
- அவையும் ஈர அழுகலை காட்டும்.
- வித்திகள் – வெற்றுக் கண்களுக்கு தெரியும் உற்பத்தி கட்டமைப்பு
- அதன் விளைவு பாதிக்கப்பட்ட பகுதி சாம்பல் கலந்த சில்வர் நிறத்தில் காணப்படும்
- பழங்களில் முக்கியமாக புல்லியை சூழ தொற்று காணப்படும்
- இந்த தொற்று பூச்சி அல்லது பொறிமுறை சேதம் இன்றி ஏற்படக்கூடியது. ஆனால் நோயாக்கி இலகுவாக காயங்களினூடாக உட்சென்று தாக்கத்தை ஏற்படுத்தும்
நோய் கட்டுப்பாடு: –
- பரிந்துரைக்கப்பட்ட நடுகை இடைவெளியைப் பயன்படுத்த வேண்டும்.
- அறிகுறி ஏற்பட்ட உடன் பாதிக்கப்பட்ட தளிரை அகற்றி அழிக்க வேண்டும்.
அறுவடை
முதல் அறுவடையை நாற்றுமேடை இட்டு 75 நாட்களில் 5-7 நாள் இடைவெளியில் பெறலாம். அதன் பின் பயிர் வளர்ச்சியின் போது 7-10 தடவை பறிக்கலாம். உலர் காலநிலையில் அறுவடை செய்வது சிறந்தது.
விளைச்சல்
10-15 t/ha – OP வர்க்கம்
20-25 t/ha – கலப்பினம்