Tamil: HORDI Crop – Cabbage

HORDI - LOGO

கோவா

Brassica oleraceae Capitata group

கோவா பிரசிகேசி குடும்பத்தை சார்ந்தது. இது அனைத்து விவசாய காலநிலை வலயத்திலும் வளரும்.

சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்கள்

காலநிலை தேவை / செய்கைக்குபொருத்தமான பிரதேங்கள்

மலைநாட்டு பிரதேசங்களில் குளிரான காலநிலையில் வெற்றிகரமாக கோவா செய்கை செய்யலாம். உலர் வலயத்தில் வெப்பத்தை தாங்கி வளரக்கூடிய சிபாரிசு செய்யப்பட்ட வர்க்கங்களை செய்கை பண்ணலாம்.

மண்

நன்கு நீர் வடிந்தோடக்கூடிய சேதன  பசளை அடங்கிய இருவாட்டி மண் கோவா செய்கைக்கு சிறந்தது. 6 – 6.5 வரையான பி.எச் பெறுமானம் சிறந்தது. குறைந்த பி.எச் அல்லது அமில மண்ணில் குணடாந்தடியுரு நோயால் அதிகளவு பாதிக்கப்படும்.

தேவையான விதை

200-250 g/ha

நாற்றுமேடை பராமரிப்பு

நாற்று மேடைகளுக்கு 1 x 3 மீற்றர் அளவில் உயரத்தில் குவியல் நாற்றுமேடை அத்தியாவசியமானது. ஊடகமானது (கூட்டெரு – மேல்மண் – 1 – 1 விகித கலவை) நாற்றுமேடைக்கு மேல் 5-8 செ.மீ  தடிப்பில் இடவேண்டும். இரு வரிசைகளுக்கிடையே 10 செ.மீ  இடைவெளியில் 1 செ.மீ ஆழத்தில் விதைகளை விதைக்க வேண்டும். மேடைக்கு மேல் விதைகளை  தொற்றுநீக்கிய மண் மற்றும்  மூடுபடை கொண்டு மூடிவிடவேண்டும். விதைகள் முளைத்த பின் மூடுபடையை  அகற்றவும்.

நிலப் பண்படுத்தல்

40 செ.மீ ஆழத்திற்கு மண்ணை உழ வேண்டும். அமில மண்ணுக்கு சுண்ணாம்பு இடவும்.

நாற்று நடல்

நடுகை செய்ய ஒரு வாரத்திற்கு முன் நாற்றுகளை வன்மைப்படுத்த வேண்டும்.

நாற்று நட்ட பின் ஒருநாளில் இரு தடவை நீரூற்றவும்

நடுகை இடைவெளி

வரிசைக்கிடையில் 50 ச.மீ

வரிசையினுல் 40 ச.மீ

பசளை இடல்

ஹெக்டேயருக்கு 10 தொன் சேதன பொருளிடல்

இடவேண்டிய காலம்யூரியா கி.கி /ஹெமுச்சுபர் பொசுபேற்று கி.கி /ஹெமியுறியேற்றுப் பொட்டாசு கி.கி /ஹெ
அடிக்கட்டுப் பசளை11027075
நட்டு 3 வது வாரம்11075
நட்டு 6 வது வாரம்11075

நீர்ப்பாசனம்

கோவாவில் முட்டைகள் உருவாகும் தருணத்தில் நீர் தேவை மிக அவசியம். நாற்று நடுகைக்கு பின் தினமும் இருதடவை நீர்பாய்ச்ச வேண்டும். அதன் பின் ஒரு நாளுக்கு ஒரு தடவை நீர் பாய்ச்சலாம்.

களைக் கட்டுப்பாடு

பாரம்பரிய களையகற்றல் முறை மூலம் களை கட்டுப்பாடு செய்யப்படும். மேற்கட்டு பசளை இடும் முன்னர் களைக்கட்டுப்பாடு செய்ய வேண்டும்.

பீடை முகாமைத்துவம்

அறிகுறிகள்

பாதிப்பை ஏற்படுத்தும் புழு சிறியது, பச்சை நிற மேற்பரப்பை உட்கொள்ளும் உணவு வழங்கி. புழு சிறிதாயினும் அதன் கடித்துண்ணும் வாயுருப்பு இலைகளில் அதிக பாதிப்பு ஏற்படுத்தும் கடின மேற்றோல் உடைய பூச்சியாகும் தீவிர தாக்கத்தின் போது இலையின் நரம்பு தவிர்த்து இழையத்தை முழுமையாக அகற்றும்  கோவா முட்டை உருவாக்கத்தை முழுமையாக பாதிக்கும்

அறிகுறிகள்

அனைத்து குருசிபேரஸ் தாவரங்களின் அனைத்து பருவத்திலும் கோவா இறையறி புழு பாதிப்பை ஏற்படுத்தும். இப்புழு இலைகளின் அடிமேற்பரப்பில் பெரிய ஒழுங்கற்ற துளைகளை ஏற்படுத்தி விருத்தியடையும் கோவா முட்டைகளை உட்கொள்ளும். தீவிர பாதிப்பின் போது இலைகளை முழுமையாக உட்கொள்ளும் மற்றும் இலைகள் எழும்புருவாக்கப்படும் மேலும் இலைகளின் அடிப்பகுதியில் புழுக்களின் கழிவுகளை காணலாம்.

பாதிப்பு அறிகுறிகள்

  • ஆரம்பத்தில் இலைகளில் ஒழுங்கற்ற துளைகளும் பின்னர் இலைகளில் எழும்புருவாக்கமும் ஏற்படும்.

முகாமைத்துவம்

  • கோவா புழு சிக்கலின் முகாமைத்துவம்
  • முறையான நாற்றுமேடை முகாமைத்துவம்
  • தொடர்ச்சியான கள மேற்பார்வை
  • பயிர் சுழற்சி
  • அறுவடைக்கு பின் பயிர் கழிவுகளை அழித்தல்
  • முறையான கள தூய்மை
  • பரந்த நிறப்பட்டி பூச்சி நாசினி பயன்பாட்டை தவிர்த்து இரைகெளவிளையும் ஒட்டுண்ணிகளையும் பாதுகாத்தல்

இரசாயன கட்டுப்பாடு

  • 16 லீ நீரில் 8 கிராம் அளவில் எம்மெக்டின் பென்சோட் 5%SG
  • 16 லீ நீரில் 24 மி.லீ அளவில் எடோபென்புரொக்ஸ் 100g/ lEC
  • 16 லீ நீரில் 16 மி.லீ அளவில் குளோர்புளோசூரான் 50g / l EC
  • 16 லீ நீரில் 24 மி.லீ அளவில் டெபுபெனோசைட் 100g / l EC
  • 16 லீ நீரில் 32 மி.லீ அளவில் குளோமாபெனோசைட் 50g / L SC
  • 16 லீ நீரில் 6 மி.லீ அளவில் குளோரன்டிரனிலிபுரோலோ 200g / SC
  • 16 லீ நீரில் 16 மி.லீ அளவில் லூபெனுரோன் 50g / L EC
  • 16 லீ நீரில் 16 மி.லீ அளவில் ஸ்பினோசாட் 25g / L SC
  • 16 லீ நீரில் 6 மி.லீ அளவில் புளுபென்டியமைட் 24% WG

பாதிப்பு அறிகுறிகள்

இவை பொதுவாக இரவுக்குரியவை ஆரம்பத்தில் இலைகளில் வட்டதுளைகளை ஏற்படுத்தும். பின்னர், நில மட்டத்திற்கன்மையிலுள்ள தனிர்களை பாதிக்கும் முளைக்கும் போது அடிக்கடி பயிரின் அடிப்பகுதியை முழுமையாக வெட்டும். ஒரே இரவில் பல பயிர்களை வெட்டும் மற்றும் மண்மட்டத்திற்கு கீழ் தண்டை இழுக்கும் வெட்டப்பட்ட பயிர் பகல் வேளையில் வாடும்.

முகாமைத்துவம்

  • தொடர்சியான மேற்பார்வை
  • கையால் சேகரித்து அழித்தல்
  • களை முகாமைத்துவம்
  • முறையான கள தூய்மை
  • நிலத்தை ஆழ உழிதலின் மூலம் புழு மற்றும் குடம்பிகளை மண்மேற்பரப்பிற்கு கொண்டுவரல்
  • இரைகொளவி பறவைகள் நில பண்படுத்தலின் போது புழுக்களை பிடிப்பதை ஊக்குவித்தல்

இரசயான கட்டுப்பாடு

  • 16 லீ நீரில் 32 மி.லீ அளவில் புரொபெனோபோல் 500g / L EC
  • 16 லீ நீரில் 24 மி.லீ அளவில் ஈடோபென்புரொக்ஸ் 100g / L EC

80 – 90% பரவலானது சேதன பொருள் இடமாற்றத்தில் நிகழும் நாற்று விருத்தியில் உருவாகும் தளிர் மற்றும்  இளம் வேர் வளர்ச்சியின் போது அதனை புழு தீனியாக எடுக்கும்.

பாதிப்பு அறிகுறி

  • வாடிய இலைகள் மற்றும் சுருங்கிய தாவரங்கள்
  • பாதிக்கப்பட்ட தாவரத்தை பிடுங்கி அகற்றவும் வேர்களில் சிறிய வேர் கீடங்களை உங்களால் காண முடியும்

முகாமைத்துவம்

  • தொடர்ச்சியான கள மேற்பார்வை
  • பயிர் சுழற்சி
  • கோவா வளரும் கள முனைகளை சூழ மஞ்சள் நிற ஒட்டும் பொறிகளை வைத்தல்
  • பாதிக்கப்பட்ட பயிர்களை அகற்றி எரித்தல்
  • குடம்பிகள் மண்மேற்பரப்பிற்கு வருமாறு உழுதல்
  • நன்கு உக்கிய பண்ணை உரம் / கூட்டுருவை இடல்

இரசாயன கட்டுப்பாடு

பிபுரோனில் 50 SC

பாதிப்பு அறிகுறிகள்

  • தாவர சாற்றை உறிஞ்சி குடித்தல் மற்றும் உணவுக்குரிய பகுதிகளை மாசுபடுத்தல் இலைகளின் உருவத்தை மாற்றுதல்

முகாமைத்துவம்

  • அழுக்கணவனின் குடித்தொகையை நேரடியாகவோ அல்லது மஞ்சள் நிற நீர் பொறிகளை நிறுவுதலின் மூலமோ மேற்பார்வையிடல்
  • களத்தில் களை கட்டுப்பாடு மூலம் மாற்று விருந்து வழங்கி தாவரங்களை குறைத்தல்
  • பரந்த நிறமாலை பூச்சிநாசிகளை தேவையின்றி பாவிப்பதை குறைக்க இரைகௌவிகளையும் ஒட்டுண்ணிகளையும் பாதுகாத்தல்

 இரசாயன கட்டுப்பாடு

  • 16 லீ நீரில் 5 கி அளவு தியமெதோசம் 25% WG
  • 16 லீ நீரில் 2 கிராம் அளவில் இமிடோகுளோபிரிட் 70% WG
  • 16 லீ நீரில் 40 கிராம் அளவில் தியோசைக்லம் (ஐதரசன் ஒக்சலோட்) 50% SP
  • 16 லீ நீரில் 5 கிராம் அளவு குளோரன்டிரனிலிபுரோல் 20% + தியமெதோசம் 20% WG
  • 16 லீ நீரில் 45 மி.லீ அளவு பபுரோபெசின் 25% SC
  • 16 லீ நீரில் 16 மி.லீ அளவு அசடிராசிடைன் 5% EC

அதிக மழைவீழ்ச்சியில் தீவிர பாதிப்பு ஏற்படுத்தும்

பாதிப்பு அறிகுறிகள்

இலைகளில் ஒழுங்கற்ற துளைகள்

முகாமைத்துவம்

  • அவை பகல் நேரங்களில் தங்கும் இடங்களை அகற்றல்
  • பொறிவைத்தல் மற்றும் நத்தைகளை அகற்றுதலை தொடர்ச்சியாக செய்தல்
  • குப்பைகளை அகற்றி களத்தை தூய்மையாக பேணல்
  • முறையான களை கட்டுப்பாடு
  • தொடர்ச்சியான கள மேற்பார்வை மற்றும் கையால் சேகரித்தல்
  • இரைகௌவி பறவைகளை அவற்றின் இயற்கை வாழ்விடங்களை மேம்படுத்துவதன் மூலம் ஊக்குவித்தல்

 

இரசாயன கட்டுப்பாடு

10-40 kg / ha எனும் அளவில் மெதைல்டிகைட் 5% GR

நோய் முகாமைத்துவம்

  • நோய்ற்ற நடுகைப் பொருட்களை பயன்படுத்தல்
  • சுண்ணாம்பு சேர்ப்பதன் மூலம் மண் பி.எச். ஐ அதிகரித்தல்
  • குருசிபேரஸ் குடும்பத்தை சேராத பயிர்களுடன் சுழற்சி முறை
  • விருந்து வழங்கி களைகளை அகற்றல்
  • சுத்தமான கருவிகளை பயன்படுத்தல்
  • கள தூய்மை
  • பரிந்துரைக்கப்பட்ட பங்கசுநாசினிகள் – மெங்கோசெப், மனெப், புரொபினெப்,டெபுகொன்சோல்
  • ஆரோக்கியமான விதை பாவனை
  • கள தூய்மை
  • முறையான வடிகாலை பேணல்
  • பயிர் சுழற்சி
  • தொடர்ச்சியான கள மேற்பார்வை மற்றும் பாதிக்கப்பட்ட தாவரங்களை அழித்தல்
  • கள தூய்மை
  • பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினிகள் – குளோரோதலனில்
  • ஆரோக்கியமான நடுகை பொருட்களின் பாவனை
  • கள தூய்மை
  • மாற்று விருந்து வழங்கி களைகளை அகற்றல்
  • பயிர்களிலுக்கு இடையில் இடைவெளியை சரியாக பேணி ஒன்றில் மேல் ஒன்று விழுவதைத் தவிர்க்கவும்
  • இரசாயன கட்டுப்பாடு – ஹெக்சாகொனசோல் டெபுகொனசோல்
  • கள தூய்மை
  • களை கட்டுப்பாடு
  • இரசாய கட்டுப்பாடு – கெப்டன், மெங்கோசெப், மனெப்

அறுவடை

நடுகை செய்து 90 – 110 நாட்களின் பின்னர் அறுவடை செய்யலாம்.

விளைச்சல்

40-45 t/ha