Tamil: HORDI Crop – Brinjal

HORDI - LOGO

கத்தரி

Solanum melongena

கத்தரி அதிக சந்தை பெறுமதி கொண்ட ஒரு சத்துமிக்க பயிராக கருதப்படுகிறது.

தொடர்புடைய வர்க்கங்கள்

காலநிலை தேவை / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

பயிர் கடல் மட்டத்தில் இருந்து 1300 மீ க்கு மேல் மட்டத்தில் வளரும்.

மண்

நல்ல நீர் வடிந்தோடக்கூடிய மண் பொருத்தமானது, 5.5 – 5.8 வரையான ph அளவு

விதை தேவை

350g/ha

நாற்றுமேடை முகாமைத்துவம்

பொருத்தமான சூரிய ஒளியில் 3m x 1m பாத்தி பொருத்தமானது. பாத்தி தொற்றுநீக்கப்பட வேண்டும். மேல் மண் மற்றும் மாட்டெரு 1:1 எனும் விகிதத்தில் இட வேண்டும். விதைகளை வரிசைகளுடாக 6 அங்குல இடைவெளியில் இட வேண்டும்.

நிலத்தை தயார் செய்தல்

பூச்சிய பண்படுத்தல் அல்லது உழுதல் செய்த மண்ணில் 30m x 30m x 30m அளவில் குழிகளை தயார் செய்ய வேண்டும்.

நடுகை செய்தல்

தயார் செய்யப்பட்ட குழிகளில் 25 – 30 நாட்களான பயிர் நாற்றுகளை குழிக்கு ஒன்று எனும் வகையில் பயிரிடலாம்

நடுகை இடைவெளி

90cm x 60cm

பசளையிடல்

பசளை இட வேண்டிய காலம்

யூரியா kg/ha

முச்சுபர் பொசுபேற்று  kg/ha

மியூரியேட் ஒப் பொட்டாசு   kg/ha

அடிக்கட்டு பசளை7532585
4 வாரங்களின் பின்75
8 வாரங்களின் பின்7585

நீர் வழங்கல்

நல்ல வளர்ச்சிக்கு நல்ல நீர் வழங்கல் தேவை

களைக் கட்டுப்பாடு

நடுகை செய்து 2,4,7,9,12 நாட்களின் பின் களையகற்றல் நன்று

Pest Management

நோய் முகாமைத்துவம்

  • பங்கசு நோய்கள்
நோயாக்கி: Pythium spp.,  Phytophthora spp., Fusarium spp.,  Rhizoctonia spp. மற்றும் Sclerotium rolfsii அறிகுறிகள்:
  • நாற்றின் தண்டின் அடிப்பகுதியில் சடுதியாக சரிதல்
  • வேரழுகல் மற்றும் நாற்று இறப்பு
  • அடிப்பகுதியில் Rhizoctonia spp இனால் கபிலம் சார்ந்த கருப்பு நிறமாற்றம்
முகாமைத்துவம்
  • நல்ல நீர்வடிப்புள்ள ஆரோக்கியமான மண்ணில் பாத்தியமைத்தல்
  • நாற்றுமேடை தொற்றுநீக்கம் -எரித்தல், சூரியவெப்பப்படுத்தல் அல்லது இரசாயன பாவனை
  • பாதிக்கப்பட்ட தாவரத்தை சூழவுள்ள மண்ணுடன் அகற்றல்
  • விதை சிகிச்சை (நடுவதற்கு முன்னர் செய்ய வேண்டும்)
-திராம் 80% WP  – 5g/ kg -தியோபனேற் மெதைல் 50% WP + திராம் 30% WP – 4g / kg -கெப்டன் 50% WP- 6g / kg
  • மண் சிகிச்சை- தாவரத்தை சூழ காண் அமைத்து பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினியை குறித்த பயிருக்கு வழங்கலாம்.
-தியோபனேற் – மெதைல் 50% WP + திராம் 30% WP – 50g / 50 லீ/ 10m2 -திராம் – 80% WP – 70g / 50 லீ/ 10m2 -கெப்டன் 30% WP – 60g / 50 லீ/ 10m2
நோய் காரணி : Sclerotium rolfsii அறிகுறிகள்:
  • இலைகள் மஞ்சளாதல்
  • கழுத்து பகுதியில் சிதைவு ஏற்படல்
  • கழுத்து பகுதியில் Mycelia mat உடன் வெள்ளை / கபில Sclerotia
முகாமைத்துவம்
  • பாதிக்கப்பட்ட தாவரத்தை சூழவுள்ள மண்ணுடன் அழித்தல்
  • வடிகாலைமேம்படுத்தல்
  • மண்ணை அழமாக உழுது பாதிக்கப்பட்ட மண்ணை நல்ல சூரிய வெளிச்சத்துக்கு உட்படுத்தல்
  • நாற்று நடுகையின் போதான வேர் பாதிப்பை தவிர்த்தல்
  • மண் சிகிச்சை – தாவரத்தின் அடிப்பகுதியை சூழ காண் அமைத்து பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினியை தனித்தாவரத்திற்கு இடல்
-தியோபனேற் – மெதைல் – 50% WP + திராம் 30% WP – 50g /50 லீ / 10m2 -திராம் 80% WP – 70g / 50 லீ / 10m2 -கெப்டன் 50% WP – 60g / 50 லீ/ 10m2

நோய் காரணி : Fusarium oxysporum f.sp lycopersici

அறிகுறிகள்:

  • இளைகள் மஞ்சளாகி வாடல்
  • தண்டு குழாய் நிறமாற்றம்
  • வேர்கள் அழுகி தாவரம் இறத்தல்

முகாமைத்துவம்

  • பாதிக்கப்பட்ட தாவரத்தை சூழவுள்ள மண்ணுடன் அழித்தல்
  • வடிகாலை மேம்படுத்தல்
  • நிலத்தை ஆழமாக உழுதல் மற்றும் பாதிக்கப்பட்ட மண்ணை நல்ல சூரிய ஒளிக்கு உட்படுத்தல்
  • நாற்று நடுகையின் போது வேர் பாதிப்பை தடுத்தல்
  • மண் சிகிச்சை தாவரத்தின் அடிப்பகுதியை சூழ காண் அமைத்து பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினியை தனித்தாவரத்திற்கு இடல்

-தியோபனேற் – மெதைல் 50% WP + திராம் 30% WP – 50g / 50 லீ / 10m2

-திராம் 80% WP – 70g / 50 லீ / 10m2                                         

-கெப்டான் 50% WP – 60g / 50 லீ / 10m2

நோய் காரணி : Podosphaera xanthii
அறிகுறிகள்:
  • இலைகளின் கீழ் புறத்தில் வட்டவடிவ மஞ்சள் ஒட்டு அல்லது புள்ளி தோன்றல்
  • இலை மேற்பரப்பில் வெள்ளை தூள் மிகுதி காணப்படல்
முகாமைத்துவம்:                                                                          
  • நோய் விருத்தியடையும் ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவணை (குறிப்பு DOA பீடைநாசினி பரிந்துரை, 2019)
    • 10 l நீருக்கு 50g சல்பர் 80% WP சேர்த்தல்
    • குளோரோதலொனில் 500g /l SC – 30 ml / 10 லீ நீருக்கு
    • கார்பென்டசிம் 50% WP – 7g / 10 லீ  நீருக்கு
நோய் காரணி : Colletotrichum gloeosporioides              அறிகுறிகள்:
  • நடுவில் பழுப்பு முதல் செம்மஞ்சள் கபிலம் செறிவான வளையங்களுடனான குழிவான வட்ட காயங்கள்
  • காயங்களில் வெளியேற்றத்துடன் இளஞ்சிவப்பு கொனிடியா உறுப்பினருடனான பெருக்க உறுப்புகள்
முகாமைத்துவம்
  • ஆரோக்கியமான வித்து பாவணை
  • அதிகபடியான நீர்பாசனத்தை தவிர்த்தல்
  • பாதிக்கப்பட்ட பழங்களை அகற்றி அழித்தல்
  • வித்து சிகிச்சை (நடுகை செய்ய முன் வழங்க வேண்டும்)
–திராம் 80% WP  – 5g/ kg -தியோபனெற் -மெதைல் 50% WP + திராம் 30% WP – 4g / kg -கெப்டான் 50% WP  – 6g/ kg.
  • மழை காலங்களில் பூக்கும் ஆரம்ப நிலையில் பங்கசு நாசினி தெளித்தல்
-புளுசினம் 500g / 1SC – 10ml / 10 லீ நீருக்கு -மெத்திராம் 55% + பைரோகுளோஸ்ரொபின் 5% WP – 20g / 10 லீ நீருக்கு -காபென்டசியம் 50% WG – 7g / 10 லீ நீருக்கு -தியோபனேற் -மெதைல் 70% WP – 6g / 10 லீ நீருக்கு – குளோரோதலோனில் 500 SC – 30ml / 10 லீ நீருக்கு
நோய் காரணி : Phomopsis vexans       அறிகுறிகள்
  • தண்டு மற்றும் இலைக்காம்புகளில் கருப்பு விளிம்புடைய சாம்பல் புள்ளி கொண்ட சிறிய புற்றுகள் காணப்படும்
  • Pycnidia விருத்தியால் புள்ளியின் மையம் சாம்பல் மற்றும் கருப்பு நிறமாதல்
  • மென்மையான மற்றும் நீர்பாங்கான பழ புள்ளிகள் கருப்பாக மற்றும் உள்ளீடு அற்றவையாதல்
முகாமைத்தவும்
  • பாதிப்புற்ற பழங்களை அகற்றி அழித்தல்
  • நோய் விருத்தியுரும் ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினியை பிரயோகித்தல் (குறிப்பு – DOA பீடைநாசினி பரிந்துரைட 2019)
-குளோரோதலொனில் 500g /50 லீ 5C – 30ml / 10 லீ நீருக்கு -கார்பென்டசியம் 50% WP – 7g / 10 லீ நீருக்கு -தியோபனேற் -மெதைல் 70% WP 6g / 10 லீ நீருக்கு
  • பற்றீரயா நோய்கள்
நோய் காரணி : Ralstonia solanacearum அறிகுறிகள்:
  • தனி கிளை / கிளைகளில் சிறியளவு வாடல்
  • சடுதியான மற்றும் நிரந்தர தாவர வாடல்
  • இழைய நரம்பு நிறமாற்றம்
  • பாதிக்கப்பட்ட தாவர பகுதியை வெட்டி நீரில் இடும் போது மெல்லிய பிசுபிசுப்பான பற்றீரிய திரவம் வெளியேரும்
முகாமைத்துவம்
  • பாதிக்கப்பட்ட தாவரத்தை மண்ணுடன் அகற்றி அழித்தல்
  • அறுவடையின் பின் பயிர் மிகுதிகளை அழித்தல்
  • நோயிற்கு உள்ளாக கூடிய பயிர்களை பயன்படுத்தி (குருசுபெரஸ் மரக்கறி மற்றும் வெண்டி) பயிர் சுழற்சி முறை செய்வதால் நோய் பரவலை குறைக்க முடியும்
  • பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்களின் பாவனை
  • பயன்படுத்திய பின் அனைத்து பண்ணை உபகரணங்களையும் சுத்தம் செய்து தொற்று நீக்கம் செய்ய வேண்டும்.
  • இரசாயன கட்டுப்பாட்டு முறை இல்லை
  • டைடோபிளாஸ்மா நோய்
நோய் காரணி : Phytoplasma இலை தத்து பூச்சி மூலம் பரவுகிறது (Hishimonus phycitiy) அறிகுறிகள்
  • இலைகள் குறுகி, மென்மையாகி, வழுவழுப்பாகி மற்றும் மஞ்சளாகும்
  • தண்டின் கனுவிடைகள் குறுகும்
  • துணை மொட்டுகள் பெரிதாகும் ஆனால் அவற்றின் இலைக் காம்பு மற்றும் இலைகள் குறுகும் மற்றும் தாவரம் கொத்து போன்று தோன்றும்
  • பூக்கள் பச்சை நிறமாகும் / பூக்காது
  • அரிதாக காய் உருவாகும்
முகாமைத்துவம்
  • பாதிக்கப்பட்ட தாவரத்தை அகற்றி எரித்தல்
  • பரிந்துரைக்கப்பட்ட பூச்சிநாசினி பாவணை மூலம் இலை தத்தியை கட்டுப்படுத்துவதால் நோய் பரவலை குறைக்கலாம்.

அறுவடை

நாற்று நடுகை செய்து 10-12 வாரங்களில் அறுவடை செய்யலாம். 7 நாள் இடைவெளியில் அறுவடையை 10 – 12 பறித்தலில் செய்யலாம்.

விளைச்சல்

வர்க்கத்தை பொருத்து சாதகமான விளைச்சல் காணப்படும். OPV 18-20t/ha தரும் மற்றும் கலப்பினம் 30-40 t/ha தரும்