- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
வற்றாளை
Ipomea batatas
இது தென் அமெரிக்காவின் வெப்ப நாடுகளை பிறப்பிடமாக்கொண்டது. நீர் பாசனத்தின் கீழ் வருடம் முழுவதும் செய்கை பண்ணலாம். குறைந்த உள்ளீட்டு தேவைகளால் இலகுவாக முகாமை செய்யலாம். குறுகிய காலம் மற்றும் குறைந்த பீடை மற்றும் நோய் பாதிப்பு
வெளியிடப்பட்டுள்ள வர்க்கங்கள்
- வாரியபொல ரெட்
- LARI-9
- CARI 273
- CARI 426
- வாரியபொல வைட்
- சாந்தி
- சித்ரா
- கன்னொறுவை வைட்
- அமா
- தவல
- HORDI மாலி
- ரனபிம
காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
நாடு முழுவதும் செய்கை பண்ணலாம். இருப்பினும் 20-400C வெப்ப நிலை கொண்ட வரள் வலயத்தில் செய்கை பண்ண முடியாது.
மண்
மணல் / இருவாட்டியுடன் நல்ல நீர் வடிப்புள்ள மண் சிறந்தது.
துண்டங்களின் தேவை
ஒரு ஹெக்டேயருக்கு 55,000 – 60,000 துண்டங்கள்
நாற்றுமேடை முகாமைத்துவம்
5 பருவங்களிலும் நாற்றுமேடையை பயிற்றுவிப்பதன் மூலம் வீரிய தன்மையை அதிகரிக்கலாம். கிழங்கு நடுகைக்கு மற்றும் கள நடுகைக்கான கிழங்கு துண்டுங்களைபெற நாற்றுமேடையை பராமரிக்க வேண்டும்.
நிலத்தை தயார் செய்தல்
நிலத்தை 30 செ.மீ ஆழம் வரை உழுதல். எனவே மண் காற்றோட்டம் மற்றும் நல்ல வடிகால் மேம்படுத்தப்படும்.
நடுகை செய்தல்
எவ்வாறாயினும், நல்ல நீர் பாசனத்துடன் சிறு போகத்தில் நல்ல வளர்ச்சி காணப்படும்.
நடுகை இடைவெளி
1) வரம்பு சால் முறை – சால்களுக்கு இடையே 90 செ.மீ இடைவெளி, 20 செ.மீ இடை வெளியை தாவரங்களுகிடையில் பேணல்
2) பாத்தி – பாத்திகள் 60 செ.மீ அகலத்தில் தயாரிப்பதுடன் தாவரங்களுக்கிடையில் 20 செ.மீ இடைவெளியை பேணல்
பசளையிடல்
சேதன பொருட்களை சேர்த்தல் நடுகை செய்து 2, 6 வாரங்களின் பின் சேதன பசளை இடல்
அசேதன பசளை
இடவேண்டிய காலம் | யூரியா kg/ha | முச்சுபர் பொசுபேற்று kg/ha | மியூரைட் பொட்டாசு kg/ha |
அடிக்கட்டு பசளை (நடுகை செய்து 2 வாரங்களின் பின்) | 60 | 120 | 120 |
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 6 வாரங்களின் பின்) | 60 | – | 60 |
நீர் வழங்கல்
பயிர் வளர்ச்சியின் ஆரம்பத்தில் நீர் வழங்கல் அவசியமானது.
அதிகபடியான நீர் கிழங்கு உருவாக்கத்தை குறைக்கும்
களைக் கட்டுப்பாடு
பயிரின் ஆரம்ப நிலையில் களைக் கட்டுப்பாடு செய்வது முக்கியமானது. இது தாவர போட்டியை குறைக்கும்.
பீடை முகாமைத்துவம்
பயிர் சுழற்சி, சரியான நேரத்திலான அறுவடை மற்றும் கழிவுகளை அகற்றல்
வற்றாளை கிழங்கு நீள் மூஞ்சி வண்டு மிகவும் தீங்குவிளைவிக்கும் பீடை
நோய் முகாமைத்துவம்
இலங்கையில் நீண்டகாலமாக வற்றாளை விளைச்சலில் எவ்வித நோய் தாக்கமும் பதிவு செய்யப்படவில்லை. வேர் அழுகல் நோயானது மண்ணுக்குரிய அரிய வகை பூஞ்சை இனத்தால் ஏற்படுகிறது
நோயாக்கி – இது மண்ணில் வாழும் Fusarium spp இனால் ஏற்படுகிறது
அறிகுறிகள்
- இலைகள் மஞ்சளாகும் பின் கொடி வாடுவதுடன் கூடியதோடு வேர்கள் அழுகலடையும்
முகாமைத்துவம்
நோயுற்ற தாவரங்களை களத்தில் இருந்து மண்ணுடன் அகற்றல்
அறுவடை
பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்களை 3 தொடக்கம் 4 மாதங்களில் அறுவடை செய்யலாம். கொடிகளை காயப்படுத்தும் போது திரவம் வெளியேறுவதை பொருத்து முதிர்ச்சி குறியை அறியலாம். கிழங்குகள் முதிராது இருப்பின் திரவ உற்பத்தி உயர்வாக இருக்கும்.
விளைச்சல்
15-25 t/ha