Tamil: HORDI Crop – Sarana

HORDI - LOGO

சாரணை

Trianthema portulacastrum

சாரணை மிக பிரபல்யமான இலை மரக்கறியாகும். இது சிறுநீர் தூய்மையாக்கத்திற்கு சிறந்தது. இது சிறுநீரகத்தை தூய்மையாக்கி சிறுநீரக கல் உருவாக்கத்தில் இருந்து பாதுகாக்கிறது.

காணப்படும் வகைகள்

மூன்று வகைகள் காணப்படுகின்றன.

  • தண்டு பச்சை நிறமானது.
  • தண்டு இளம் கபில நிறமானது
  • வெள்ளை சாரணை (மூலிகை வகை)

Climate requirements/ Areas suitable for cultivation

மண்

இதற்கு நல்ல நீர் வடிப்புள்ள மண் தேவை

நடுகை பொருள்

பெரும்பாலும் விதை மூலமான இனப்பெருக்கம். விதைகள் நல்ல முதிர்ந்த தாவரத்தில் உருவாகும். ஒரு தடவை விதை முதிர்ந்ததும், விதைகள் தாவரத்தில் இருந்து அகற்றப்பட்டு பிரித்தெடுக்கப்படும். வீட்டுத்தோட்டத்தில் பயிரானது தண்டு மூலமும் பெருக்கம் செய்யப்படும்.

கள தயாரிப்பு மற்றும் நடுகை

களம் நன்கு பண்படுத்தப்பட்டு மண் நன்கு தூய்வையாக்கப்படல் வேண்டும். குறைந்த நீர் வடிப்புள்ள பிரதேசங்களில் உயர் பாத்திகள் தயார் செய்தல். நன்கு தயாரித்த பாத்திகளில் வித்து விதைத்தல். வீட்டுத் தோட்டத்தில் பயிரிடும் போது, மண்ணில் 1-2 கணுவிடைகள் புதையுமாறு 6-9 அங்குல துண்டங்கள் நடப்படும்.

பசளை

சேதன பசளை

பொதுவாக நன்கு உக்கிய கோழியெரு பயன்படுத்தப்படும். மேலும் மாட்டெரு, கூட்டுப்பசளை பசுமை உரம் முதலியனவற்றை சேதன பசளையாக பயன்படுத்தலாம். விதையிட இரு நாட்களுக்கு முன் சேதன பசளையை மண்ணுடன் கலக்க வேண்டும்.

இரசாயன பசளை

100m2 பிரதேசத்திற்கு தேவையானது

பசளையிடல்

யூரியா

kg.

முச்சுபர் பொசுபேற்று

kg.

மியூரைட் பொட்டாசு

kg.

அடிக்கட்டு பசளை

1.0

1.5

1.0

குறிப்பு 01 – மண் சோதனையின் பின், அடிக்கட்டு பசளையாக பொஸ்பரஸ் மற்றும் பொட்டாசியம் இடுவதுபரிந்துரைக்கப்படுகிறது.

நீர் வழங்கல் / நீர் பாசனம்

முளைப்பதற்கு போதிய ஈரப்பதன் வழங்கல் பரிந்துரைக்கப்படுகிறது. முளைத்த பின் தொடர்ச்சியான நீர்பாசனம் பயிருக்கு அவசியம். ஒவ்வொரு 2-3 நாட்கள் நீர் வழங்கல் போதுமானது. மண் உலர அனுமதிக்க கூடாது.

Weed Control

Pest Management

நோய் முகாமைத்துவம்

நோயாக்கி : Albugo aquitica

அறிகுறிகள்:

இலைகளின் கீழ் மேற்பரப்பில் சுண்ணாம்பு – வெள்ளை, மக்கிய மஞ்சள் நிற உயர்ந்த புள்ளி தொகுதிகளை காணலாம்.

முகாமைத்துவம்:

  • துவர் நீர்பாசனம் பாவனை பரிந்துரைக்க படாது
  • தீவிர நிலையில் மாத்திரம் பங்கசு நாசினி தெளிக்கவும்

அறுவடை

விதையிட்டு 20 நாட்களில், நாற்றுகளை பிடுங்கி மற்றும் சந்தைக்கு விற்பனை செய்யலாம். தண்டு துண்டங்கள் நடுவதாயின், முதிராத பாகங்களை அறுவடை செய்து பயன்படுத்த முடியும்

விளைச்சல்

100 சதுர மீற்றரில் 400kg (400kg/100m2)