Tamil: HORDI Crop – Salad Leaves

HORDI - LOGO

சலாது

Lactuca sativa L.

சலாது எஸ்டரேசியே குடும்பத்தை சார்ந்த ஒரு ஆண்டு பயிராகும்

இது பொதுவாக இலை மரக்கறியாக சாலட்க்கு பயன்படுத்தப்படும் மேலும் இதை ஏனைய உணவுகளிலும் காணலாம் உதாரணமாக சூப், சான்விச் மேலும் உணவு சுற்றுகைகள், இதை வறுக்கவும் முடியும்

காலநிலை தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

குளிரான காலநிலையில் வருடம் முழுவதும் மலைநாட்டு ஈரவலயம் மற்றும் மலை நாட்டு இடை வலயங்களில் வளர்க்கலாம் பொருத்தமான, வளர்ச்சிக்கு தேவையான வெப்பநிலை 200C க்கு குறைவாகும் சூடான காலநிலையில் சலாது கசப்பு சுவையாகவும் முந்திய பூத்தல் மற்றும் இடை காம்பின் நீளம் அதிகரித்து தாவரம் உயரமாக வளரும்

மண்

நல்ல நீர் வடிந்தோடக்கூடிய மணல் இருவாட்டியுடனான தளர்வான இழையமைப்பு மற்றும் அதிக சேதன பொருட்களின் இருப்பு நல்ல வளர்ச்சிக்கு தேவை

Seed requirement

Spacing

நிலப் பண்படுத்தல்

மண்ணை 30 செ.மீ ஆழத்திற்கு உழுது மண்ணை நன்றாக கட்டுதல் வேண்டும். பின் 1 மீ அகலமும் பராமரிப்பிற்கு இலகுவான நீளமும் உடைய உயர் பாத்தி அமைத்தல்

நாற்றுமேடை கட்டுப்பாடு

மண்ணை நல்ல இழையமைப்பிற்கு மாற்றுதல் மற்றும் சேதன பொருட்களை நாற்றுமேடை பாத்திகளுக்கு இடல். விதைகளை 10 செ.மீ இடைவெளியில் வரிகளில் இடல். நாற்றுகள் முளைத்து மூன்று வாரங்களில் நிரந்தர நடுகை செய்யலாம்.

நாற்று நடுதல்

உயர் பாத்திகளில் 30 செ.மீ வரிகளுக்கிடையேயான இடைவெளியிலும் 15 செ.மீ தாவரங்களுக்கு இடையேயான இடைவெளியிலும் நடல். மேலும் சலாது அடிக்கடி கலப்பு பயிராக கரட் மற்றும் லீக்ஸ் உடன் வளர்க்கப்படுகிறது அதில் தாவரங்களுக்கு இடையில் 20 செ.மீ இடைவெளியில் நடலாம்.

பசளையிடல்

வகை

 

இடவேண்டிய நேரம்

 

மூலம்

அளவு (t/ha)

 

சுண்ணாம்புநடுகை செய்ய இரு வாரங்களுக்கு முன்சுண்ணாம்பு / தொலமைட்1-2
சேதன பொருட்கள்நடுகை செய்ய 3-5 நாட்களுக்கு முன்கோழி எரு / மாட்டெரு / கொம்போஸ்ட்10

வகை

 

இட வேண்டிய நேரம்

யூரியா (kg / ha)

 

முச்சுபர் பொசுபேற்று (kg / ha)

 

மியூரியேற்று ஒப் பொட்டாசு (kg / ha)

 

இரசாயன பசளைநாற்று நடுகைக்கு முதல் நாள்21513075

நீர்ப்பாசனம் / நீர் விநியோகம்

நல்ல நீர் விநியோகம் நல்ல வளர்ச்சி மற்றும் தரமான அறுவடைக்கு தேவை. ஆகையால், நடுகை செய்து முதல் சில நாட்களுக்கு தினமும் நீர் வழங்கல், இரண்டு வார வயதிலிருந்து மழை வீழ்ச்சிக்கு அமைய ஒவ்வொரு நான்கு நாட்களும் ஒரு முறை நீர் வழங்கல்

களை கட்டுப்பாடு

களத்தில் களைகள் இல்லாது இருப்பது முறையான பயிர் வளர்ச்சியை பேணும் கைகளால் களையகற்ற அறிவுத்தப்படுகிறது

பீடை முகாமைத்துவம்

முட்டையிலிருந்து வெளிவரும் புழு வேர் மற்றும் தண்டின் அடிப்பகுதி மற்றும் தாவரத் தண்டின் உட்பகுதி முழுவதையும் பாதிக்கும்

கட்டுப்பாடு

மஞ்சள் அல்லது நீல ஒட்டும் பொறியை பயன்படுத்தி நிறையுடலியை பிடித்தல் மற்றும் அழித்தல்.

புழு நாற்றுகளின் அடிப்பகுதியை சேதபடுத்தும்

கட்டுப்பாடு

பயிரை  பரிசோதனை செய்தல் மற்றும் தீவிர பாதிப்பின் போது பரிந்துரைக்கப்பட்ட  பீடை நாசினிகளை தெளித்தல்

நோய் முகாமைத்துவம்

உயர் வளிமண்டல ஈரப்பதனில் தீவிரமடையும் தாவரத்தின் கீழ் இலைகள் மண்ணுடன் தொடர்புரும் போது தொற்று ஏற்படும். அழுகல் அடி இலையில் ஆரம்பித்து மேல்நோக்கி நகரும்

கட்டுப்பாடு

களத்தில் முறையான இடைவெளியில் நாற்றுகளை நடுவதால் நோயை கட்டுப்படுத்தலாம். தாவரத்தின் கீழ் இலை மண்ணுடன் தொடர்புருவதை தடுத்தல்

மண்ணிற்கு பொலத்தீன் மூடுபடையிடுவதன் மூலம் பாதிப்பை குறைக்கலாம்

அடி இலைகள் மற்றும் தண்டு அழுகும் மேல் இலைகளுக்கு பரவும். உயர் ஈரப்பதனின் போது வெண் பூஞ்சன வளர்ச்சியை காணலாம்.

கட்டுப்பாடு

நீர் வடிகாலை மேம்படுத்துவதால் நோயை கட்டுப்படுத்தலாம். முறையான நடுகை இடை வெளியில் நடல் மற்றும் கீழ் இலைகள் மண்ணுடன் தொடுகையுருவதை தவிர்த்தல்

அறுவடை

நடுகை செய்து 50-60 நாட்களில் அறுவடை செய்யலாம். அறுவடையின் போது முழு தாவரத்தையும் அகற்றல் மற்றும் வேரை வெட்டல். அறுவடையின் போது நன்கு வளர்ந்த தாவரத்தின் நிறை 200 – 400 கிராம் வீட்டுத் தோட்டத்தில் தேவைக்கு, ஏற்ப இலைகளை வேறாக்கி உட்கொள்ளலாம்.

விளைச்சல்

தனிப் பயிராக பயிர்ச் செய்கை செய்தால், விளைச்சல் ஹெக்டேயருக்கு 15 – 17 தொன் ஆகும்.