Tamil: HORDI Crop – Raddish

HORDI - LOGO

முள்ளங்கி

Raphanus sativus L.

முள்ளங்கி பிரசிகேசியே குடும்பத்தை சேர்ந்தது. இதனை இலங்கையின் அனைத்து விவசாய காலநிலை வலயங்களிலும் வளர்க்கலாம். PH 6 – 7.5 இற்கிடைப்பட்ட நல்ல நீர் வடிந்தோடக்கூடிய மண் இந்த செய்கைக்கு சிறந்தது.

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

காலநிலை தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

முள்ளங்கியை நாட்டின் அனைத்து விவசாய காலநிலை வலயங்களிலும் வளர்க்கலாம்.

மண்

நீர் வடிப்புள்ள மண் உகந்தது. குறைந்த நீர் வடிப்புள்ள மண் வளர்ச்சி பாதிப்புக்களை ஏற்படுத்தும். செய்கைக்கு 6 – 7.5 PH அளவு சிறந்தது.

விதை தேவை

5 kg/ha

நாற்றுமேடை முகாமைத்துவம்

நேரடி விதையிடும் பயிர்

நிலப்பண்படுத்தல்

மண் 30-40 செ.மீ ஆழம் வரை உழுதல் அவசியமானது ஏனெனில் தேவையான ஆழம் மற்றும் நன்றாக தூர்வையாக்கப்பட்ட மண்தேவை

நடுகை செய்தல்

தேவையான ஈரப்பதம் காணப்பட்டால் வருடம் முழுவதும் வளர்க்கலாம்.

நடுகை இடைவெளி

a) நடுகை இடைவ​ளி – வரிகளுக்கிடையில் 25 – 30 செ.மீ பயிர்களுக்கிடையில் 10 செ.மீ

b) உயர் பாத்தியில் விதைகள் வரிகளில் இடப்படும்.

பசளையிடல்

இடவேண்டிய காலம்

யூரியா

kg/ha

முச்சுபர் பொசுபேற்று

kg/ha

மியூரியேற்றுப் ஒப் பொட்டாசு

kg/ha

அடிக்கட்டுப் பசளை12520075
மேற்கட்டு பசளை – நடுகை செய்து 3 வாரங்களின் பின் இடவும்12575

நீர்பாசனம்

முதல் 4-5 நாட்களுக்கு தினமும் நீர் பாய்ச்சுதல் பின்னர் மழை வீழ்ச்சிக்கமைய 3-4 நாட்களுக்கு ஒரு முறை நீர் பாச்சுதல்

களைக் கட்டுப்பாடு

நடுகை செய்து 2 வாரங்களில் பின்னர் கையால் களையகற்றல் போதுமானது.

பீடை முகாமைத்துவம்

இளம் புழு இளம் பச்சை நிறமானது, முதிர்ச்சியின் போது கடும் பச்சை நிறமாக மாறும்

பாதிப்பு அறிகுறிகள்

தீவிர பாதிப்பில் இலைகள் எழும்புருவாகும்

கட்டுப்பாடு

தீவிர நிலையில் விவசாயத் திணைக்களத்தின் பரிந்துரைத்த பூச்சிநாசினிகளை பாவிக்கவும்

நிறையுடலி ஒரு சிறிய ஈ, புழு தாக்கத்தை ஏற்படுத்தும். புழுக்கல் உண்ட இலைகளின் இருபுறமும் ஒழுங்கற்ற அல்லது வளைந்த வெளிர் சாம்பல் நிற கோடுகள் காணப்படும். இந்த துளைகள் பொதுவாக இலை நரம்புகளால் மட்டுப்படுத்தப்படும் மற்றும் சுரங்களினுள் கடுமையான கழிவு பதார்த்தம் மெல்லிய சுவடு போன்று தோன்றும்.

புழு தாக்கத்தை ஏற்படுத்தும். நன்கு விருத்தியடைந்த புழு 4 – 6 செ. மீ நீளமான மற்றும் கருப்பு அல்லது கபில நிறமானவை

அறிகுறிகள்

  • பகற் பொழுதில் புழு மண்ணுள் மறைந்து காணப்படுவதோடு இரவில் தாக்கம் ஏற்படுத்தும்
  • மண் மட்டத்தில் இளம் தாவரத்தை உண்ணும்
  • முதிர்ந்த தாவர இலைகளை உண்ணும்

முகாமைத்துவம்

  • மண்ணை உழுதல், மண்ணுள் மறைந்து காணப்படும் புழுக்களை எடுத்து அகற்றுதல்
  • மண் உழுதலின் போது மண்ணில் காணப்படும் புழுக்கள் பறவைகளால் அழிக்கப்படும்.
  • நடுகை செய்யும் தினத்தில் பொருத்தமான பூச்சிநாசினியை தாவரம் மற்றும் மண்ணுக்கு தெளித்தல்
  • மண்ணுக்கு அதிக சேதன பொருட்களை இடல்
  • களத்தை களைகளற்று பேணல்

நோய் முகாமைத்துவம்

அறிகுறிகள்

குறைந்த PH (அமில) மண்ணில் வளரும் போது பயிர் தீவிரமாக பாதிப்படையும் தாவர வேர்கள் தடிப்பாகி மற்றும் குண்டாந்தடியுருவாகும்

நோய் கட்டுப்பாடு

  • நோயக்க காரணி மண்ணில் நீண்டகாலம் காணப்படும் மற்றும் இரசாயனங்களால் அழிக்க முடியாது
  • நடுகை செய்ய முன் மண்ணை பரிசோதிக்கவும் மற்றும் தேவையாயின் சுண்ணாம்பு இடுவதனால் PH ஐ அதிகரிக்கலாம்.
  • பாதிப்படைந்த தாவரங்களை வேருடன் அகற்றி எதிக்கவும் கோம்போஸ்ட் தயாரிக்க பாதிப்டைந்த தாவரங்களை பயன்படுத்த வேண்டாம்.
  • நான்கு வருடங்களுக்கு ஒரு முறை ஒரே இனம் அல்லாத பயிர்களின் பயிர்ச் செய்கையை மாற்றுவதால் நோயை குறைக்கலாம்.

அறுவடை

பயிர்கள் சரியான முதிர் பருவத்தில் அறுவடை செய்ய வேண்டும் (வர்க்கங்களுக்கு அமைய)

தாமதித்த அறுவடை தரத்தை குறைக்கம்

விளைச்சல்

a) ஜப்பான் போல் 40-50 t/ha

b) பீரலு ராபு 20-30 t/ha

அறுவடைக்கு பின்னர்

a) வேர்களை தரப்படுத்தல் மற்றும் கவனமாக கையாளுவதால் பொறிமுறை பாதிப்பை தவிர்க்கலாம்.

b) நீண்ட தூர போக்குவரத்தின் போது வேர்களை நன்கு காற்றோட்டமுள்ள கொள்கலங்களில் பொதி செய்ய வேண்டும்