Tamil: HORDI Crop – Mushroom

HORDI - LOGO

ஒய்ஸ்டர் காளான் (அமெரிகன் ஒய்ஸ்டர் / அப்லோன் / இளஞ்சிவப்பு ஒய்ஸ்டர் )

Pleurotus ostreatus /Pleurotus cystidiosus /Pleurotus angustatus

  • ஒய்ஸ்டர் காளானை இலிக்னின், செலுலோஸ் மற்றும் அரை செலுலோஸ் கொண்ட அடிமூலக்கூற்றில் வளர்க்கலாம்.
  • காளானுக்கான அடிமூலக்கூற்றை தயாரிப்பது மிக எளிதானது.
  • இதற்கு கட்டுப்படுத்திய சூழல் தேவை இல்லை மற்றும் பரவலான வெப்பநிலை, ஈரப்பதன் கொண்டிருப்பதோடு CO2 க்கு தாங்குதிறன் கொண்டது
  • செய்கை படிமுறைகள்
  1. வித்தி தயாரிப்பு
  2. அடிமூலக்கூற்று தயாரிப்பு
  3. அடிமூலக்கூற்றை தொற்றுநீக்கல்
  4. அடிமூலக்கூற்றில் வித்திடல்
  5. பயிர் முகாமைத்துவம்

வெளியிடப்பட்டுள்ள வர்க்கங்கள்

காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

அமெரிக்கன் ஒய்ஸ்டர்

 

வெப்பநிலை (0C)

(RH%) சார் ஈரப்பதன்

CO2 (ppm)

வெளிச்சம் (lux)

வித்தியாக்கம்

24-27

90-100

20,000

முழுவதுமாக இருள்

முதலாவது உருவாக்கல்

17-19

95

600

2000

காளான் உருவாக்கம்

19-20

85-92

600

2000

அப்லோன்

 

வெப்பநிலை (0C)

(RH%) சார் ஈரப்பதன்

CO2 (ppm)

வெளிச்சம் (lux)

வித்தியாக்கம்

24-30

90-95

5,000-20,000

முழுவதுமாக இருள்

முதலாவது உருவாக்கல்

18-24

95-100

500-1000

500-1000

காளான் உருவாக்கம்

21-27

85-90

<2000

500-1000

இளஞ்சிவப்பு ஒய்ஸ்டர்

 

வெப்பநிலை (0C)

(RH%) சார் ஈரப்பதன்

CO2 (ppm)

வெளிச்சம் (lux)

வித்தியாக்கம்

24-27

90-100

20,000

முழுவதுமாக இருள்

முதலாவது உருவாக்கல்

17-19

95

600

2000

காளான் உருவாக்கம்

19-20

85-92

600

2000

வித்தியாக்கத்திற்கு – அடைகாக்கும் அறை

முதலாவது உருவாக்கம் மற்றும் காளான் உருவாக்கத்திற்கு – செய்கை இல்லம்

அடி மூலக்கூறு

ஒய்ஸ்டர் காளான்களுக்கு மரத்தூள் ஊடகம்

50 பக்கற்றுகளுக்கு

  • மரத்தூள் 20 கி. கிராம்
  • உமி 2 கி.கிராம்
  • CaO 400g
  • சோயா மாவு 200g
  • MgSO4 40g

ஏனைய தேவைகள்

  • 200 கேஜ் பொலிபுரொபலின் பைகள் (7” அகலம் மற்றும் 14” உயரம்)
  • 3/4 அகலம் மற்றும் 1/2” உயரம் PVC குழாய்கள்
  • இறப்பர் பட்டிகள்
  • பஞ்சு

பீடை முகாமைத்துவம்

  • காளான் ஈ (Bradysia, Cecidfly, Phorid fly, Sciarid flies)
  • Lycid வண்டு
  • சிற்றுண்ணிகள்

கட்டுப்பாடு

  • பூச்சி தடை வலையுடனான தரமான செய்கை இல்லத்தை நிர்மானித்தல்
  • முறையான செய்கை இல்ல தொற்றுநீக்கம்
  • வேம்பு சாறு பயன்பாடு
  • வெள்ளைப்பூடு, வேம்பு சாறு பயன்பாடு
  • சிற்றுண்ணிகளுக்கு சல்பர் கொண்ட பூச்சிநாசினி பயன்பாடு

நோய் முகாமைத்துவம்

பங்கசு நோய்கள்: 

        Trichocerma spp தொற்று – பச்சை நிற பூஞ்சை

        Aspergillus தொற்று – கறுப்பு நிற பூஞ்சை

கட்டுப்பாடு:

  • தரமான மரத்தூள், உமி மற்றும் பஞ்சு பயன்பாடு
  • முறையாக பைகளை தொற்றுநீக்கல்
  • நோயற்ற வித்திகளை பயன்படுத்துவது அவசியம்
  • தொற்றுநீக்கிய நிலையின் கீழ் உட்புகுத்தல் கட்டாயமானது
  • வளர்ச்சி பருவத்தில் வெப்பநிலை மற்றும் ஈரப்பதனை முறையாக பேணல்
  • தொற்றுக்குள்ளான பைகளை எடுத்து அகற்றல்

பற்றீரிய தொற்று கட்டுப்பாடு

தொடர்ச்சியான 10g/1l நீர் எனும் அளவில் குளோரின் இடப்பட்ட நீரை 3-5 நாள் இடைவெளியில் தெளித்தல்

வித்தி தேவை

50-60 பைகளுக்கு 200 கிராம் தானியம் (நெல்)

உட்செலுத்தல்

அமெரிக்கன் ஒய்ஸ்டர் மற்றும் இளஞ்சிவப்பு ஒய்ஸ்டர் – உட்புகுத்தல் அறையில் 20-30 நாட்கள்

அப்லோன் – 45 – 60 நாட்கள் உட்புகுத்தும் அறையில்

செய்கை இல்லத்துக்கு மாற்றல்

வித்தி உருவாக்கம் முழுமை அடைந்த பின்

பைகளை திறத்தல்

முழுமையான திறந்தது அல்லது பகுதியளவு திறந்தது (உயர் வெப்பநிலை பிரதேசங்களுக்கு)

நீர் வழங்கல்

பனியாக்கி அல்லது ஈரப்பதன் மூட்டியை பயன்படுத்தி நீர் வழங்கவும்

அறுவடை செய்தல்

  • முறுக்குவதன் மூலம், வித்தி வெளியேற முன் காளான்களை அறுவடை செய்தல்.
  • ஒரு பையில் உள்ள அனைத்து காளான்களையும் ஒரே தடவையில் பறித்தல்

விளைச்சல்

ஒரு பையில் 300-400 கிராம் புதிய காளான்கள்