- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
பொன்னாங்கன்னி
Alternanthera sessilis
பொன்னாங்கன்னியானது வர்த்தக ரீதியாக வளர்க்கப்படுவதுடன் சந்தையில் பிரசித்தி பெற்ற இலை மரக்கறி வகையாகும். இது இதன் போசணை, மருத்துவம் மற்றும் குணவியல்பு சுவை காரணமாக பிரசித்தி பெற்றது. இப் பயிரானது விற்றமின், கல்சியம் மற்றும் இரும்பு சத்து நிறைந்தது.
காணப்படும் வகைகள்
- கொடி வகை
- புதர் வகை
கொடி வகை வர்த்தக ரீதியில் வளர்க்கப்படும்.
- இவ்வகையானது நீள்வட்ட வடிவ இலைகள் மற்றும் இளம் பச்சை நிற தண்டுடையது. சந்தையில் மிக பிரபல்யமான வகையாகும் (பிலியந்தலை வகை)
- இவ் வகையானது நீள்வட்ட வடிவமான இலைகள், கபிலம் மற்றும் பச்சை நிறம் கலந்த தண்டுடையது. கணுவிடைகள் மிகக் குறுகியது, பொதுவாக பன்னிபிட்டிய அரவ்வல பிரதேசங்களில் வளரும்.
- இவ் வகையானது நீள் வட்ட வடிவ இலைகள் மற்றும் கபில நிற தண்டுடையது.
- இவ் வகையானது பெரிய, நீளமான இலைகள், நீளமான கணுவிடையுடன் கபிலம் அல்லது பச்சை நிற தண்டுடையது.
- இவ் வகையானது கூர்மையான பின் இலைகள் மற்றும் பச்சை அல்லது கபில நிற தண்டுடையது (வேத பொன்னாங்கன்னி)
- இவ் வகையானது நீளமான குறுகிய இலைகள், நீளமான கணுவிடை கொண்டது.
காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
செய்கைக்கு தாழ் நாட்டு ஈர வலயம் மிக பொருத்தமானது. நீர்பாசன வசதிகள் இருப்பின் நாட்டின் ஏனைய பிரதேசங்களிலும் வளர்க்கலாம்.
மண்
செய்கைக்கு நல்ல நீர்வடிப்புள்ள தாழ்நிலம் மிகப் பொருத்தமானது. நீர் பாசன வசதிகள் இருப்பின், உயர் நிலங்களிலும் வளரும். 6-7 ஆனது பொருத்தமான பி.எச். வீச்சாகும்.
இனப் பெருக்கம்
தண்டு துண்டங்கள் பெருக்கத்திற்கு பயன்படுத்தப்படும். 10-12 செ.மீ நீளமான துண்டுகள் நடுகை செய்யலாம் அல்லது வீசிநடலாம்.
நிலம் தயாரித்தல்
தாழ் நிலத்திற்கு (நெல் வயல்) உயர் பாத்தி மற்றும் உயர் நிலங்களுக்கு தாழ் பாத்தியும் மிகப் பொருத்தமானது.
மண்ணானது உழப்பட்டு களைகள் உக்கலடைய விடப்படும். பின் களமானது நீரால் நிரப்பப்பட்டு தூர்வையாக்கி மட்டப்படுத்தப்படும் வடிகால்கள் வழிந்தோடலுக்காக அமைக்கப்படும்.
நடுகை செய்தல்
தண்டு துண்டங்களானது குறித்த இடைவெளி அல்லது தோராயமாக நடப்படும். ஒரு புள்ளியில் தனி துண்டம் நடப்படும்.
நடுகை இடைவெளி
தண்டு துண்டங்கள் சீரற்றமுறையில் அல்லது குறித்த இடைவெளியில் நடப்படும். வரிசைகளுக்கிடையில் 20 செ.மீ மற்றும் வரிசைகளுக்குள்ளான இடைவெளி 10 செ.மீ ஆகும்.
பசளை
சேதன பசளை மற்றும் இரசாயன பசளைகள் பொதுவாக இடப்படும். கோழி எருவானது பொதுவாக வர்த்தக ரீதியிலான செய்கையில் பயன்படுத்தப்படும். கோழி எரு பயன்பாட்டால் நெமற்றோடு பிரச்சினை குறைக்கப்படும்.
1000m2 (1/4 AC) பிரதேசத்துக்கான பசளை
சேதன பசளை – 01 தொன்
இரசாயன பசளை
இட வேண்டிய காலம் | யூரியா kg | முச்சுபர் பொசுபேற்று kg | மியூரைட்டு பொட்டாசு kg |
அடிக்கட்டு பசளை நடுகை செய்ய 1-2 நாட்களுக்கு முன் | 9.0 | 13.5 | 10.0 |
மேற்கட்டு பசளை முதல் அறுவடையின் பின் | 9.0 | – | – |
மேற்கட்டு பசளை 2ம் அறுவடை மற்றும் ஒவ்வொரு அறுவடையை தொடர்ந்து | 5.5 | – | 1.5 |
மேற்கட்டு பசளை ஒவ்வொரு 6 மாதமும் | – | 6.5 | – |
நீர் வழங்கல்
அடிக்கடி நீர் பாசனம் செய்வதால் பாத்தியின் மேற்பரப்பு ஈரலிப்பை பேண முடியும். நீர் தேங்குவதை தடுக்க வேண்டும்.
களைக் கட்டுப்பாடு
நிலம் தயார் படுத்தலின் போது முடிந்தவரை களை கட்டுப்படுத்த வேண்டும். பயிர் சுழற்சி முழுவதும் கையால் களை கட்டுப்படுத்தல் வேண்டும்.
Pest Management
நோய் முகாமைத்துவம்
நோய்க்காரணி – இது Cercospora sp இனால் ஏற்படுகிறது
நோய் பரவல் – இந்த பங்கசு மண் காற்றுடன் பாதிப்புற்ற தாவர பாகங்களால் பரவுகிறது
நோய் அறிகுறிகள் – இலைகளில் சிவப்பு அல்லது ஊதா சார் கபில புள்ளிகள் தோன்றி இலை முழுவதும் பரவும் பின் இலை மஞ்சளாகி இறக்கும்
இலைப்புள்ளி நோய் கட்டுப்பாடு
- தீவிர நோய் பரவலின் போது, விரைவாக அறுவடை செய்வதோடு நோயுற்ற தாவர பாகங்களை அகற்றி எரித்தல்
- செய்கைக்கு உகந்த போசணையை வழங்கல்
- தேவையற்ற நைதரசன் பசளை இடலை தவிர்த்தல்
- பயிர் சுழற்சியை பின்பற்றல்
- மீள் நடுகைகு ஆரோக்கியமான நடுகை பொருட்களை பயன்படுத்தல்
வீட்டுத் தோட்ட செய்கை மற்றும் சேதன செய்கையில்
வீட்டுத் தோட்ட செய்கை மற்றும் சேதன செய்கையில் திரவ உட்புகுத்தலை பன்படுத்தி Trichoderma asperellum மூலம் இலை புள்ளி நோயை கட்டுப்படுத்தலாம்.
- நடுகைப் பொருள் சிகிச்சை மற்றும் நடுகை செய்தல்
- Trichoderma asperellumல் (திரவ உட்புகுத்தல் 10 லீற்றர் நீரில் 100 ml )10 நிமிடம் அமிழ்ந்திய பின் நடுகை செய்தல்
- நடுகை செய்த பின் ஒவ்வொரு வாரமும் Trichoderma கரைசலை தாவரம் மற்றும் மண் முழுமையாக நனையுமாறு விசுறுதல் (அறுவடைக்கு முந்திய 7 நாள்காலம்)
இது Albugo sp இனால் ஏற்படுகிறது
நோய் பரவல் – இந்நோய் நோயுற்ற தாவர பாகங்களுடனான மண் மற்றும் காற்றால் பரவலடைகிறது
நோய் அறிகுறிகள்
- இலைகளின் கீழ் பரப்பில் வெண் புள்ளிகள் தோன்றும். இலைகளின் கீழ் புறத்தில் உள்ள புள்ளிகளில் வெண் தூள் பூஞ்சன வித்திகள் உருவாகும். தாவர அடி வழமையை விட பெரிதாக இருக்கும் அரும்பு இலைகள் கீழ்புறமாக சுருங்கும் மற்றும் வளர்ச்சி தடைபடும். பாதிப்புற்ற இலைகள் மஞ்சளாகி பின் உதிரும்
இலை புள்ளி நோய் கட்டுப்பாடு
- தீவிர நோய் பரவலின் போது, விரைவாக அறுவடை செய்து நோயுற்ற தாவர பாகத்தை அகற்றி எரிக்கவும்
- செய்கைக்கு உகந்த போசணையை வழங்கவும்
- தேவையற்ற நைதரசன் பசளை பிரயோகத்தை தவிர்த்தல்
- பயிர் சுழற்சியை பின்பற்றல்
- மீள் நடுகைக்கு ஆரோக்கியமான நடுகை பொருட்களை பயன்படுத்தல்
வீட்டுத் தோட்டச் செய்கை மற்றும் சேதனச் செய்கையில்
திரவ உட்பகுத்தலை பயன்படுத்தி Trichoderma asperellum மூலம் இலைப் புள்ளி நோயை வீட்டுத் தோட்டம் மற்றும் சேதன செய்கையில் கட்டுப்படுத்தலாம்
- நடுகைப்பொருள் சிகிச்சை மற்றும் நடுகை
- Trichoderma asperellumல் திரவ உட்புகுத்தல் (10 லீற்றர் நீருக்கு 100 ml ) நிமிடம் அமிழ்த்திய பின் நடவும்
- நடுகை செய்த பின்னர் ஒவ்வொரு வாரத்திலும் Trichoderma asperellum கரைசலை தாவரம் மற்றும் மண் முழுமையாக நனையுமாறு தெளிக்கவும் (அறுவடைக்கு முந்திய 7 வாரம்)
அறுவடை
முதல் அறுவடை நடுகை செய்து 4 வாரங்களில் பெறப்படும். முதல் அறுவடையின் பின் ஒவ்வொரு 3-4 வாரங்களில் அறுவடை செய்யப்படும்.
விளைச்சல்
1000m2 களத்தியிருந்து 1000-1200 kg அறுவடை பெறப்படும்
முறையாக கள பராமரிப்பு செய்வதால் இரு வருடங்களில் அறுவடை செய்யலாம். (ஒரு வருடத்தில் 8-10 பறிப்பு)
இரண்டு வருடங்களில் அறுவடை குறையும் மற்றும் பயிர் அகற்றப்பட வேண்டும். களத்தில் அதே பயிரை பயிரிடாது பயிர் சுழற்சி செய்ய வேண்டும்.