Tamil: HORDI Crop – Moringa

HORDI - LOGO

முருங்கை

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

காலநிலை தேவை / பயிர்செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

மண்

விதைத் தேவை

நாற்றுமேடை முகாமைத்துவம் / நடுகைக் காலம்

நிலப்பண்படுத்தல்

நடுகை செய்தல்

நடுகை இடை வெளி

பசளையிடல்

நீர் பாசனம்

களை கட்டுப்பாடு

பீடை முகாமைத்துவம்

நோய் முகாமைத்துவம்

பொதுவாக முருங்கை தாவரத்திற்கு நோய் எதிர்ப்பு தன்மை உள்ளது. ஆனால் சில காலநிலை மாற்றங்களால் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது. இதன் விளைவாக விளைச்சல் அளவு மற்றும் தரத்தை பாதிக்கின்றது. முருங்கை நோய்களில், பங்கசு நோயானது இலை உதிர்வு மற்றும் பொருளாதார மதிப்பு குறைப்பு போன்ற தீவிர பாதிப்பை ஏற்படுத்துகின்றது.

இந் நிலையானது Colletotrichum sp எனும் பங்கசினால் ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்:

  • இலைகளில் குறிப்பிட்ட கபில புள்ளிகளை காணலாம்
  • தீவிர தொற்றின் போது இலை மஞ்சளாதல் ஏற்படும்
  • பாதிப்புற்ற தண்டுகளில் இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிற புள்ளிகளை காணலாம்.

சாதகமான காலநிலை:

  • வெப்பநிலை 240C – 280C மற்றும் உயர் RH

முகாமைத்துவம்:

  • நோய் பரவாமல் இருக்க பாதிக்கப்பட்ட தாவர பாகங்களை வெட்டுதல் மற்றும் எரித்தல்
  • பரிந்துரைக்கப்பட்ட பாதுகாப்பான மற்றும் அமைப்புக்குரிய பங்கசுநாசினி அந்தரக்னோஸை வெற்றிகரமாக கட்டுப்படுத்தும். பங்கசு நாசினிக்கான அறுவடைக்கு பிந்திய இடைவெளியை கட்டாயம் பின்பற்றவும்.

*அந்தரக்னோஸ் தண்டில் இளஞ்சிவப்பு மற்றும் சாம்பல் நிற புள்ளிகள்

  • இந்த நோயானது Leveillula spp எனும் பங்கசால் ஏற்படுகிறது.

நோய் அறிகுறிகள்:

  • பாதிக்கப்பட்ட இலைகளின் கீழ்புறத்தில் வெள்ளை அல்லது இளம் சாம்பல் நிற தூள் பூஞ்சனம் மற்றும் மஞ்சள் புள்ளிகள் இலை மேற்புறத்திலும் காணப்படும் .
  • பாதிக்கப்பட்டு மேற்புறம் சுருளடைந்த இலைகள் மற்றும் அடிக்கடி உதிர்வதை காணலாம்.
  • பாதிக்கப்பட்ட தாவரங்கள் விரைப்பு தன்மையை இழந்து மலட்டுத்தன்மை அடையும்
  • முதிர்ந்த இலைகள் முதலில் பாதிக்கப்படுவதோடு தாக்கம் தீவிரம் அடையும் போது தாவரம் வாடலடைந்து இறக்கும்

சாதகமான நிலை:

  • மேகமூட்டமான காலநிலை 250C – 300C மற்றும் உயர் ஈரப்பதன் என்பன நோய்க்கு சாதகமானது

முகாமைத்துவம்:

  • நோய் கட்டுப்பாட்டிற்கு கள தூய்மை பராமரிப்பு முக்கியமானது.
  • சல்பரை இரசாயன கட்டுப்பாட்டு முறையாக பயன்படுத்தலாம்

பங்கசு மற்றும் பீடை சிக்கலால் முருங்கை காய் அழுகலை அடிக்கடி காண முடியும். இந்த பங்கசு நோயானது பொருளாதார செய்கைக்காக இந்தியாவில் இருந்து நடுகை பொருள் மற்றும் விதைகளை இறக்குமதி செய்கையில் நாட்டினுள் நுழைந்திருக்கலாம்.

  • இந்நிலையானது Curularis hawaiensis (M.B. Ellis) பங்கசால் ஏற்படுகிறது

நோய் அறிகுறிகள்

  • நீள்வட்ட அல்லது நீள்சதுர இளம் கபில சார் சிவப்பு விளிம்புடைய திட்டுகள், பொதுவாக பச்சை காய்களில் காணப்படும்
  • இச் சிறு புள்ளிகள் சாதகமற்ற காலநிலை காரணிகளால் இணைந்து பெரிய கபில புள்ளியை ஏற்படுத்தும்.
  • தீவிர பாதகமான காலநிலை காணப்பட்ட போது பயிர் தீவிர பாதிப்படையாது
  • புள்ளிகள் உடைந்து பிசின் வெளியேறி வீக்கமடைந்து தொற்றுக்குள்ளாகும்
  • முதிராத இளம் காய்கள் தொற்றுக்குள்ளாகும் போது, காய் நுனி சுருளடைந்து காய்ந்து விடும்.
  • முதிந்த காய்களில் அழுகல் நிலைமை மோசமடையும் இந்நிலையின் கீழ் விளைச்சல் தீவிர பாதிப்படையும்
  • எண்ணெய் பிரித்தெடுக்க தாவரத்தில் காய்கள் காயவிடப்படும் போது காய்கள் வெடித்து, அழுகி மற்றும் இரண்டாம் நிலை தொற்றுக்குள்ளாகும்

முகாமைத்துவம்:

இது ஒரு பங்கசு தொற்றா அல்லது ஒரு பீடைதாக்கமா என தெளிவாக கண்டறியலாம்.

  • இந்த பங்கசு நோயை கட்டுப்படுத்த கள தூய்மையானது மிக முக்கிய காரணியாகும்.
  • பாதிப்புற்ற காயை வெட்டி அழித்தல் களத்தில் குவித்து வைத்தலை தவிர்த்தல்
  • ஆரோக்கியமான நடுகைப்பொருள் மற்றும் விதை பாவனை மிக முக்கியமாகும்.
  • மழை காலங்களில் பங்கசுநாசினிகளை பயன்படுத்தலாம் அல்லது நோய் தீவிரமாக உள்ள பிரதேசங்களில் பயன்படுத்தலாம். (tebuconazole) னை 250g / 1EW 3.5ml / l எனும் அளவில் இடலாம்) எனினும் இதனை 2-3 தடவைக்கு மேல் ஒரு போகத்தில் பயன்படுத்த பரிந்துரைக்கப்படவில்லை. ஏனெனில் இந்த பங்கசு நாசினி ஒரு தொகுப்புக்குரிய பங்கசுநாசினி இதன் தொடர்ச்சியான பயன்பாட்டினால் எதிர்ப்புத்திறன் அதிகரிக்கும். மேற் குறிப்பிட்ட தொகுப்புக்குரிய பங்கசுநாசினிக்கு 21 நாள் அறுவடைக்கு பிந்திய இடைவெளி தேவை. ஆகையால் இந்த பங்கசு நாசினி பாவனைக்கு காய் உருவாக்கம் அல்லது பூ உருவாக்கத்தின் ஆரம்ப நிலை பரிந்துரைக்கப்படுகிறது. நோயானது Mancozeh 75% WG 20g / 10 l வீச்சு அல்லது propineb 70% WP 20g . 10l வீச்சு அல்லது Flucinam 500g / l / 10ml ஐ 7-10 நாள் இடைவெளியில் இந்த தொகுப்பிற்குரிய பங்கசு நாசினியால் கட்டுப்படுத்தலாம்.

*நீள்வட்ட, அல்லது நீள் சதுர, இளம் கபில சார் சிவப்பு விளிம்புடைய திட்டுகள் காய்களில் காணப்படல்

*முதிராத இளம் காய்கள் தொற்றுக்குள்ளாகுகையில் காய்களின் நுனிகளை பிடுங்குதல்

அறுவடை

விளைச்சல்

அறுவடைக்கு பின் கையாளுதல்

தனித்துவமான பயிர் முகாமைத்துவ பயிற்சி