
- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
<< பயிர் பக்கம்

பீர்க்கு
Luffa acutangula
வரி பீர்க்கு / நார் பீர்க்கு … என்பன பிரபல்யமான குகுபிடேசியே குடும்பத்தை சார்ந்த ஒரு பயிராகும்.
இது நாடு முழுவதிலும் தாழ் நாடு, இடை நாட்டு ஈரவலயம் மற்றும் இடை வலயம் போன்ற பிரதேச பொருளாதார பயிராகும்.
வெளியிடப்பட்ட வர்க்கங்கள்
காலநிலைத் தேவை / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
வெப்பமான காலநிலையில் பயிர் வெற்றிகரமாக வளரும். கடல் மட்டத்தில் இருந்து 500 மீற்றர் வரை செய்கை பண்ணலாம்.
ஈர வலயம் – வருடம் முழுவதும் செய்கை பண்ணலாம்.
உலர் வலயம் – பெரும்பாலும் பெரும் போகத்தில் செய்கை பண்ணப்படும், சிறுபோகத்தில் நீர்பாசனத்தில் கீழ் வெற்றிகரமாக செய்கை பண்ணலாம்.
மண்
நல்ல நீர் வடிப்புள்ள மணல் இருவாட்டி மண்ணுடனான சேதன பொருள் கொண்ட மண் செய்கைக்கு சிறந்தது. போதுமான வளர்ச்சிக்கு மண் பீ.எச் 5.5 – 7.5 தேவை
விதைத் தேவை
3 kg /ha
நிலத் தயாரிப்பு
மண்ணை உழுது உடைத்து தூர்வையாக்கிய பின் பரிந்துரைத்த இடைவெளி விட்டு குழிகளை அமைக்க. களத்தில் நீர் தேங்குவதை தவிர்க்க நல்ல ஆழமான வடிகான்களை அமைக்கவும்
நடுகை செய்தல்
விதையை 24 மணி நேரத்திற்கு நீரில் ஊற வைக்கவும். குழிக்கு 3-4 விதைகளை முறையே இடைவெளிவிட்டு இடுக. விதைக்கு நன்கு நீர் பாய்ச்சவும்.
நடுகை இடைவெளி
வரிகளுக்கு இடையே மற்றும் வரிகளில் தாவரங்களுக்கு இடையே 5m (1.5m x 1.5m x 1.5m)
பசளையிடல்
10t/ha உக்கிய சேதன பொருட்களை இடல். மேலதிகமாக பரிந்துரைக்கப்பட்ட அளவில் இரசாயன உரமிடல். நடுகை செய்ய 2-3 நாட்களுக்கு முன்னர் அடிக்கட்டு பசளையிடல்.
இடவேண்டிய காலம் | யூரியா kg/ha | முச்சுபர் பொசுபேற்று kg/ha | மியூரைட் பொட்டாசு kg/ha |
அடிக்கட்டு பசளை | 75 | 195 | 60 |
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 4 வாரங்களின் பின்) | 75 | – | 60 |
மேற்கட்டு பசளை (நடுகை செய்து 8 வாரங்களின் பின்) | 75 | – | 60 |
நீர் வழங்கல் / நீர் பாசனம்
விதை முளைக்கும் வரை ஒரு நாளைக்கு இருதடவை நீர் பாசனம் செய்தல் அதன் பின் மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப நீர்பாசனம் செய்ய வேண்டும்.
களைக் கட்டுப்பாடு
குறுகிய வேர் வலயம் கொண்டது. ஆகையால் களையகற்றும் போது பீர்க்கு கொடியின் வேர் தொகுதியை பாதிக்காது கவனமாக கையாள வேண்டும்.
அறுவடை
அறுவடைக்கு முதல் நாள் நீர் பாசனம் செய்ய வேண்டும். பூ பூத்து 14 நாட்களின் பின் அறுவடை செய்யலாம். காயை சேதப்படுத்தாதவாறு காம்புடன் அறுவடை செய்தல். நடுகை செய்து 60-70 நாட்களில் முதல் அறுவடையைப் பெறலாம். 1 1/2-2 மாதங்களில் 4 நாள் இடைவெளியில் 10-15 தடவை அறுவடை செய்யலாம்.
விளைச்சலை பதப்படுத்தல்
பொதிகளாக்கப்பட்ட காய்கள் மீது நேரடி சூரிய ஒளி படாமையை உறுதி செய்து நல்ல காற்றோட்டத்தை பேணுவதால் காய் சேதமடையாது பேணலாம்.
நாற்றுகளை ஐதாக்கல்
நாற்றுகள் முளைத்து 2 வாரங்களின் பின் இரு ஆரோக்கியமான தாவரத்தை விட்டு ஏனையவற்றை அகற்றல்
பழக்கப்படுத்தல்
நல்ல விளைச்சலுக்கு கொடிகளை 2 மீற்றர் உயர தாங்கு தடுக்குகளில் பழக்கப்படுத்தவும்.
இந்த அமைப்புக்கு கிடையாக அல்லது செங்குத்தாக கயிறு அல்லது கம்பி கட்டி தாங்கு தடுக்கு அமைத்தல். இவ் அமைப்புக்கு உறுதியான கம்புகளை 3 மீற்றர் இடைவெளியில் நடல்
பக்க கொடிகளை அகற்றல் / நீர் முளைகள் பிரதான தண்டில் இருந்து தடுக்கு வரை வருவதை தவிர்த்தல்
Pest Management
நோய் முகாமைத்துவம்
- பங்கசு நோய்கள்
நோயாக்கி : Podosphaera xanthii
அறிகுறிகள:
- முதலில் முதிர்ந்த இலைகளில் வெளிர் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும்
- இந்த புள்ளிகள் பெரிதாகி வெள்ளையாகும், இலைகளின் மேல்புறத்தில் பஞ்சு போன்ற மைசிலியம் உருவாகும்
- தீவிர பாதிப்புக்குட்பட்ட இலைகள் கபிலமாகி சுருங்கி மற்றும் உதிர்வு என்பன ஏற்படும்
![]() |
முகமைத்துவம்:
- நோய் விருத்தியுற்ற ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவணை ( குறிப்பு: 2019, DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
- அறுவடைக்கு பின் பாதிக்கப்பட்ட தாவர கழிவுகளை அகற்றல்
நோயாக்கி : Pseudoperonospora cubensis
அறிகுறிகள்:
- இலை மேற்புறத்தில் இலை நரம்புகளால் கோணலான மஞ்சல் புள்ளிகள் உருவாகின்றன
- இலைகள் மஞ்சலாக மாறி இறுதியில் இலைய இறப்பு மற்றும் விருந்து வழங்கி தாவர கலம் இறக்கும்
முகாமைத்துவம்:
- நோய் விருத்தியடைந்து ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பயன்பாடு (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
- அறுவடையின் பின் பாதிக்கப்பட்ட தாவர கழிவுகளை அகற்றல்
நோயாக்கி: Sclerotium spp., Fusarium spp.
அறிகுறிகள்:
- ஆரம்பத்தில் தாவரம் தற்காலிக வாடல் குறிகளை காட்டும்
- இலைகள் மஞ்சளாதல், தளர்வான கொந்தளிப்பு மற்றும் உதிர்வை காட்டும்
- சமமாக தாவரங்கள் இறக்கும்
- கழுத்துப்பகுதியில் உள்ள நரம்பு முடிச்சிகள் மஞ்சள் அல்லது கபிலமாகும்
முகாமைத்துவம்:
- பாதிக்கப்பட்ட தாவரங்களை மண்ணுடன் அழித்தல்
- நீர் வடிகாலை மேம்படுத்தல்
- நோய் விருத்தியடையும் ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவனை (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
நோயாக்கி: Didymella bryoniae
அறிகுறிகள்:
- இலைகளில் மற்றும் பழங்களில் உள்ள காயங்களில் வழமையான நீர் ஊரிய பகுதிகள் பரவலடையும்
- ஆரம்பத்தில் மஞ்சளான ஒளிவட்டமானது இளம் கபில மற்றும் ஒழுங்கற்ற வெளிக்கோடுகள் ஆகும்
- பழங்களில் இருண்ட விரிசல்களுடனான குழிவான அடையாளங்கள் காணப்படும்
- குழிவான , புற்றுநோயால் தாவரம் சரியும்
- தண்டுகளில் உள்ள புள்ளிகள் நீண்டு கோடுகளாகும் மற்றும் பசை போன்ற திரவம் வெடிப்புகளில் இருந்து வரும்
- பழம்,தண்டு அல்லது இலைகளில் கடும் கபிலம் முதல் விருத்தி உடல்கள் (pycnidia) காணப்படும்
முகாமைத்துவம்:
- பங்கசு வாழ்தகவை குறைக்க அறுவடையின் பின் உடனடியாக தாவர கழிவுகள் ஆழத்திற்கு உழ வேண்டும்
- நோய் விருத்தியடையும் ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவனை (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
- பற்றீரிய நோய்
நோய் காரணி : Ralstonia solanacearum
அறிகுறிகள்:
- சடுதியான இலை உதிர்வு
- முழுத்தாவரமும் இறுதியில் வாடும்
- இலைகள் கபிலமாகி காயும்
- நரம்புகள் வெளிரல்
- நிரந்தர வாடல்
நோய்காரணி பரவல்;
- பாதிக்கப்பட்ட மண், நீர் , தாவர கழிவு, நெமற்றோடு மற்றும் பூச்சிகள், கத்தரித்தல், களைகள் விருந்து தாவரமாக இருத்தல்
![]() | ![]() |
நோயை கண்டறிதல் : தெளிந்த நீரில் பாதிக்கப்பட்ட தாவரத்தின் அடியை வெட்டி போடும் போது மெல்லிய பிசுபிசுப்பான பற்றீரிய சுரப்பு வெளியேறும்
முகாமைத்துவம்:
- பாதிக்கப்பட்ட தாவரத்தை மண்ணுடன் அழித்தல்
- எளிதில் பாதிப்படையாத தாவரங்களுடனான பயிர் சுழற்சி முறை (வெண்டி, சோளம்)
- குருசிபெரேசியே பயிர்களுடனான கலப்பு பயிர்ச் செய்கை
- பாதிக்கப்பட்ட களத்தில் இருந்து ஆரோக்கியமான களத்திற்கு உபகரணங்களை எடுத்துச் செல்வதை தவிர்த்தல்
- வைரஸ் நோய்கள்
வெண் ஈ மூலம் காவப்படும் (Bemicia tabaci)
அறிகுறிகள்:
- மேற்புற சுருளல்,குருகுதல் மற்றும் அடையாளங்கள்
- தாவரம் குறளடைதல் மற்றும் பழங்கள் விகாரமடைதல்
![]() |
அழுக்கணவன் மூலம் காவப்படும்
அறிகுறிகள்:
- இலைகளில் சித்திர வடிவம் மற்றும் அடையாளங்கள்
- இலை திரிபடைதல்
- பழங்கள் விகாரமடைதல் மற்றும் உருவளவு குறைதல்
- தீவிர பாதிப்பில், பழ மேற்பரப்பில் எண்ணெய் தன்மையான அடையாளங்கள் ஏற்படல்
![]() |
காவி விதையிலுள்ள சாறு மூலம்
அறிகுறிகள்:
- பச்சை புள்ளிகள், இலை உரு திரிபடைதல்
- பழங்களில் பச்சை புள்ளிகள், பிரகாசமான மஞ்சளாகி சிதைவடையும்
- பழங்கள் விகாரமடைதல்
அறிகுறிகள்
- குறளடைதல், மஞ்சளாதல்,வெளிரல் (காலத்திற்கு), சித்திரவுரு, இலை திரிபு (கொப்புளங்கள் தொடராக காணப்படல்)
- பழங்கள் நிறமற்று போதல் மற்றும் திரிபடைதல்
- பைடோபிளாஸ்மா நோய்
நோய் அறிகுறிகள் இலைகள் சிறிய, தடிப்பான மற்றும் மஞ்சள் சார் பச்சை நிறமானவை. குறுகிய கனுவிடை மற்றும் தாரவம் குறளடைந்து சூனியக்காரியின் துடைப்ப நோய் அறுகுறிகள் ஏற்பட்டு பூக்கள் பச்சையாகும் . நோய் இலை தத்தி மூலம் பரவடைகிறது
நோய் கட்டுப்பாடு – பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றல். பரிந்துரைக்கப்பட்ட பூச்சி நாசினிகளை பயன்படுத்தி காவிகளை கட்டுப்படுத்தல் ( இலை தத்தி)
![]() | ![]() |