Tamil: HORDI Crop – Knol khol

HORDI - LOGO

நோகோல்

Brassica oleraceae var.caulorape

கோவா குடும்பத்தை சார்ந்த ஒரு மரக்கறி. இது ஆண்டுப்பயிராக செய்கை செய்யப்படுகிறது. பொதுவாக ஏனைய மரக்கறிகளுடன் கலப்பு பயிராக பயிரிடப்படுகிறது.

வெளியிடப்பட்டுள்ள வர்க்கங்கள்

பரிந்துரைக்கப்பட்ட இறக்குமதி வர்க்கங்கள் மாத்திரம் உள்ளன.

காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

குடுமி அபிவிருத்திக்கு பகல் மற்றும் இரவு​ நேர வெப்பநிலை வித்தியாசம் தேவை. (சதைப்பிடிப்பான வீங்கிய தண்டு) நோகோலானது மலை நாட்டின் ஈர மற்றும் இடை வலயங்களில் நுவரெலியா மற்றும் பதுளை மாவட்டங்களில் வெற்றிகரமாக வளரும். பெரும் போகத்தில் இடை நாடு மற்றும் தாழ் நாட்டில் செய்கை செய்யலாம்.

மண்

நல்ல நீர் வடிப்புள்ள, உயர் சேதன பொருட்களை கொண்ட, சுமார் pH 5 உடைய மண் செய்கைக்கு உகந்தது.

செய்கைக் காலம்

செய்கைக்கு பெரும் போகம் மிகப் பொருத்தமானது. ஒகஸ்ட் நடுப் பகுதியில் நாற்று மேடையை  ஆரம்பித்தல் மற்றும் செப்டெம்பரில் கள நடுகை செய்தல். ஒக்டோபரில் செய்கை செய்வதால் பின்னர் குடுமி உருவாதலில் எதிர் மறை தாக்கம் ஏற்படும்.

வித்து தேவை

குறுகிய கால வர்க்கங்கள் – 600 – 750 g/ha

நீண்ட கால வர்க்கங்கள் 375 – 400 g/ha

நடுகை இடைவெளி

வரிசைகளுக்கிடையில் 30செ.மீ மற்றும் நாற்றுகளுக்கிடையில் 10 செ.மீ

கோவாவுடன் இடைப்பயிராக்கம் – 50 x 50cm

கறி மிளகாயுடனான இடைப்பயிராக்கம் – 60 x 60 cm

நிலப்பண்படுத்தல் மற்றும் நடுகை

களைகளின்றி நிலத்தை உழுது மட்டப்படுத்த வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில் குழிகளில் நடுகை செய்ய 3-4 வார வயதுடைய நாற்றுக்களில் 8-10 செ.மீ உயரமுடையவை பொருத்தமாவை ஆகும். 1 கிராம் நோகோல் விதைகளில் 250 நாற்றுகள் உற்பத்தி செய்யலாம்.

நாற்றுமேடை முகாமைத்துவம்

கோவா நாற்றுமேடையை ஒத்தது

பசளையிடல்

இடவேண்டிய காலம்

யூரியா (kg/ha)

முச்சுபர் பொசுபேற் (kg/ha)

மியுரைட்டு பொட்டாசு (kg/ha)

நடுகை செய்ய முன்

85

110

65

நடுகைசெய்து 2 வாரங்களின் பின்

85

65

குறிப்பு – மண் பரிசோதனையின் பின் மண்ணுக்கு பொசுபரஸ் மற்றும் பொட்டாசிய பசளை இடுவது சிறந்தது.

நீர் வழங்கல் / நீர்பாசனம்

மண்ணை ஈரலிப்பாக வைத்திருத்தல் முக்கியமாகும். மண் மிகவும் உலர்ந்துள்ள நிலையில் மண்ணுக்கு நீர்பாசனம் செய்கையில் குடுமி வெடிக்கலாம்.

களை கட்டுப்பாடு மற்றும் மண் அணைத்தல்

நடுகை செய்து 2-3 வாரங்களின் பின் கையால் களையகற்றலாம். 4-5 வாரங்களில் தாவரத்தின் அடியில் மண் அணைத்தல்

பீடை முகாமைத்துவம்

புழு,வைரமுதுகு அந்து, கருப்பு புழு என்பன பொதுவான நோகோல் பீடைகள் மற்றும் கோவாவை ஒத்த முகாமைத்துவம்

நோய் முகாமைத்துவம்

களத்தில் குண்டாந்தடியுருவேர் மற்றும் கீழ் பூஞ்சன நோய் என்பன பொதுவானது. நீர் வடிப்பு குறைந்த நிலையில்  நாற்றுமேடையில் நாற்றழுகலை காணலாம். கோவாவை ஒத்த நோய் அறிகுறி மற்றும் நோய் முகாமைத்துவம்.

நோய் காரணி:  plasmodiophora brassicae

அறிகுறிகள்

  • பிரதான பக்கவேர்களில் வீக்கம் அல்லது மாறல்கள் ஏற்படும். அவை குண்டாந்தடியுரு எனப்படுவதுடன் அக்கொப்புளங்கள் குழுவாக அல்லது வரிசையாக வேரில் தோன்றும்.
  • இப்பாதிப்பால் பயிர் முழுமையாக அழிவடையும்

முகாமைத்துவம்

  • விவசாய சுண்ணாம்பை இடுவதனால் 7.1 – 7.2 பீ.எச் அளவில் மண்ணை ஒரளவு காரமானதாக பேணுவதுடன் மண் பீ.எச். ஐ உயர்த்த 2 – 4t/ha சுண்ணாம்பிடல்
  • நோயற்ற நடுகைப் பொருளை பயன்படுத்தல்
  • பயிர் சுழற்சி

நோய் காரணி : Erysiphe cruciferarum

நோயறிகுறி

  • மேல் மற்றும் கீழ்புற மேற்பரப்பில் சிறிய வெந்நிற பற்றைகள் காணப்படும். இவை ஊதா புள்ளிகளாக காணப்படுவதோடு பின் இலையை மூடிய தூள் படையை காணலாம்.
  • இலைகளின் நிறம் மாற்றமடைந்து தாவரத்தில் இருந்து உதிரும்.

முகாமைத்துவம்

  • தாவர எதிர்ப்பு வர்க்கங்கள்
  • பயிர் சுழற்சி
  • அறுவடைக்கு பின் அனைத்து தாவர மிகுதிகளையும் அகற்றல்
  • களைகளை அகற்றல்
  • மேற்புற தூவல், தூள் அல்லது நீராவிகளை விண்ணப்பித்தல்

நோய் காரணி : Peranospora parasitica

அறிகுறிகள்

  • இலைகளின் மீது ஒழுங்கற்ற மஞ்சள் பற்றைகளுடன் தொற்று ஆரம்பிக்கும்
  • இந்த ஒழுங்கற்ற நசிவுப்புண்கள் கபிலமாகும்.
  • இலையின் கீழ்ப்புறத்தில் சாதகமான சந்தர்ப்பத்தில் வெந்நிற பஞ்சுபோன்ற பங்கசு வளர்ச்சி காணப்படும்

முகாமைத்துவம்

  • நாற்று மேடையை மூடி மழையிலிருந்து பாதுகாத்தல்
  • காலை வேளையில், மறைப்பை அகற்றி சூரிய ஒளிபெற அனுமதித்தல்
  • டெபுகொனசோல் (10 லீ நீருக்கு 5 மி.லீ) உள்ளடங்கிய பங்கசு நாசினியை ஒரு தடவை பயன்படுத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அறுவடை

நடுகை செய்து 50-60 நாட்களின் பின் அறுவடை செய்யலாம்.

அதிகபடியான முதிர்ச்சி, நார் தன்மையை அதிகரித்து குடுமியின் தரத்தை பாதிக்கும்

விளைச்சல்

கோவாவுடன் இடைப்பயிர்ச்செய்கை – 8000 kg/ha

கறி மிளகாயுடன் இடைப்பயிர்ச்செய்கை – 2200 kg/ha