Tamil: HORDI Crop – Kathurumurunga

HORDI - LOGO

அகத்தி

Sesbania grandiflora

இது அவரை இன (பெபேசியே) குடும்பத்தை சார்ந்தது. இது ஒரு இலை மரக்கறி. இது இலகுவாக வளரக்கூடிய மருத்துவ மதிப்பு மிக்க ஒரு மூலிகை இது விவசாய இரசாயன பாவணையின்றி வளரக்கூடியது.

காணப்படும் வகைகள்

மூன்று வகைகள் உள்ளன. வெள்ளை பூக்கள், சிவப்பு பூக்கள், மற்றும் அரிதாக பூக்கும் வகை. அரிதாக பூக்கும் வகையானது. ‘ஹரித’ என அழைக்கப்படும். பூந்துணர் மற்றும் இலைகள் உண்ணக்கூடியவை. வெள்ளை பூ வகையானது மிகவும் பிரசித்தி பெற்றது.

காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

தாழ் நாடு மற்றும் இடை நாட்டு ஈர மற்றும் உலர் வலயங்களில் வெற்றிகரமாக வளர்க்கலாம். இப் பயிர் செய்கைக்கு வெப்ப காலநிலை மிகவும் உரித்தானது. குளிர் காலநிலையுடனான மழைபாங்கான பிரதேசங்களில் வெற்றிகரமான இப் பயிரை செய்கை பண்ண முடியாது.

மண்

நல்ல நீர்வடிப்புள்ள அதிக சேதன பொருட்களை கொண்ட மண் உகந்தது.

நடுகைப் பொருள்

விதைகள் மற்றும் தண்டு துண்டங்கள் மூலம்

விதை மூலம்:

விதைகளானது புதிதாக பழுத்த காய்கள் மஞ்சள் நிறமாக மாறியபின் பெறப்படும். நாற்றுமேடையானது, தயார் செய்த பெரிய மண் கட்டுகள், பொலித்தீன் பைகள், கடதாசிபை மற்றும் ஏனைய கொள்கலன்களை பயன்படுத்தி விதைகளில் இருந்து நாற்றுகளை உற்பத்தி செய்யலாம். இந்த கொள்கலன்களில் பல விதைகளை பாய்ச்சலாம், முளைக்க விடுதல் மற்றும் ஒரு ஆரோக்கியமான நாற்றை வளரவிடுவதோடு ஏனைய நாற்றுகளை அகற்றல். கள நடுகைக்கு 15-20 செ.மீ ஆரோக்கியமான நாற்றுகள் பொருத்தமானது.

பதிவைத்தல் – 1 செ.மீ அகலமான பட்டையை பென்சில் தடிப்புடைய கிளையில் இருந்து அகற்றி ஈரமான தும்புத்தூளை அதை சுற்றி வைத்து ஒளி புகவிடு பொலித்தீனால் சுற்றி கட்டுதல் (பதிவைத்தல்) பின்னர் 3-4 வாரங்களில் வேர்களை வளர்ந்ததும், தாவரத்தில் இருந்து கிளைகள் பிரித்தல் மற்றும் புதிய தாவரமாக கள நடுகைக்கு இது பொருத்தமானது.

தண்டு துண்டங்கள்:

‘ஹரித” வர்க்கத்தை தண்டு துண்டங்கள் வேர்விட்டபின் கள நடுகை செய்யலாம்.

நில தயாரிப்பு நடுகை செய்தல்

45x45x45cm3 அளவு நடுகை குழிகள் தயாரிக்கப்படும் மேல் மண்ணுடன் கூட்டுப்பசளை அல்லது சேதன பொருட்களை இட்டு கலத்தல் மற்றும் தயார் செய்த நாற்றுகள் அல்லது வேர் கொண்ட துண்டங்கள் நடப்படும். அவை சில நாட்களுக்கு சூரிய ஒளிபடுமாறு வைக்கப்பட்டு கள நடுகைக்கு முன் பழக்கப்படுத்தல்

செய்கை காலம்

பயிரானது வருடம் முழுவதும் செய்கை செய்யலாம். பயிரை மழை வீழ்ச்சியுடன் செய்கை செய்வது வெற்றிகரமானது

நடுகை இடைவெளி

வரிகளுக்கிடையில் 2 மீற்றர் வரிகளுக்குள் 2 மீற்றர் இடைவெளி

பசளை

கள நடுகை செய்த போது மற்றும் ஒவ்வொரு 5-6 மாத இடை வெளியில் சேதன பசளையான ஆட்டெரு, கூட்டுப் பசளை அல்லது கோழியெரு கிடைக்குமாயின் இடுவதற்கு அறிவுருத்தப்படுகிறது

நீர் வழங்கல்

உலர் காலநிலையில், அதிக விளைச்சல் கிடைக்கு நீர்பாசனம் செய்யலாம்.

களைக் கட்டுப்பாடு

களைகள் கட்டுப்பாடு செய்வதோடு பயிரை தூய்மையாக பேணல்

பீடை முகாமைத்துவம்

பயிரின் ஆரம்ப நிலையில் நத்தை மற்றும் இலையுண்ணும் புழு தாக்கத்தை அவதானிக்க முடியும்.

சேகரித்து அகற்றுதல்  அல்லது மரச்சாம்பல் இடுவதன் மூலம் இவற்றை கட்டுப்படுத்தலாம்.

நோய் முகாமைத்துவம்

நோய் காரணி: பங்கசு

அறிகுறிகள்

  • பொதுவாக வட்டமாகி உருவாகி இலை மேற்புறங்களில்  தூள் போன்ற வெந் புள்ளிகள் தோன்றும்
  • இது பொதுவாக இலைகளின் மேற்புறத்தை மூடிவிடும் ஆனால் இலையின் கீழ் புறத்தில் வளரும்
  • தீவிர தொற்றின் போது இலைகள் மஞ்சளாகி முதிராது உதிரும்

முகாமைத்துவம்

  • கத்தரிக்கலாம்

அறுவடை

இலை அறுவடையானது நடுகை செய்து 8 மாதங்களின் பின் மற்றும் பூ பூத்து ஒரு வருடத்தின் பின்னர் பெறலாம்.

விளைச்சல்

ஒரே தடவையில் 4000 – 8000 kgs/ac இலைகளை அறுவடை செய்யலாம்.

கத்தரித்தல்

இது ஒரு பல்லாண்டு தாவரமானகையால், இதனை கத்தரிப்பு செய்யாவிடின் அல்லது முறையாக பராமரிக்காவிடின் 6 மீற்றர் உயரத்திற்கு மேல் வளர முடியும், ஆகையால் பூ பறித்தல் மற்றும் இலைகளை உயரமான மரங்களில் இருந்து பெறுவது கடினம். கத்தரித்தல் மற்றும் நீர் வழங்கல் பூத்தலை குறைக்கும் மற்றும் இலை எண்ணிக்கையை அதிகரிக்கும்.

தாவரம் 1 மீற்றர் உயரத்தில் வளருமாயின், உச்சிகளை அகற்றுவதன் மூலம் கிடை மட்ட கிளைகள் வளரவிடல். எஞ்சிய கிளைகளில் ஆரோக்கிமானவற்றை மாத்திரம் விடல். 3-4 கிளைகளை படர விடல். கிடை மட்ட கிளைகள் 1-1 1/2 மீற்றர் உயரத்தை அடையும் போது, உச்சியகற்றப்பட வேண்டும். பூக்க முன் இப் பகுதிகளில் முளைக்கும் தளிர்களை அகற்றல் மற்றும் இலை அறுவடைக்கு பயன்படுத்தல். அதிக காலத்தில், கத்தரிக்கப்பட்ட இடமானது முடிச்சு உருவாகும். சில கத்தரித்த தாவரமானது 1 1/2 மீற்றர் உயரத்தில் வெட்டப்படும் மற்றும் அவை இலகுவாக அறுவடை செய்யப்படும் ஒவ்வொரு அறுவடையின பின்னும் சேதன பசளையிட அறிவுருத்தப்படுகிறது. சிறிதளவு யூரியா சேர்க்கை புதிய தளிர் உற்பத்தியை தூண்டும் கத்தரித்தல் மற்றும் அறுவடையில் அனைத்து கிளைகளையும் அகற்ற அறிவுருத்தப்படவில்லை.