
- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
<< பயிர் பக்கம்

கன்குங்
(Ipomea aquatica)
கன்குங் ஒரு பிரசித்திமிக்க இலை மரக்கறியாகும். நாட்டின் பெரும்பாலான பகுதியில் வர்த்த ரீதியாக நீர்பாங்கான தாழ்நிலங்களில் பரவலாக வளர்க்கப்படுகிறது.
காணப்படும் வகைகள்
இதன் தாவர தண்டு, இலைகள் மற்றும் பூக்களின் நிற அடிப்டையில் இரு வகைப்படும்
1. ஊதா வகை
தண்டு மற்றும் பூவானது ஊதா நிறமானது. நாட்டின் சில பகுதிகளில் வர்த்தக ரீதியில் வளர்க்கப்படும். ஒப்பீட்டளவில் உயர் தாவரபால் கொண்டது.
2. பச்சை வகை
தண்டு பச்சை நிறமானது. பூ வெந்நிறமானது. இரு வகையானது. அவை தாய்லாந்தை பூர்வீகமாக கொண்டதென அடையாளங் காணப்பட்டுள்ளது. இவ்விரு வர்க்கங்களும் வர்த்தக ரீதியில் வளர்க்கப்படுபவை. இதன் தாவர பால் இயல்பானது ஒப்பீட்டளவில் குறைவு மற்றும் பிரபல்யமானது.
வளர்ச்சி அடிப்படையில் இரு வகைப்படும்
- கொடி வகை- ஊதா நிறதண்டு, ஓடிகளாக வளரும்
பூக்கள் ஊதாநிறமானவை
- தர் வகை – பச்சை தண்டு, வெந்நிற பூக்கள், புதராக வளரும்
காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
மலை நாட்டு பிரதேசங்கள் தவிர போதிய நீருள்ள, நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் வளரும். இதன் அதிகபடியான நீர் தேவை காரணமாக ஈர வலயங்களில் பரவலாக வளரும்.
மண்
போதிய நீர்பாசனத்தோடு உயர்நில பிரதேசங்களில் நீர் தேங்கும் ஈரப்பாங்கான நிலங்களில் பயிர் வெற்றிகரமான வளரும். உயர் நில செய்கையில் நீர் தவிர்க்கப்படும் போது விரைவாக பூக்கும். உலர் வலயங்களில் குளங்கள், சதுப்பு நிலங்கள், நீர் முதல் போன்றவற்றில் கன்குங் செழித்து வளரும். செய்கைக்கு ஓரளவு அமிலத் தன்மையான 6-7 பி.எச் வீச்சுடைய மண் பொருத்தமானது.
நடுகை பொருட்கள்
தண்டு வெட்டுத் துண்டு மற்றும் விதைகளை நடுகை பொருளாக பயன்படுத்தலாம். தாய் வர்க்கம் விதை உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் மற்றும் நல்ல விதை உற்பத்திக்கு நவம்பர், டிசம்பர் மற்றும் ஜனவரி போன்ற குறைந்த வெப்பநிலை உடைய நல்ல இடமாக இருக்க வேண்டும்.
நடுகைக்கு 20-30 செ.மீ நீளமான தண்டு துண்டுகள் பயன்படும். நடுகை செய்ய முன் தண்டில் இருந்து இலைகள் அகற்றப்பட வேண்டும்.
ஆரோக்கியமான பயிரில் இருந்து நடுகை பொருளை பெறல் (பீடை மற்றும் நோயற்றது )
செய்கைக் காலம்
பயிரானது தாழ் நிலங்களில் நீருள்ள போது வருடத்தின் எந்த நேரத்திலும் வளரும். உயர் நிலங்களின் செய்கைக்கு தொடர் நீர் தேவை உள்ளமையால் மழை பருவத்தில் செய்கையை ஆரம்பிப்பது சிறந்தது
கள தயாரிப்பு மற்றும் நடுகை
தாழ் நில செய்கை பிரதேசங்கள்
நிலத்தை உழுது, நீரை சேர்த்தல் மற்றும் களைகள் உக்கலடைய விடல். பின்னர் தயார் செய்த நிலத்தில் சில வடிகால்களை தயார் செய்வதன் மூலம் தேவையான போது மேலதிக நீரை வெளியேற்றலாம். பெரிய மண் கட்டிகளை உடைத்து நிலத்தை மட்டப்படுத்தல். துண்டங்களை 30x30cm2 இடைவெளியில் நடல். துண்டங்களை சீரற்ற ஒழுங்கிலும் நடலாம். நீரை தேங்கிய சதுப்பு நிலத்தில், நிலத்தை தயார் செய்யாது உச்சி நீக்கிய கன்குங் துண்டங்களை வீசி விதைப்பு செய்யலாம்.
உயர் நில செய்கை
நிலத்தை உழுதல் மற்றும் பெரிய மண் கட்டிகளை உடைத்தல் மற்றும் களத்தில் இருந்து அனைத்து களைகளையும் அகற்றல். தயாரித்த நிலத்தில் தாழ் பாத்திகளை தயார் செய்தல் மற்றும் மேலதிக நீர் சேர்த்தல். 30x30cm2 இடைவெளியில் கன்குங் துண்டங்களை நடல்
நடுகை பொருட்கள்
தண்டு துண்டங்கள் மற்றும் விதைகளை நடுகை பொருளாக பயன்படுத்தலாம். தாய் வர்க்கத்தை வித்து உற்பத்திக்கு பயன்படுத்தலாம் மற்றும் நவம்பர், டிசம்பர் மற்றம் ஜனவரி காலங்களில் குறைந்த வெப்ப நிலை உள்ள இடங்களில் வித்து உற்பத்தி செய்யப்படும்.
நடுகைக்கு 20-30 செ.மீ நீள தண்டு துண்டங்கள் பயன்படுத்தப்படும் நடுகை செய்ய முன் தண்டியிலிருந்து இலைகள் அகற்றப்பட வேண்டும்.
ஆரோக்கியமான பயிரில் இருந்து நடுகைப் பொருளை பெற வேண்டும் (பீடை மற்றும் நோயற்றது)
பசளை
சேதன பசளை
1000m2நிலத்திற்கு நன்கு உக்கிய மாட்டெரு, கோழியெரு அல்லது கூட்டுப்பசளை 01 மெட்ரிக் தொன்னை (1 ton/1000m2) கன்குங் நடுகை செய்ய முன் இடல். விவசாயிகளால் பரந்தளவில் கோழியெரு பயன்படுத்தப்படுகிறது. இது நெமற்றோடு பாதிப்பை குறைப்பதோடு களை பரவலை கட்டுப்படுத்தும்.
1000m2 க்கான இரசாயன பசளை
பசளை இடல் | யூரியா Kg. | முச்சுபர் பொசுபேற்று Kg. | மியூரைட் பொட்டாசு Kg. |
அடிக்கட்டு பசளை | 9.0 | 13.5 | 10.0 |
நடுகை செய்து 4 வாரங்களின் பின் | 9.0 | – | – |
ஒவ்வொரு அறுவடையின் பின்னர் | 4.5 | – | 1.5 |
ஒவ்வொரு 6 மாதம் | – | 6.5 | – |
குறிப்பு – மண் சோதனையின் பின் அடிக்கட்டு பசளையாக பொசுபரஸ் மற்றும் பொட்டாசியம் சேர்ப்பது சிறந்தது.
நீர் வழங்கல்
ஒவ்வொரு 3-4 நாட்கள் அடிக்கடி நீர் பாய்ச்சுவதன் மூலம் உலர் காலநிலையில், பயிர் வாட அனுமதிக்காமை நல்லது.
களைக்கட்டுப்பாடு
நேரத்திற்கமைய கன்குங் உடன் வளரும் களைகளை அகற்றல் மற்றும் களத்தை தூய்மையாக பேணல்
பீடை முகாமைத்துவம்
Leaf rolling and leaf eating catterpillars, worms aphids, thrips, mites and nematodes
If the attack is severe, cut, romove and destroy all the affected plant parts by burning
If it is necessary, apply recommended pesticides for tender new flushes
நோய் முகாமைத்துவம்
Brown spot disease – Application of K rich fertilizers, Remove and destroy affected plant parts
White rust disease – – Application of K rich fertilizers, Remove and destroy affected plant parts, avoid application of nitrogenous fertilizers, Follow crop rotation
அறுவடை
உயர் நிலத்தில் பயிர் வளர்ந்து 30 நாட்களில் முதல் அறுவடையை பெறலாம் மற்றும் அவை தாழ் நிலங்களில் வளரும் போது, நடுகை செய்து 20 நாட்களில் அறுவடையை பெறலாம். அதன் பின் ஒவ்வொரு 20-25 நாட்களில் அறுவடையை பெறலாம்.
விளைச்சல்
1000m2 பிரதேசத்தில் 2000 kg ஐ பெறலாம் (2000kgs / 1000m2 )