Tamil: HORDI Crop – Ela Batu

HORDI - LOGO

வட்டுக்கத்திரி

Solanum insanum

இம் மரக்கறி பயிரானது கடந்த காலங்ளில் சேனைப் பயிர் செய்கையாக செய்கை செய்யப்பட்டது. தற்போது இது வீட்டுத் தோட்டங்களிலும் வர்த்தகப் பயிராகவும் பெரும்பாலும் வளர்க்கப்படுகிறது. வட்டுக்கத்தரி ஒரு வன்மையான தாவரம் மற்றும் உலர் காலநிலைக்கு நன்கு இசைவாக்கம் அடைந்தது என்பதால் இதை வெற்றிகரமாக உலர் வலயங்களில் செய்கை செய்யலாம். வட்டுக்கத்தரியின் அறுவடைகால முடிவில் கத்தரிப்பதன் மூலம் ஒரு வருடத்திற்கு மேல் விளைச்சலை பெறலாம்.

பரிந்துரைக்கப்பட்ட வர்க்கங்கள்

காலநிலைத் தேவைகள்/ செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

இப் பயிரானது தாழ்நாட்டு ஈர, இடை மற்றும் உலர் வலயங்களிலும் மற்றும் ,இடை நாட்டு ஈர மற்றும் இடை வலயங்களிலும் வெற்றிகரமாக வளரும்

மண்

நன்கு நீர் வடிப்புள்ள, 5.5 – 5.8 வரையான ph உடைய இலேசான இருவாட்டி மண் செய்கைக்கு மிகப் பொருத்தமானது.

விதைத் தேவை

250 – 300 g/ha

நாற்று மேடை முகாமைத்துவம்

1m x 3m எனும் அளவில் 15-20cm உயரமான உயர் பாத்தியை தயாரிக்கவும். பாத்தியின் மீது 1:1 எனும் அளவில் சலித்த சேதன பசளை மற்றும் மேல் மண் கலவையை படையாக இடவும். வைக்கோல் மற்றும் உமியை எரிப்பதன் மூலம் பாத்தியை தொற்றுநீக்கவும். பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினிகள் மூலம் வித்து சிகிச்சை அளிக்கவும். பாத்தியில் 10-15cm விதைகளுக்கான இடைவெளியில் 0.5-1cm ஆழத்தில் நடுகை செய்து மெல்லிய மண் படையால் மூடிவிடவும். பாத்தியின் மேல் வைக்கோலை மூடுபடையாக இட்டு தினமும் நீர் பாய்ச்சவும். முளைத்தல் முழுமையடைந்த பின் மூடுபடையை நீக்கவும். அதிகபடியான மழைவிழ்ச்சி மற்றும் நீண்ட நேர சூரிய ஒளியில் கன்றுகள் இருப்பதை தவிர்க்கவும். நாற்றுகளுக்கு சூரிய ஒளியை படச்செய்வதன் மூலம் வன்மைப்படுத்தல் மற்றும் நடுகை செய்ய ஒரு வாரத்திற்கு முன் நீர்வழங்கல் இடைவெளியை அதிகரிக்கவும். 3-4 வாரத்தின் பின் கன்றுகள் நடுகைக்கு தயாராகும்.

நிலப்பண்படுத்தல்

பற்றீரிய வாடலை கட்டுப்படுத்த முந்தைய இரு பருவங்களில் சொலனேசிய குடும்ப பயிர்களைக் கொண்டு பயிர் செய்த களத்தை தவிர்க்கவும். களத்தை 15-30cm ஆழத்திற்கு உழுதல் மற்றும் 30x30x30 cm எனும் அளவுடைய நடுகை குழிகளை தயார் செய்தல். சேதன பொருட்களை சேர்த்தல். 20 முதல் 30 நாட்கள் வயதுடைய ஆரோக்கியமான, நான்கு முழுமையாக விரிந்த இலைகளுடனான நாற்றுகளை ஒரு குழிக்கு ஒன்று எனும் விதத்தில் நடுகை செய்யவும்.    

செய்கை காலம்

பெரும் போகம் – நவம்பர் முதல் டிசம்பர்

சிறுபோகம்- ஏப்ரல் முதல் மே

நடுகை செய்ய ஒரு மாதத்திற்கு முன் நாற்று மேடையில் இட வேண்டும்

நடுகை இடைவெளி

வரிகளுக்கிடையில் 90cm மற்றும் வரிசையினுள் இடைவெளி 60cm இடைவெளி

பசளையிடல்

இட வேண்டிய காலம்

யூரியா

(Kg/ha)

முச்சுபர்

பொசுபேற்று

(Kg/ha)

மியுரைட்டு

பொட்டாசு

(Kg/ha)

அடிக்கட்டு பசளை

75

325

80-85

மேற்கட்டு பசளை

( நடுகை செய்து 1 மாதத்திற்கு பின்)

75

மேற்கட்டு பசளை

( நடுகை செய்து 2 மாதத்திற்கு பின்)

75

85

மேற்கட்டு பசளை

( நடுகை செய்து 3 மாதத்திற்கு பின்)

75

நீர் வழங்கல்

உலர் காலங்களில் குறைந்தபட்சம் 5 நாள் இடைவெளியில் நீர் வழங்கல்

களைக்கட்டுப்பாடு

களமானது களைகளற்று பராமரிக்கப்பட வேண்டும். சில களைகள் பூச்சிகளுக்கு விருந்துவழங்கி தாவரமாகும். களையகற்றல் பீடை குடித்தொகையை குறைக்க உதவும். ஒவ்வொரு பசளையிடலுக்கும் முன்னரும் களையகற்ற வேண்டும்.

பீடை முகாமைத்துவம்

வட்டுக்கத்தரியை பாதிக்கும் முக்கிய பீடைகளாவன தளிர் மற்றும் பழ துளைப்பான் (SFB), சிற்றுண்ணி மற்றும் த்த்திகள்

தாக்கத்தை பரிந்துரைக்கப்பட்ட பீடை நாசினிகள் மூலம் கட்டுப்படுத்தலாம்

நோய் முகாமைத்துவம்

பற்றீரிய வாடலானது வட்டுக்கத்தரியில் பொதுவாக அவதானிக்கக் கூடியது. இதற்கு எவ்வித இரசாயன கட்டுப்படும் இல்லை. அனைத்து சொலனேசியே பயிர்களுக்கும் இது ஒரு முதன்மை நோயாகும். ஆழமான வடிகால் அமைப்பு மற்றும் எதிர்ப்புதிறன் கொண்ட வர்க்கங்கள் பயன்படுத்தல் நோய் கட்டுப்பாட்டிற்காக பரிந்துரைக்கப்படுகிறது

அறுவடை மற்றும் பதப்படுத்தல்

கள நடுகை செய்து 10-12 வாரங்களின் பின் அறுவடையை பெறலாம். ஒரு கிழமை இடைவெளியில் 10-12 பறிப்பு சாத்தியமானது. 

விளைச்சல்

20-25 தொன்/ha