Tamil: HORDI Crop – Bitter gourd

HORDI - LOGO
<< பயிர் பக்கம்

பாகல்

Momordica Charantia

பாகல் இலங்கையில் ஒரு பிரபல்யமான மரக்கறியாகும். இந்த பயிர் உயர் மருத்துவ மதிப்புடன் நீருழிவு நோய் எதிரி மற்றும் புற்று நோய் எதிரிப்பு பொருட்களையும் கொண்டுள்ளது. உயர் போசனை மற்றும் மருத்துவ மதிப்பு காரணமாக இது உயர் கேள்விப் பயிராக உள்ளது.

வெளியிடப்பட்டுள்ள வர்க்கங்கள்

காலநிலைத் தேவை / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

கடல் மட்டத்தில் இருந்து 1200 மீ க்கு மேல் வெற்றிகரமாக செய்கை பண்ணலாம்

மண்

நல்ல வடிப்புள்ள மண்ணுடன் அதிக கூட்டு பசளையை உள்ளடக்கிய மற்றும் 5.5-7.5 வீச்சிலான பீ.எச் அளவு பொருத்தமானது

விதைத்தேவை

6 kg/ha

நாற்று மேடை முகாமைத்துவம்

நாற்று மேடை மணற்தட்டுகளில் அல்லது பாத்திகளில் தயார் செய்யலாம். வித்துகளுக்கு நல்ல நீர் வழங்கல் மற்றும் சூரிய ஒளியுடன் நேரடியாக நாற்று மேடையில் பயிரிடலாம். நேரடி நடுகை செய்து 10 நாட்களின் பின்னர் நேரடியாக நாற்று மேடையில் இருந்து மாற்றீடு செய்யலாம். மேலதிக நாட்கள் தேவையாயின், தாவரங்ளை மேலும் 2 வாரங்களுக்கு சாடியில் மாற்றீடு செய்யலாம்

நில தயாரிப்பு

20- 30cm ஆழம் வரை மண்ணை உழுது தூர்வையாக்குவதுடன் சிறு துண்டுகளாக்கள் மற்றும் 30 x30x30cm குழிகளில் உக்கிய கூட்டுப்பசளை மற்றும் மேல் மண்ணுடனான கலவையால் அமைக்கவும்

நடுகை செய்தல்

பெரும் போகம் -ஒக்டோபர் முதல் நவம்பர்

சிறு போகம் – ஏப்ரல், மே

பொருத்தமான பிரதேசங்களுக்கு வருடம் முழுவதுமான செய்கைக்கு இடங்கொடுக்கலாம்.

பரிந்துரைக்கப்பட்ட இடைவெளியில், நேரடி சூரிய ஒளியில் ஒரு குழியில் 3 வித்துகள் வீதம் 2-3 செ.மீ ஆழத்தில் வித்திடலாம். தயாரிக்கப்பட்ட நாற்று மேடை தாவரங்களை களத்தில் நல்ல காலத் தெரிவின் போது நடுகை செய்யலாம்

பழக்கப்படுத்தல்- நடுகை செய்து 3 வாரங்களின் பின் தாவரங்ளை வலை அல்லது கம்புகளுக்கு பழக்கப்படுத்தல். தாவரத்தின் கீழ் மட்டத்தில் உள்ள பக்கக் கிளைகளை கத்தரித்தல்

நடுகை இடைவெளி

  1. 5 மீ x 1மீ

பசளையிடல்

பசளை இட வேண்டிய காலம்

யூரியா kg/ha

முச்சுபர் பொசுப்பேற்று kg/ha

மியூரைட் பொட்டாசு kg/ha

அடிக்கட்டு பசளை

75

200

60

4 வாரங்களின் பின்

75

60

8 வாரங்களின் பின்

75

60

நீர் வழங்கல்

பயிரை போதிய மண்ணீர் உள்ளவாறு பராமரித்தல். நீரில் மூழ்குவதால் தாவரம் சேதமாகும். உலர் காலங்களில் மண் மூடுபடை இடுவது மண் ஈரலிப்பை பாதுகாக்க உதவும்.

Pest Management

நோய் முகாமைத்துவம்

  • பங்கசு நோய்கள்

நோயாக்கி : Podosphaera xanthii

அறிகுறிகள:

  • முதலில் முதிர்ந்த இலைகளில் வெளிர் மஞ்சள் நிற புள்ளிகள் தோன்றும்
  • இந்த புள்ளிகள் பெரிதாகி வெள்ளையாகும், இலைகளின் மேல்புறத்தில் பஞ்சு போன்ற மைசிலியம் உருவாகும்
  • தீவிர பாதிப்புக்குட்பட்ட இலைகள் கபிலமாகி சுருங்கி மற்றும் உதிர்வு என்பன ஏற்படும்

முகமைத்துவம்:

  • நோய் விருத்தியுற்ற ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவணை ( குறிப்பு: 2019, DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
  • அறுவடைக்கு பின் பாதிக்கப்பட்ட தாவர கழிவுகளை அகற்றல்

நோயாக்கி : Pseudoperonospora cubensis 

அறிகுறிகள்:

  • இலை மேற்புறத்தில் இலை நரம்புகளால் கோணலான மஞ்சல் புள்ளிகள் உருவாகின்றன
  • இலைகள் மஞ்சலாக மாறி இறுதியில் இலைய இறப்பு மற்றும் விருந்து வழங்கி தாவர கலம் இறக்கும்

முகாமைத்துவம்:

  • நோய் விருத்தியடைந்து ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பயன்பாடு (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
  • அறுவடையின் பின் பாதிக்கப்பட்ட தாவர கழிவுகளை அகற்றல்

நோயாக்கி:  Sclerotium spp., Fusarium spp.

அறிகுறிகள்:

  • ஆரம்பத்தில் தாவரம் தற்காலிக வாடல் குறிகளை காட்டும்
  • இலைகள் மஞ்சளாதல், தளர்வான கொந்தளிப்பு மற்றும் உதிர்வை காட்டும்
  • சமமாக தாவரங்கள் இறக்கும்
  • கழுத்துப்பகுதியில் உள்ள நரம்பு முடிச்சிகள் மஞ்சள் அல்லது கபிலமாகும்

முகாமைத்துவம்:

  • பாதிக்கப்பட்ட தாவரங்களை மண்ணுடன் அழித்தல்
  • நீர் வடிகாலை மேம்படுத்தல்
  • நோய் விருத்தியடையும் ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவனை (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)

நோயாக்கி: Didymella bryoniae

அறிகுறிகள்:

  • இலைகளில் மற்றும் பழங்களில் உள்ள காயங்களில் வழமையான நீர் ஊரிய பகுதிகள் பரவலடையும்
  • ஆரம்பத்தில் மஞ்சளான ஒளிவட்டமானது இளம் கபில மற்றும் ஒழுங்கற்ற வெளிக்கோடுகள் ஆகும்
  • பழங்களில் இருண்ட விரிசல்களுடனான குழிவான அடையாளங்கள் காணப்படும்
  • குழிவான , புற்றுநோயால் தாவரம் சரியும்
  • தண்டுகளில் உள்ள புள்ளிகள் நீண்டு கோடுகளாகும் மற்றும் பசை போன்ற திரவம் வெடிப்புகளில் இருந்து வரும்
  • பழம்,தண்டு அல்லது இலைகளில் கடும் கபிலம் முதல் விருத்தி உடல்கள் (pycnidia) காணப்படும்

முகாமைத்துவம்:

  • பங்கசு வாழ்தகவை குறைக்க அறுவடையின் பின் உடனடியாக தாவர கழிவுகள் ஆழத்திற்கு உழ வேண்டும்
  • நோய் விருத்தியடையும் ஆரம்ப நிலையில் பரிந்துரைக்கப்பட்ட பங்கசு நாசினி பாவனை (குறிப்பு :2019 DOA பரிந்துரைத்த பங்கசு நாசினி)
  • பற்றீரிய நோய்

நோய் காரணி : Ralstonia solanacearum

அறிகுறிகள்:

  • சடுதியான இலை உதிர்வு
  • முழுத்தாவரமும் இறுதியில் வாடும்
  • இலைகள் கபிலமாகி காயும்
  • நரம்புகள் வெளிரல்
  • நிரந்தர வாடல்

நோய்காரணி பரவல்;

  • பாதிக்கப்பட்ட மண், நீர் , தாவர கழிவு, நெமற்றோடு மற்றும் பூச்சிகள், கத்தரித்தல், களைகள் விருந்து தாவரமாக இருத்தல்

நோயை கண்டறிதல் : தெளிந்த நீரில் பாதிக்கப்பட்ட தாவரத்தின் அடியை வெட்டி போடும் போது மெல்லிய பிசுபிசுப்பான பற்றீரிய சுரப்பு வெளியேறும்

முகாமைத்துவம்:

  • பாதிக்கப்பட்ட தாவரத்தை மண்ணுடன் அழித்தல்
  • எளிதில் பாதிப்படையாத தாவரங்களுடனான பயிர் சுழற்சி முறை (வெண்டி, சோளம்)
  • குருசிபெரேசியே பயிர்களுடனான கலப்பு பயிர்ச் செய்கை
  • பாதிக்கப்பட்ட களத்தில் இருந்து ஆரோக்கியமான களத்திற்கு உபகரணங்களை எடுத்துச் செல்வதை தவிர்த்தல்
  • வைரஸ் நோய்கள்

வெண் ஈ மூலம் காவப்படும் (Bemicia tabaci)

அறிகுறிகள்:

  • மேற்புற சுருளல்,குருகுதல் மற்றும் அடையாளங்கள்
  • தாவரம் குறளடைதல் மற்றும் பழங்கள் விகாரமடைதல்

அழுக்கணவன் மூலம் காவப்படும் 

அறிகுறிகள்:

  • இலைகளில் சித்திர வடிவம் மற்றும் அடையாளங்கள்
  • இலை திரிபடைதல்
  • பழங்கள் விகாரமடைதல் மற்றும் உருவளவு குறைதல்
  • தீவிர பாதிப்பில், பழ மேற்பரப்பில் எண்ணெய் தன்மையான அடையாளங்கள் ஏற்படல்

காவி விதையிலுள்ள சாறு மூலம்

அறிகுறிகள்:

  • பச்சை புள்ளிகள், இலை உரு திரிபடைதல்
  • பழங்களில் பச்சை புள்ளிகள், பிரகாசமான மஞ்சளாகி சிதைவடையும்
  • பழங்கள் விகாரமடைதல்

அறிகுறிகள்

  • குறளடைதல், மஞ்சளாதல்,வெளிரல் (காலத்திற்கு), சித்திரவுரு, இலை திரிபு (கொப்புளங்கள் தொடராக காணப்படல்)
  • பழங்கள் நிறமற்று போதல் மற்றும் திரிபடைதல்
  • பைடோபிளாஸ்மா நோய்

நோய் அறிகுறிகள் இலைகள் சிறிய, தடிப்பான மற்றும் மஞ்சள் சார் பச்சை நிறமானவை. குறுகிய கனுவிடை மற்றும் தாரவம் குறளடைந்து சூனியக்காரியின் துடைப்ப நோய் அறுகுறிகள் ஏற்பட்டு பூக்கள் பச்சையாகும் . நோய் இலை தத்தி மூலம் பரவடைகிறது

நோய் கட்டுப்பாடு – பாதிக்கப்பட்ட தாவரங்களை அகற்றல். பரிந்துரைக்கப்பட்ட பூச்சி நாசினிகளை பயன்படுத்தி காவிகளை கட்டுப்படுத்தல் ( இலை தத்தி)

 

Harvesting

விளைச்சல்

திறந்த மகரந்த சேர்க்கை வர்க்கம் சராசரியாக 20t/ha மற்றும் கலப்பு வர்க்கம் 20-30t/ha