Tamil: HORDI Sub Institute12- FRU-Technologies

HORDI - LOGO

உணவு ஆராய்ச்சி அலகு - தொழில்நுட்பங்கள்

கொய்யாவை (அப்பிள் வர்க்கம்) கட்டுப்படுத்திய வெப்பநிலை (100 – 130 C ) மற்றும் சாரீரப்பதன் (75-85%) நிலையின் கீழ் 4-5 வாரத்திற்கு வெற்றிகரமாக களஞ்சியப்படுத்தி ஏற்றுமதியும் செய்யலாம். மேலும் உண்ணக்கூடிய மெழுகை இடுவதனால் களஞ்சிய காலத்தை 4-5 வாரத்திற்கு நீட்டிக்கலாம்.

மிளகாய் தூளிற்கு பல்பொருள் அங்காடியின் 220 C முதல் 240 C வரையான வெப்ப நிலையுடன் இருளான சூழ்நிலை களஞ்சிய நிலைக்கு மிக பொருத்தமானது. இது ஈரப்பதன், அஸ்கோபிக் அமில சேர்வை, மொத்த பிலோனிக் கூறு மற்றும் நிறம் போன்ற பெரும்பாலான அளவுருக்களை 04 மாதங்களுக்கு பாதுகாக்கின்றது.  ஆய்வு காலத்தில் களஞ்சிய நிலைமைகளுடன் Affalatoxin உற்பத்தி துரிதப்படுத்தப்படவில்லை.

சிவப்பு குடை மிளகாய் வர்க்கமான இந்திராவின் மீது கற்றாளை ஜெல் படையை இடுவதால் அறுவடைக்கு பிந்திய எடை இழப்பு, முற்காப்பு மற்றும் போசணை பாதுகாப்பு என்பவை தொடர்பான மதிப்பீடை அறிய  ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. 100% கற்றாளை ஜெல்லானது சூழல் வெப்பநிலையின் கீழ் 9-12 நாட்களுக்கு நல்ல களஞ்சிய பேறுகளை காட்டியது.

பலா விதை மாவானது சந்தையில் காணப்படும் கோதுமை சார் உற்பத்திகளுக்கு நல்ல ஓர் மாற்றீடாகும். பலா விதைகளானது புரதம், நார் பொருள் மற்றும் காபோவைதரைட்டு அதிகளவில் கொண்டுள்ளது. பலா பழ குக்கீகள் வெவ்வேறு அளவுகளில் 55% கோதுமை மாவுடன் பலா விதை உள்ளீட்டு மா 40% மற்றும் பலா விதை மா 5% யும் உள்ளீடுகளாக கொண்டுள்ளன. குக்கீகளை 3 மாதங்கள் வரை களஞ்சியப்படுத்தலாம்.

இலங்கை சோஸ் உற்பத்தி தொழிற் துறைக்கான தக்காளி இல்லாமையால் வருடம் முழுவதும் புதிய சதைகளை இறக்குமதி செய்கின்றனர். சோஸ் தயாரிக்க தக்காளி தூளை நாம் பயன்படுத்துவோமாயின் இந்த பிரச்சினையை தீர்க்க முடியும். தக்காளி தூள் மூலம் சோஸ் உற்பத்தி செய்ய தக்காளி தூளின் செயற்றிறனை அறிய ஆய்வு செய்யப்பட்டது. நீரிழக்கப்பட்ட தக்காளியில் இருந்து தக்காளி தூள் தயாரிக்கப்பட்டது. தக்காளியானது (திலின வர்க்கம்) வித்து உள்ள மற்றும் வித்தற்ற நிலையில் மேற்காவுகை மற்றும்  வெற்றிட உலர்த்தியில் நீரிழக்கச்செய்யப்பட்டது. தக்காளி தூளை 6 மாதம் வரை கண்ணாடி போத்தல்களில் சேமிக்கலாம். சோஸானது நீரிழக்கப்பட்ட தூளில் இருந்து தயாரிக்கப்பட்டது. மற்றும் விதையிடனான தக்காளியில் இருந்து பெறப்பட்ட தூளில் இருந்து சோஸ் மாதிரியானது தயாரிக்கப்பட்டது வெற்றிட உலர்த்தியில் VS+ தயாரித்த விதையுடனான தக்காளி தூளில் இருந்து தயாரிக்கப்பட்ட சோஸ் அனைத்து உணர்வு பண்புகளிலும் சிறந்தவையாக தெரிவு செய்யப்பட்டது. VS+ இல் போசனைகள் உயர்ந்தளவில் தக்கவைக்கப்படும். VS+  பாவணை மற்றும் கட்டுப்பாட்டில் சோஸ் தயாரிக்கையில் பெளதீக இரசாயன காரணிகளி​ல் எவ்வித குறிப்பிடதக்க மாற்றமும் அவதானிக்கப்பட வில்லை. இலங்கையின் தக்காளி சோஸ் தொழிற்துறையில் வெற்றிட நீரிழக்கப்பட்ட தூள் பாவனையானது மிக  பயனுள்ளதாகும்.

நூல் / சரம் போன்ற பூசணிகள் நீரிழப்பு தொழில்நுட்பம் உணவு துறையில் அபிவிருத்தி மற்றும் பரவலுக்கு பயன்படுத்தப்படுகிறது.

ஆராய்ச்சியானது பூசணி பாதுகாப்பு தொழில்நுட்பங்களின் அபிவிருத்திக்காக நடத்தப்பட்டதுடன் புதிய சுவையான பெறுமதி சேர் பொருட்களை அறிமுகம் செய்வதால் அறுவடைக்கு பிந்திய இழப்புகளை குறைப்பதோடு விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்கும். உலர் காற்று உலர்த்தியால் பூசணி நீரிழக்கச் செய்யப்படுவதோடு உலர்த்தப்பட்ட உற்பத்திகள் தூளாக்காத வடிவத்தில் உணவுடன் சேர்க்கப்படுகிறது. தூளாக்கப்படாத வடிவமானது 300 கேஜ் உடைய பொலிதீனில் அடைக்கப்பட்டு ஆறு மாதங்களை கடந்த களஞ்சிய நிலையிலேயே நுண்ணங்கி மதிப்பீட்டை காட்டியது. இந்த தூளாக்கப்படாத வடிவமானது நூடில்ஸ் துறை, பிரைட் ரைஸ் மற்றும் ஏனைய உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது. சுவைக்கும் போது அனைத்து உணவு தயாரிப்புகளிலும் உணர் பண்பானது உயர்ந்தளவில் ஏற்புடையது.

நீரிழப்பின் மூலமாக பூசணி மா தயாரிப்பிற்கான தொழில்நுட்பமானது மேம்படுத்தி பரப்பப்பட்டது.

பூசணியை உலர்த்த உலர் காற்று உலர்த்தி பயன்படுத்தப்பட்டு உடைக்கப்பட்டு மற்றும் சலிக்கப்பட்டு மாவு தயாரிக்கப்படும். தூய தொற்றுநீக்கிய கண்ணாடி போத்தலில் அடைத்து ஆறு மாதகாலத்திற்கு மேல் களஞ்சிய படுத்தும் போது நுண்ணங்கி மதிப்பீடு காட்டப்பட்டது. இம் மாவானது வெற்றிகரமாக வெதுப்பக துறையில் பாண், பன் மற்றும் பிஸ்கட் செய்ய அறிமுகப்படுத்தப்பட்டது.

பூசணி மா சேர்க்கப்பட்ட பாண் உற்பத்தி தொழில்நுட்ப அபிவிருத்தி தொடர்பான ஆய்வு

பல்வேறு அளவீட்டில் பூசணி மா சேர்க்கப்பட்டு பாண் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த உணர் பண்பு மதிப்பீட்டின் மூலம் பாண் உற்பத்தி செய்ய சரியான பூசணி மா அளவீடு தெரிவு செய்யப்பட்டது. பூசணி மா சேர்க்கப்பட்ட பாணுடன் சாதாரண பாணுக்கான போசணை மதிப்பீட்டு ஒப்பீடு செய்யப்பட்டது.

புதிய பூசணி பயன்படுத்தி பெறுமதி சேர் உற்பத்தி அபிவிருத்தி

இலங்கையில் பூசணியானது மிக போசணைமிக்க, முக்கிய மரக்கறியாவதோடு பரந்தளவில் வளர்க்கப்படுகிறது. போகத்தில் விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் விலை குறைவு மற்றும் அதிகளவு விளைச்சல் வீணாதல் போன்ற தீவிர பிரச்சினைகளை சந்திக்கின்றனர். இதற்கான ஒரு முக்கிய காரணம் பூசணியின் பெறுமதி சேர் உற்பத்திகள் போதாமை ஆகும். ஆகையால் புதிய பூசணிகளை பயன்படுத்தி புதிய பாணம், உடனடி பாணங்கள், சட்னி, இனிப்பு மற்றும் ரொட்டி, பிட்டு, பிரைட்ரைஸ், நூடில்ஸ், கொத்து போற்றவற்றில் இணைப்பதன் மூலம் புதிய பெறுமதி சேர் பொருட்கள் அறிமுகத்திற்கான தொழில்நுட்பங்களின் அபிவிருத்தி அனைத்து உணவு உற்பத்திகளினதும் உணர் பண்புகள் சோதனையில் அதிகளவில் ஏற்கப்பட்டது. இந்த அனைத்து உணவு உற்பத்திகளும் நாடு முழுவதிலும் சிறிய, நடுத்தர மற்றும் பெரியளவிலான ஹோட்டல், விடுதி, சிற்றுண்டிசாலை மற்றும் உணவகங்களில் அதிகளவில் விற்கப்பட்டது.

இவ் ஆய்வானது பெரும்பான்மையான வாழை வர்க்கங்களான புளி மற்றும் சீனியை பயன்படுத்தி வெற்றிட, தனி அறை நீரிழக்கச் செய்தல் மூலம் வாழை சிற்றுண்டி அபிவிருத்தி இதன் போசணை மதிப்பீடு, பெளதீக இரசாயனம் மற்றும் உணர் பண்புகளில் கவனம் செலுத்தப்பட்டது. அபிவிருத்தி செய்யப்பட்ட வாழை சிற்றுண்டியானது அறை வெப்ப நிலையில் இருமாதங்களுக்கு தரகெடுதல் இன்றி பாதுகாப்பாக களஞ்சியப்படுத்தலாம்.

இவ் ஆய்விற்கு பப்பாளியின் ரெட் லேடி வர்க்கம் பயன்படுத்தப்பட்டது. பழுத்த பழத்துண்டுகள் வெவ்வேறு செறிவுடைய சினி கரைசலில் கட்டுப்பாட்டுடன் அமிழ்த்தப்பட்டு வெற்றிட உலர்த்தியில் நீரிழக்கப்பட்டது. பின் சிற்றுண்டி அபிவிருத்தியானது சேமிப்பு தரத்திற்காக சோதனை செய்யப்பட்டது. தரவு மதிப்பீடு செய்யப்பட்டது.

இவ் ஆய்வானது காளான் இழை மற்றும் சான்விச் உள்ளீட்டுக்கு பொருத்தமாக பல்வேறு காளான்களை கண்டறிய மற்றும் பொருத்தமான காளான் வர்க்கத்தை பயன்படுத்துவதால், உற்பத்தி தரத்தை மேம்படுத்துவதற்காக செய்யப்பட்டது. உணர்ச்சி மதிப்பீடு மற்றும் நெருங்கிய மதிப்பீடு தரவு மூலம் ஒய்ஸ்டர் காளான் ஆனது காளான் இழைக்கு மற்றும் அப்லோன் காளான் காளான் நிரம்பலுக்கு உகந்த வர்க்கம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இரண்டையும் பரிந்துரைக்கப்பட்ட பொதியில், களஞ்சிய நிலையில் எவ்வித பெளதீக மற்றும் இரசாயன காரணி மாற்றமும் இன்றி இரு மாதங்கள் வரை சேமிக்கலாம்.

தூவல் உலர்த்தல் முறை மூலம் அரிசி பால், முருங்கை சாறு எதிர்ப்பாக்கி மற்றும் இயற்கை சுவையூட்டிகளைக் கொண்டு போசணைமிக்க அரிசிசார் பால் ஒரு மாற்றீடாக தயாரிக்கப்பட்டது. தூள் வடிவமானது AT 309 நெல் வகையை கொண்டு செய்யப்படுவதோடு பல்வேறு செறிவுடைய V/V முருங்கை சாறு (5,10 மற்றும் 15) பயன்படுத்தப்படும். உணர்திற தரவுகளின் படி 10% முருங்கை சாறுடைய கலவை அதிக விருப்பத்தையும் மற்றும் 10.04 ± 04% புரதம், 2.66 ± 0.05%, கொழுப்பையும் மற்றும் 3.24 ± 0.06%, சாம்பல் உள்ளடக்கத்தையும் கொண்டுள்ளது. 5% முருங்கைச் சாறு கொண்ட RMA உடன் ஒப்பிடும் போது புரத உள்ளடக்கம் குறிப்பிடத்தக்க அளவு அதிகமாகும். (P <0.05) அலுமினியம் பூசப்பட்ட பைகளில் அடைத்து 8 வாரம் அறை வெப்பநிலையில் அனைத்து RMA ஐ பொதிசெய்து சேமித்து வைப்பின் மொத்த சிறு தட்டு  எண்ணிக்கை, மதுவம் மற்றும் பூஞ்சணம் என்பன கண்டறியப்படவில்லை

தூவல் உலர்த்தல் முறை மூலம் அரிசி பால், புளிப்பு அன்னமுன்னா சதை மற்றும் எதிர்ப்பாக்கி என்பவற்றை பயன்படுத்தி உயர் போசணை மிக்க அரிசி சார் பால் மாற்றீட்டை அபிவிருத்தி செய்தல். தூள் தன்மையானது AT 309 அரிசி வர்க்கம் மற்றும் மாறுபட்ட செறிவுகளையுடைய (V / V)  புளிப்பு அன்னமுன்னா கூழ் (25,50 மற்றும் 75%) பயன்படுத்தி செய்தல். உணர்திற தரவில் 75% புளிப்பு அன்னமுன்னா சேர்க்கப்பட்ட தூள் அதிகளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டதோடு 6.06 ±08% புரதம், 0.29 ± 0.14% கொழுப்பு மற்றும் 1.56 ± 0.06% சாம்பல்  காணப்படுகின்றது. 25% அன்னமுன்னாகொண்ட RMN உடன் ஒப்பிடும் போது புரத உள்ளடக்கம் குறிப்பிடதக்களவு அதிகம் (P < 0.05). அலுமினியம் பூசப்பட்ட பைகளில் அடைத்து 8 வாரம் அறை வெப்ப நிலையில் அனைத்து RMNயை பொதிசெய்து  சேமித்து வைத்த போதும் மொத்த சிறு தட்டு எண்ணிக்கை, மதுவம் மற்றும் பூஞ்சணம் என்பன கண்டறியப்படவில்லை.

இவ் ஆய்வானது பெறுமதி சேர் வெதுப்பக உற்பத்தி உருவாக்கத்தின் கீழ் செய்யப்பட்டது. பர்கர் பன்னில் கோதுமை மாவிற்கு மேலதிகமாக பூசணி மா அல்லது பூசணி சதையை இணைத்தல் அடிப்படை உள்ளடக்கங்களாக கோதுமை மா, சீனி, மதுவம், பாண் மேம்படுத்தி, உப்பு, மாஜரின் மற்றும் பால் மா உடன் வேறுபட்ட அளவு பூசணி மா அல்லது கூழ் பயன்படுத்தப்பட்டது. இரு அளவு பூசணி கூழ் (15% – 25%) மற்றும் இரு அளவு பூசணி மா (10% – 20%) என்பன சோதிக்கப்பட்டது. 25% பூசணி கூழ் சேர்க்கப்பட்ட பர்கர் பன்னில் ஏற்றுக் கொள்ளப்பட்ட உணர்திறன் பண்புகளின் அதிக மொத்த கூட்டுத் தொகையையும் மற்றும் இழையமைப்பும், அதிக அளவான மொத்த கனியுப்பு மற்றும் புரதம் (P £ 0.05) காணப்பட்டது. இது தோற்றம், நிறம், மற்றும் சுவைக்கான அதிக மொத்த கூட்டுத்தொகையை கொண்டிருந்த்து. ஆனால் 25% பூசணி கூழ் சேர்க்கப்பட்ட பர்கர் பன்னின் போசணைப் பெறுமதி மற்றும் உணர்திறன் பண்புகளில் ஏற்றுக்கொள்ளல் குறிப்பிடத்தக்க அளவில் காணப்படவில்லை.

பொரித்த (1800C / 10mm) தேங்காய் எண்ணெய் ; கீற்றுகள் ; 2 ; 1 ) அல்லது உறையூட்டப்பட்ட (-180C – 48 hrs)  மரவள்ளி கீற்று உருவாக்கத்திற்கு வெவ்வேறு வர்க்கம் மற்றும் ஒரே முதிர்ச்சி நிலை உடைய ; கிரிகாவடி, ஸ்வர்னா, MU-51,CA-01 மற்றும் ஸ்வர்ணிமால மற்றும் ஐந்து மாறுபட்ட சிகிச்சைகளான அவித்தல் (5min), கொதிநீர் பிளான்சிங் (1000C / 2min), எண்ணெய் பிளான்சிங் (1600C / 10mm), அவித்தல் (5 min) + எண்ணைய் பிளான்சிங் (1600C / 30 sec), கொதிநீர் பிளான்சிங் (1000C / 2mm) + எண்ணெய் பிளான்சிங் (1600C / 30 sec) என்பன சோதனை செய்யப்பட்டன.

ஸ்வர்ணா மரவள்ளி வர்க்கமானது அவித்தல் + எண்ணெய் பிளான்சிங் செய்து பொறித்த கீற்றுக்கு மிக ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இருப்பதால் தேர்வு செய்யப்பட்ட போதும் உறைந்த கீற்றுக்கு சுவர் மரவள்ளி வர்க்கத்திற்கு கொதிநீர் பிளான்சிங் + எண்ணெய் பிளான்சிங் தெரிவு செய்யப்பட்டது. பொறிக்கப்பட்ட கீற்றுகள் காபோவைதரைற்று (61.48 ± 0.25%), கச்சா நார் (7.54 ± 0.82%), கொழுப்பு (23.34 ± 0.94%), புரதம் (0.23 ± 0.30%), சாம்பல் (1.14 ± 0.82%) மற்றும் ஈரப்பதன் (6.27 ± 0.32% என்பனவற்றை உள்ளடக்கியிருக்கும். உறையூட்டப்பட்ட கீற்றுகளில் காபோவைதரைற்று (29.51 ± 0.58%), கச்சாநார் (3.32 ± 0.77%), கொழுப்பு (6.27 ± 0.48%), புரதம் (0.47 ± 0.15%), சாம்பல் (1.06 ± 0.01%), மற்றும் ஈரப்பதன் (59.37 ± 0.61%) காணப்படும். தேக்கமடைந்த சயனைட் உள்ளடக்கமானது பொறித்த மற்றும் உறையூட்டப்பட்ட மரவள்ளி கீற்றுகளில் FAO வினால் பரிந்துரைக்கப்பட்ட உச்ச அளவை விட மிக குறைவு. குறைந்தது 2 மாதங்களுக்கு மதுவம் மற்றும் பூஞ்சை எண்ணிக்கை மற்றும் மொத்த சிறுதட்டு எண்ணிக்கை பாதுகாப்பான வீச்சில் இருத்தால் கீற்றுகள் நுண்ணங்கி பாதுகாப்பாக காணப்படும்.

ITI உதவியுடன் கொழுப்பமில தோற்றமைப்பு மதிப்பீடானது வெளியிடப்பட்ட மூன்று எள் வர்க்கங்களில் (உமா, மலீ மற்றும் MI03 ) நான்கு வெள்ளை எள் மற்றும் இரு கருப்பு எள்ளின் பிரதான சந்ததிகள் மதிப்பிடப்பட்டன. அனைத்து பௌதீக, பொதுவான உள்ளடக்கம் மற்றும் கொழுப்பமில தோற்றம் மதிப்பீடு செய்யப்பட்டது மற்றும் அங்கு சில குறிப்பிடதக்க மாற்றங்களானது ஆய்வு செய்யப்பட்ட வர்க்கங்கள் மற்றும் சந்ததிகளுக்கிடையில் காணப்பட்டது. சோதிக்கப்பட்ட அனைத்து மாதிரிகளும் உயர்ந்தளவில் (80% க்கு மேல்) பல் நிரம்பலடையாத கொழுப்பமிலத்தை பதிவு செய்தது. சோதனை செய்யப்பட்ட வெள்ளை எள் மாதிரிகள் உயரந்தளவு ஒலிரிக்கமில அளவை காட்டியது. எனினும் கருப்பு எள் உயர்ந்தளவு லினோலிக் அமிலத்தைக் காட்டியது.

இவ் ஆய்வின் நோக்கமானது. பெரிய வெங்காயத்தை பயன்படுத்தி பெறுமதி சேர் தயாரிப்புகளை அறிமுகப்படுத்தல். ஏனெனில் வெங்காய விலையானது  வருடாந்த உற்பத்தியினால் வருடாந்தம் ஏற்றதாழ்வடைகிறது. வெங்காய வளையமானது ஏனைய நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒரு சிற்றுணவாகும். அத்துடன், வெங்காய வளையமானது முக்கிய பொருளாக பெரிய வெங்காயம் மற்றும் கோதுமை மாவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. உணர்திற பண்பு மதிப்பீட்டுக்கமைய, 54 – 45 விகிதமானது சிறந்த சேர்மானமாகும், ஆய்வானது அங்கணுகொலபெலசவின் GLROD யினால் போசணை மதிப்பீடு மற்றும் களஞ்சிய கால கற்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆய்வின் கீழ் எதிர்கால நடவடிக்கைகளை முன்னோக்கி கொண்டு செல்ல ஆய்வு, உபகரணங்கள் மற்றும் இரசாயனங்கள் நுகர்வு செய்யப்பட்டன.

தர மதிப்பீடாக ஒன்பது சின்ன வெங்காயம் மற்றும் இரு பெரிய வெங்காயங்களின் காரத்தன்மையானது மதிப்பீடு செய்யப்பட்டது. சோதனை செய்யப்பட்ட மாதிரிகள் குறிப்பிடதக்க மாறுபாடுகளை மேற்படி தரங்களில், வெளிகாட்டின. சின்ன வெங்காயமானது 7-11 வரையான வீச்சிலும், பெரிய வெங்காயம் 4-7   வீச்சிலான பைருவிக் அமிலத்தையும் கொண்டிருந்து.

Xanthan gum மற்றும் guar gum என்பன பயனுள்ளவை மற்றும் கொழுப்பு குறைந்த வாழை சிப்ஸ் தயாரிப்பில் குறிப்பிடதக்க பெறு பேற்றை காட்டும்.