Tamil: HORDI Crop – Yard Long Bean

HORDI - LOGO

பயற்றை

Vigna unguiculata

பெபேசியா குடும்பத்தை சார்ந்தது

இலங்கையில் மிகவும் பிரபல்யமான ஒரு பயிர்

வெளியிடப்பட்ட வர்க்கங்கள்

காலநிலை தேவை / பயிர் செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்

தாழ் நாட்டு ஈரவலயம், இடை வலயம், உலர்  வலயம் என்பன பயிர் செய்கைக்கு உகந்தவை.

மண்

நல்ல நீர்வடிப்புள்ள மணல் இருவாட்டி மண் சிறந்தது. பொருத்தமான மண் பி.எச். 5.6 – 7 அதிக களி மண்ணுடனான நீர்வடிப்பு குறைந்தவை செய்கைக்கு பொருத்தாது.

விதை தேவை

புதர் வகை – 17-20 kg/ha

கொடி வகை – 16-20 kg/ha

நாற்றுமேடை முகாமைத்துவம்

நடுகையின் போது நேரடி விதைப்பு

ஈர வலயம் – பருவ மழையின் பின், உலர் வலயம் சிறு போகம் – மழை சார் செய்கையில் – மார்ச் / ஏப்ரல்

உலர் வலயம் – நீர் பாசனத்தின் கீழ் (சிறு போகம் ) -ஏப்ரல் /மே பெரும் போகம் -நவம்பர் இறுதி

நிலம் தயார் செய்தல்

15 – 20 செ.மீ ஆழத்திற்கு மண்ணை உழுது தூர்வையாக்க , மண்ணில் நீருள்ள போது அல்லது நீர்பாசனம் செய்தபின் பாத்தி அல்லது வரம்புகளை தயார் செய்தல். செய்கைக்கு பாத்தி  அமைக்காவிடின் குறிப்பாக பெரும் போகத்தில்  வடிகால் அமைத்து நீர்  தேங்குவதை தடுக்கவும்.

நடுகை செய்தல்

24 மணி நேரம் ஊறவைத்த பின் ஒரு குழியில் 3-4 விதையிடல்

விதைகளுக்கு நன்கு நீர்பாசனம் செய்தல்

வித்து முளைத்து 2 வாரங்களின் பின், இரு ஆரோக்கியமான நாற்றை விட்டு விட்டு மிகுதியை கவனமாக அகற்றல்

பழக்கப்படுத்தல்

கொடிகளுக்கு ஆதாரம் வழங்க 7 அடி கம்புகளை தயார் செய்தல். குறிப்பாக கொடி வகைக்கு, கொடிகளை கம்பிற்கு பழக்கப்படுத்தல்

ஒரு குழிக்கு ஒரு கம்பு அல்லது கம்புகளை ஆங்காங்கே நடுகை செய்து செங்குத்தாக கயிறுகளை இழுத்து கொடிகளை கயிற்றுக்கு பழக்கப்படுத்த  முடியும்

நடுகை இடைவெளி

புதர் வகை – தாவரங்களுக்கு இடையில் 20 செ.மீ , வரிகளுக்கிடையில் 60-75 செ.மீ

கொடி வகை – தாவரங்களுக்கு இடையில் 30 செ.மீ , வரிகளுக்கிடையில் 90 செ.மீ

பசளையிடல்

மண்ணுக்கு 10t/ha நல்ல உக்கிய சேதன பசளையை இட்டு நன்கு கலக்கவும். மேலதிகமாக, பரிந்துரைக்கப்பட்ட இரசாயன பசளையை இடவும். நடுகை செய்ய இரு நாட்களுக்கு முன் அடிக்கட்டு பசளையை இடவும்.

பசளை இடவேண்டிய நேரம்யூரியா kg/haமுச்சுபர் பொசுபேற்று kg/haமியூரைட் பொட்டாசு kg/ha
அடிக்கட்டு பசளை (நடுகை செய்ய 2 நாட்களுக்கு முன்)

35

130

35

மேற்கட்டு பசளை (நடுகை செய்து 2 மாதத்தில்

55

35

நீர் வழங்கல்

ஆரம்ப கட்டத்தில் வாரத்தில் 4 நாட்கள் நீர் வழங்கவும். பின்னர் வாரத்தில் ஒரு தடவை நீர் வழங்கவும். மண் ஈரலிப்பு அதிகமாக இருப்பின் வேர் அழுகல் நோய் ஏற்படலாம்.

களை கட்டுப்பாடு

நடுகை செய்து 2 மற்றும் 4 வாரங்களின் பின் களை கட்டுப்பாடு செய்ய பரிந்துரைக்கப்படுகிறது.

Pest Management

நோய் முகாமைத்துவும்

நோயாக்கி காரணி : Fusarium spp., Pythium spp., Sclerotium spp

அறிகுறிகள்

  • தாவரத்தின் அடி கபிலமாகி வெளியே அழுகலடையும்
  • Sclerotium fungus இனால் தொற்று ஏற்படுமாயின் தாவரத்தின் அடியில் வெள்ளை பூஞ்சணமான mycelium ஐ அவதானிக்க முடியும்
  • களத்தில் வாடிய திட்டுகளை அவதானிக்கலாம்

முகாமைத்துவம்

  • வடிகால் மேம்பாடு
  • அடிப்பகுதிக்கு பங்கசு நாசினி தெளித்தல்
  • பயிர் சுழற்சி
  • களத்திலிருந்து தொற்றுக்குள்ளான தாவர பாகங்களை அகற்றி அழித்தல்
 

நோயாக்கி காரணி : macrophomina phaseolina

அறிகுறிகள்

  • ஆரம்ப அறிகுறிகளாக தண்டின் அடிப்பகுதியில் சாம்பல் சார் கபில நிற பள்ளமான காய்ந்த புள்ளிகள் காணப்படும்.
  • இது தாவர உச்சி வரை பரவலாம். தாவரம் வாடிய பின் இறக்கும்
  • நோயுள்ள தாவர இலைகள் முதலில் உதிர்ந்து பின் இறக்கும்

முகாமைத்துவம்

  • நடுகை செய்து 04 வாரத்தின் பின் Tebuconazole ன் 250 கிராம் IEW பங்கசு நாசினியை தெளித்தல்

அறுவடை

ஒவ்வொரு 2 நாளுக்கும் ஒரு தடவை புதர்  மற்றும் கொடி வகையை அறுவடை செய்யலாம். புதர் வகை 7-​12 தடவை மற்றும் கொடி வகை 15-16 தடவை அறுவடை செய்யலாம்.

விளைச்சல்

பொலோன் மற்றும் ஹவாரிமே – 12mt/ha

புஷிடா (உள்ளூர்) 10mt/ha

புதர் போலோன்மே – 9mt/ha

கன்னொறுவை ஹவரி – 35mt/ha

கன்னொறுவை ஏ9 – 21 -24 mt/ha