- முகவரி: த.பெ. இல. 11, கண்ணொருவ, பேராதெனிய, இலங்கை.
- மின்னஞ்சல் : director.hordi@doa.gov.lk
- தொலைபேசி :(+94) 81-2388011-12-13
- தொலைநகல்:(+94) 81-2388234
தும்ப பாகல்
Momordica dioica ex Roxb.Willd
தும்ப பாகல் ஆனது மிகவும் கேள்விமிக்க மரக்கறி. இது இலங்கையில் பிரதானமாக தாழ் நில சமதரை நிலங்களில் வளர்கின்றன. அத்துடன் இது பாகல் குடும்பத்தை சார்ந்த கொடி வகையாகும். இது கசப்புச்சுவை அற்றது மற்றும் நீரிழிவு, வயிறு சார் நோய்களுக்கு மருத்துவ பண்பு மிக்க ஒர் உணவாகும்.
வெளியிடப்பட்டுள்ள வர்க்கங்கள்
இது காயின் வடிவத்தை பொருத்து பல் வேறு வகை தாவரங்கள் உள்ளன. நீள் வட்டம், உருளை வடிவம் மற்றும் கோளவடிவம்
பெண் தாவர வர்க்கங்கள் – தும்பிக்க / கோலிக்க / வைசல் / கேசரா / சந்து
ஆண் தாவர வர்க்கங்கள் – பரகும், விஷ்மா
கலப்பினம் – பெண் சந்து, ஆண் – விஷ்மா
காலநிலைத் தேவைகள் / செய்கைக்கு பொருத்தமான பிரதேசங்கள்
செய்கைக்கு தாழ்நில உலர் வலயம் மிகப் பொருத்தமானது.
மண்
இருவாட்டி அற்ற செங்கபில மண்ணில் நன்கு வளரும். அதிக சேத பொருள் கொண்ட நீர் வழிந்தோடக்கூடிய மண்ணில் செழித்து வளரும்.
வித்து தேவை
ஒரு ஹெக்டேயருக்கு 6 : 1 எனும் விகிதத்தில் ஆரோக்கிமான 6000 பெண் நாற்றுகள் மற்றும் 1000 ஆண் நாற்றுகள் தேவை. காய்க்கு ஆரோக்கியமான 6000 பெண் நாற்றுகள் மற்றும் 600 ஆண் நாற்றுகள் 10:1 எனும் விகிதத்தில் காய்க்கும் மற்றும் பூக்கும் கொடிகள் தேவை
நிலப்பண்படுத்தல்
மண்ணை 20 – 30 cm ஆழத்திற்கு பிரட்டல் மற்றும மண் கற்களை உடைத்தல். 30 x 30 x 30 cm ஆழமான குழிகளை சேதனப் பொருள் மற்றும் மேல் மண் கொண்டு நிரப்பவும்.
செய்கைக் காலம்
பெரும் போகத்தின் செப்டெம்பர், ஒக்டோபர் மற்றும் சிறு போகத்தில் மார்ச், ஏப்ரல் மாதத்தில் வித்திட பரிந்துரைக்கப்படுகின்றது. மேலதிக நீர் காணப்படுமிடத்து, பெரும் போகத்தின் பலத்த மழையின் பின் டிசம்பர் நடுப்பகுதியல் பயிரிட பரிந்துரைக்கப்படுகின்றது. நீர் காணப்படுமாயின் வருடத்தின் எக் காலப் பகுதியிலும் நடுகை செய்யலாம்.
நடுகை பொருள் தயாரித்தல்
தண்டு துண்டங்களில் இருந்து இலகுவாக நாற்றுகளை பெற்றுக் கொள்ளலாம். 2-4 கணுவிடைகளை கொண்ட தண்டு துண்டங்கள் நடுகைக்கு பொருத்தமானவை.
கிழங்கு மூலம் இனப்பெருக்கம் செய்கையில், முதல் பருவத்தில் இருந்து 4 மாத கால உறங்கு நிலையின் பின்னான சில கண்களுடைய கிழங்குகள் பொருத்தமானவை. அக் கிழங்குகளை 40 கிராம் துண்டுகளாக வெட்டி மணல் நாற்று மேடையில் நடுகை செய்யவும். வித்திடுவதாயின், முதல் போகத்தில் இருந்து பெறப்பட்ட வித்துகளை சாதாரண சூழ் நிலையின் கீழ் 9 மாதம் களஞ்சியப்படுத்தல் மற்றும் 4 விதைகளை ஒரு இடத்தில் நடுகை செய்து . 6:1 – 10:1 எனும் அளவீட்டில் ஏனைய கன்றுகளை அகற்றல் பரிந்துரைக்கப்பட்டது. தண்டு துண்ட பாவனையில் கலப்பு தாவரத்திற்கு உகந்தது.
நடுகை இடைவெளி
வரிகளுக்கிடையில் 1.5 மீற்றர் நாற்றுகளுக்கு இடையில் 1.0 மீற்றர் நடுகை இடைவெளி தேவை
பசளை
பசளையிடல் | யூரியா kg/ha | முச்சுபர் பொசுபேற் kg/ha | மியூரைட் பொட்டாசு kg/ha |
அடிக்கட்டு பசளை | 75 | 200 | 65 |
கொடிகளை கத்தரித்த பின் (3 வாரம்) | 75 | 200 | 65 |
4-8 வாரங்களில் | 75 | – | 65 |
குறிப்பு – மண் சோதனையின் பின் பொஸ்பரஸ் மற்றும் பொட்டாசியத்தை அடிக்கட்டு பசளையாக இடுவது சிறந்தது.
நீர் வழங்கல்
செய்கைக்கு பொருத்தமான மண் ஈரப்பதனை பேண போதுமான நீர் வழங்க வேண்டும்
களைக்கட்டுப்பாடு
இனம் வயதில் நாற்றுகளுக்கு அருகிலுள்ள களைகளை பிடுங்குதல் மற்றும் அடியை பாதிக்காது அகற்றுதல்
பீடை முகாமைத்துவம்
எபிலக்னா புழு
நோய் முகாமைத்துவம்
Root rot can occur at any growth stage. This is a disease caused by fungi or bacteria. It is important to maintain good drainage in the field and remove diseased vines and apply a fungicide (thiophanate methyl 85% +, thiram 35% or Carbendazim) to thoroughly wet the soil around the vines to prevent spread.
Yellow powdery spots appear on the leaves. Later these spots turn to brown color. Gray whitish fungal spores are produced on the underside of leaves. Leaves which infected by diseases, become dry up. Dissolve 12 grams of Mancozeb 64% + , Metalaxyl 18% (Ridomil) fungicide in 10 liters of water and apply to the underside of the leaves.
அறுவடை
- வித்துகளில் இருந்து முளைத்த தாவரங்கள் வித்திடப்பட்டு 3 மாதங்களின் பின் பூக்கும்.
- தண்டு துண்டங்களில் இருந்து பெறப்பட்ட தாவரங்கள் நடுகை செய்து 2 மாதங்களின் பின் பூக்கும்
விளைச்சல்
ஒரு பெண் கொடியில் இருந்து ஒரு வருடத்திற்கு 6.0 – 8.0 கிலோ கிராம் காய்கள் பெறப்படும். பூக்கள் பி.ப 7.00 முதல் அடுத்த நாள் மு.ப. 8.00 மணி வரை பூக்கும்.